கொட்டு ரஸம்.
ஜனவரி 30, 2010 at 11:15 முப 3 பின்னூட்டங்கள்
இதுவும் ஒரு அவஸர ரஸம்தான்
வேண்டியவை—-புளி—-ஒரு பெரிய நெல்லிக்காயளவு.
பழுத்த தக்காளி -மூன்று
ரஸப்பொடி—ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு–மூன்று டீஸ்பூன்- சிறிது ஜலத்தில் ஊறவைக்கவும்.
ருசிக்கு உப்பு
தாளிக்க—-கடுகு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் நெய்
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறி வேப்பிலை.
செய்முறை—–புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்து
சாற்றை எடுக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, ரஸப்பொடி,ஊறின
பருப்பையும் சேர்த்து புளி ஜலத்தைக், குறைவான
தீயில் கொதிக்க விடவும்.
ரஸம் சுண்டியதும், மூன்று கப் ஜலம் சேர்த்துக்
கொதிக்க வைத்து இறக்கி நெய்யில் கடுகு,
, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை
சேர்த்து உபயோகிக்கவும்.
Entry filed under: ரஸம் வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Jawahar | 10:07 முப இல் பிப்ரவரி 2, 2010
நான் ரசம் வைக்கிற போதெல்லாம் வாசனையும், சுவையும் ரசமாக இருக்க பார்வைக்கு மட்டும் குழம்பு போல ஆகி விடுகிறதே, இது எதனால், புளி ஜாஸ்தி போட்டு விடுகிறேனா அல்லது தண்ணீர் குறைவா?
http://kgjawarlal.wordpress.com
2.
chollukireen | 11:34 முப இல் பிப்ரவரி 2, 2010
புளி ஜாஸ்தி ஆனால் குழம்பாக ஆகி விடாது. ரஸக் கலவையில் பருப்பைச்
சேர்க்கும் போது,பருப்பில் ஜலம் விட்டுக் கரைத்து அடி தங்கும் பருப்பைப் பிழிந்து எடுத்து விட்டு சேர்க்கவும். ரஸப்பொடியைக் குறைத்து ஒரு முழு மிளகாயைத் தேவைக்கேறப தாளிதத்திலும் சேர்க்கலாம்.
பிழிந்த பருப்பை கூட்டிலோ,அல்லது சாம்பாரிலோ சேர்த்து விடலாம்.
வாஸனையும் சுவையும் ரஸமாக இருக்க ரஸமும் ரஸமாக இருக்கும்.
இரண்டு ஸ்பூன் பச்சை ஜலத்தை தெளித்து, இறக்கினவுடன் மூடிவைப்பது கூட
ஒரு டிப்ஸ்.
3.
chollukireen | 11:46 முப இல் பிப்ரவரி 2, 2010
கொட்டு ரஸம் நீர்க்கவே இருக்கும். உங்கள் ரஸம் சுவையாக இருப்பதால்
திக்நெஸ் குறைத்தாலே போதும்.