அரிசிமாவில் செய்யும் சில கரகரப்புகள் — Rice Flour Snacks
ஓகஸ்ட் 14, 2009 at 9:51 முப 5 பின்னூட்டங்கள்
பச்சரிசி ஆறு பங்கும் வெள்ளை உளுத்தம் பருப்பு ஒரு பங்கும் சேர்த்துக் கலந்து மெஷினில் கொடுத்து மெல்லிய மாவாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் தயார் செய்யும் சிலவகைகளைப் பார்க்கலாம்.
தேன் குழல்———-வேண்டியவைகள்
தயார் செயதிருக்கும் மாவு இரண்டுகப்,–ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒருடேபிள் ஸபூன் வெண்ணெய்,—-ஒரு டீஸ்பூன்— வெள்ளை எள், திட்டமாக உப்புப் பொடி , சிறிது பெருங்காயப்பொடி–
பொரித்தெடுக்க எண்ணெய்—–முள்ளில்லாத தேன்குழல் அச்சு
செய்முறை——–உப்பு பெருங்காயம் இரண்டையும் சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும். மாவுடன் சுத்தம் செய்த எள்,சீரகம், சற்று தளர்வு செயத வெண்ணெய்,இவைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வடிக்கட்டிய உப்பு பெருங்காய நீரைச் சேர்த்து மேலும் வேண்டிய தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மாவைக் கெட்டியான பதத்தில் பீசையவும். குழலில் போட்டு பிழிய எவ்வளவு தளர வேண்டுமோ அந்த அளவிற்கு ஜலம்தெளித்து தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அச்சினுள்ளும் சிறிது எண்ணெய்தடவி மாவைஇட்டு காயும் எண்ணெயில் தேன் குழல்களைப் பிழிந்து திருப்பி விட்டு பொன்நிறமாக எடுத்து வைக்கவும். மேலும் இப்படியே தயாரிக்கவும். வடிக்கட்டியில் எண்ணெய் உறிஞ்சும் டிஷ்யூ பேப்பரை உபயோகிக்கவும். கரகரப்பாக இருக்கும். அடுத்து வேறு ஒன்றைப் பார்க்கலாம். இப்போதைக்கு தேன்குழல் ரெடி.

தேன் குழல்
Entry filed under: அரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
padmavathy sharma s. | 2:47 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
hai mami simply superb your recipe of mullumurukku and kovil vadai. i will try and tell u soon.
2.
padmavathy sharma s. | 2:49 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
namaskarams to mami naan ungal adhirasam recipe parthen. simply tempting i will try this also for deepavali. thanks.
3.
chollukireen | 11:51 முப இல் ஓகஸ்ட் 27, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
படங்கள் போடத்தெரியாத காலத்தில் எழுதியது. இம்மாதிரி தேன்குழல் மிகவும் நன்றாக இருக்கும். மிஷினில் அரைத்து, எப்போது? எங்கு என்பீர்கள். அன்புடன்
4.
ஸ்ரீராம் | 12:20 முப இல் ஓகஸ்ட் 29, 2021
தீபாவளி சமயத்தில்தான் இது மாதிரி பலகாரங்கள் செய்யத் தோன்றுகின்றன. மற்ற சமயங்களில் நினைவுக்கு வருவதில்லை!
5.
chollukireen | 12:02 பிப இல் ஓகஸ்ட் 29, 2021
கோகுலாஷ்டமி நாளைக்கு. எண்ணெய்ப்புகை வேண்டுமே. அதனால் மீள்பதிவு. நீ்ங்கள் கூறுவது உண்மை. நன்றி. அன்புடன்