எலுமிச்சம்பழ ஊறுகாய்
ஏப்ரல் 26, 2010 at 11:14 முப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்—நல்ல பழுத்த பழமாக எலுமிச்சை—8
இஞ்சி—-சிறிய துண்டங்கள் 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்—-3
மஞ்சள் பொடி —-ஒண்ணரை டீஸ்பூன்
பெருங்காயம்—-பொடித்தது 1டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி—-1 டீஸ்பூன்
தேவையான உப்பு
மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்
நல்லெண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
செய்முறை——6 பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு
சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடவும்.
மீதி 2 பழங்களை நறுக்கி அதன் சாற்றைப் பிழிந்து துண்டங்களுடன்
சேர்த்து 2 நாட்கள் ஊற வைக்கவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு
இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து
எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு
வாரம் கழித்து உபயோகிக்கவும். காரம் சேர்ப்பதற்கு முன்
ஒரு நாள் வெய்யிலில் சற்று வைத்து்ம் எடுக்கலாம். அதிகம்
செய்வதானால் மிகவும் நல்லது. ஊறுகாய்கள் எடுக்கும் போது
நன்றாக உலர்ந்த ஈரப்பசை இல்லாத கரண்டிகளை உபயோகிக்க
வேண்டும். ஊற ஊறத்தான் ஊறுகாய்கள் ருசியாக இருக்கும்.
Entry filed under: ஊறுகாய் வகைகள். Tags: ஊறுகாய் வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
yathavan nambi/puthuvai velou | 9:21 பிப இல் ஜூன் 25, 2015
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
http://www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
2.
chollukireen | 5:23 முப இல் ஜூன் 26, 2015
மிக்க ஸந்தோஷம் உங்களின் மடலுக்கு. வாழ்த்துகளுக்கும்,பாராட்டிற்கும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும். நீங்கள் என்ன புதுவையைச் சேர்ந்தவரா? அடிக்கடி வந்து ஊக்கம் கொடுங்கள். அன்புடன்