சேனைக்கிழங்கு வறுவல்.
மார்ச் 26, 2010 at 10:43 முப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
சேனைக் கிழங்கு—–கால் கிலோ
வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
மஞ்சள்பொடி—–கால் டீஸ்பூன்
கடலைமாவு–2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு உப்பு, நெய் ஒரு ஸ்பூன்
செய்முறை—-சேனையை நன்றாகத் தண்ணீரில் அலம்பி மண்
போக சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிய மெல்லிய சதுரங்களாக
நறுக்கிக் கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரை விட்டு 5 நிமிஷம் ஊற வைத்துத்
துண்டங்களை வடிக்கட்டிக் கொள்ளவும்.
துண்டங்களை, உப்பு, நெய், ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பிசறி
சிறிது நேரம் வைக்கவும். துண்டங்களில்காரம மாவுகள், மஞ்சள் பொடியென வேண்டியவைகளைத் தூவிக்
கலந்து உதிர்த்து காயும் எணெணெயில் பரவலாகப் போட்டு
கரகரவென்ற பக்குவத்தில் வறுத்து எடுக்கவும். இதுவும் ருசியான
வறுவல்தான்.
Entry filed under: வறுவல்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
highschoolerz | 9:13 முப இல் ஓகஸ்ட் 10, 2012
உங்கள் சமையல் குறிப்பினை இங்கே http://nilaachchoru.blogspot.com/2012/08/3.html பகிர்ந்திருக்கிறேன், நன்றி!
2.
chollukireen | 6:59 முப இல் ஓகஸ்ட் 11, 2012
நிலாச் சாப்பாடு சாப்பிட நானும் வருகிறேன். என்னுடைய சித்ரான்னங்களையும் பார்க்கவும். இம்மாதிறி மற்றவர்கள் பதிவுகளை
விரும்பிப் போடுவது பாராட்டத்தக்க விஷயம். அன்புடன் நன்றியும் சொல்லுகிறேன்