புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.
மார்ச் 16, 2010 at 1:29 பிப 3 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்–
கெட்டியாக உருட்டிய 2 எலுமிச்சை அளவு புளியை அரைகப்
தண்ணீரில் ஊற வைக்கவும்.
வறுப்பதற்குச் சாமான்கள்
தனியா—-2 டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், மிளகாய் 4 ,
இவைகளைத் தனியாக வெறும் வாணலியில்வறுத்துக் கொள்ளவும்.
கடுகு கால் டீஸ்பூன், வெந்தயம் அரைடீஸ்பூன், சீரகம்கால்டீஸ்பூன்-
இவைகளைத் தனியாக கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் சிவப்பாகவறுத்துக் கொள்ளவும்.
எள் இரண்டு டேபிள்ஸ்பூன் கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தாளிக்க நல்லெண்ணெய் 4 , 5,—-டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1,இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய இஞ்சித் துண்டுகள் 1 டேபிள்ஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் —1துண்டு
மஞ்சள்பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய் 4
கடலைப் பருப்பு——4 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை——4 டேபிள்ஸ்பூன்
ஒருகப்——கறிவேப்பிலை
ருசிக்கு உப்பு
வெல்லப்பொடி—–3டீஸ்பூன்.
செய்முறை—–புளியைக் கரைத்து ஒன்றரைகப் அளவிற்கு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவைகளை ஆற வைத்து எள்ளைத்தவிர்த்துமீதியை
ஒன்றாக மிக்ஸியிலிட்டு பொடித்துக் கொள்ளவும்.
எள்ளைத் தனியாக பொடிக்கவும்.
அடி கனமான அலுமினிய வாணலியிலோ அல்லது
நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெயைக் காய வைத்து
காம்பு நீக்கிய முழு மிளகாயைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
தீயைக் குறைத்து ,கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு பருப்பு பெருங்காயம்
வகைகளைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலைமஞ்சள்சேர்த்து
கீழிறக்கி நிதானமாக புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, வெல்லப் பொடி சேர்த்து நிதான தீயில்
கொதிக்க வைக்கவும்.
அடிக்கடி கிளறி ஒரு தட்டினால் சிறிது திறந்தநிலையில்
மூடித் திறக்கவும்.
புளிக் கறைசல் வற்றி ஹல்வா பதத்திற்கு திரண்டு வரும்போது
எண்ணெய் பிரிந்து வரும்.
பொடித்து வைத்திருக்கும் கலவைப் பொடியைப் போட்டுக்
கிளறவும்
சற்றுத் தளர்ந்த துவையல் பதத்தில் கீழிறக்கவும்.
ஆறியபின் பொடித்த எள்ளைச் சேர்க்கவும்.
முதல்த் தரமான புளிக் காச்சல் ரெடி.
சாமான்கள் வறுபடுவது சரியாக இருக்க வேண்டும்.
எத்தனை நாட்கள் வைத்தாலும் கெடாது.
அடுத்து புளியஞ் சாதம்தயார் செய்வோம்.
உதிர் உதிராக வடித்த சாதம் 4—5-,கப் எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.
செய்து வைத்திருக்கும் புளிக் காச்சலில் ஒரு கரண்டி விட்டு
சாதத்தை நன்றாகக் கலக்கவும்.
ருசி பார்த்து வேண்டிய அளவிற்கு புளிக் காச்சலைச் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.
உப்பு காரமெல்லாம் வேண்டிய அளவு பிறகும் சேர்க்கலாம்.
புளிக்காச்சல் அதிகம் செய்திருக்கிரோம். வைத்திருந்து
மற்றும் வேறொறு நாள் புளியஞ் சாதம் செய்யுங்கள்
எண்ணெய் எல்லாம் பார்த்து விடுங்கள். புளிக் காச்சலை,
அதிகம் செய்து பாட்டலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எனக்கு அதிகம் செய்தே பழக்கம். உங்களுக்காக இன்று குறைவாகச்
செய்து பார்த்து விட்டே எழுதியிருக்கிரேன்.செய்து பாருங்கள்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chollukireen | 11:41 முப இல் ஜனவரி 12, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தப் பதிவும் கனுப்பண்டிகையன்று புளியஞ்சாதம் தயாரிக்க உதவியாக இருக்கும். படம் அப்போதெல்லாம் போடத் தெரியாது. இப்போ தேடணும். செய்து பார்த்து நீங்கள் போட்டு விடுங்கள். திரும்பவும் பார்க்கலாம். மகிழுங்கள். அன்புடன்
2.
adhi venkat | 5:59 முப இல் ஜனவரி 16, 2014
சுவையான புளியஞ்சாதம்….உங்கள் கைப்பக்குவத்தில்…
நேற்று கல்கண்டு சாதம், புளியஞ்சாதம், தயிர்சாதம்… அப்பளம் வடாமுடன்…செய்தேன்…
3.
chollukireench | 12:04 பிப இல் ஜனவரி 17, 2014
மிக்க ஸந்தோஷம். சமையல்களிலேயே பண்டிகைகளைக் காண முடிகிரது. நன்றி அன்புடன்