சுண்டைக்காய் வற்றல் குழம்பு
ஓகஸ்ட் 12, 2010 at 7:54 பிப 3 பின்னூட்டங்கள்
புளி—1 எலுமிச்சை அளவு
சுண்டை வற்றல்—-15
வறுக்க—நல்லெண்ணெய்—4 டேபில் ஸ்பூன்
வறுத்தரைக்க சாமான்கள்—
மிளகாய் வற்றல்—3
மிளகு—-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1டீஸ்பூன், தனியா–2 டீஸ்பூன்
அரிசி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–2 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட-
1 டீஸ்பூன் கடுகு,
அரை டீஸ்பூன்—-வெந்தயம்
பெருங்காயம்—சிறிது
வேர்க்கடலை—–2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
ருசிக்கு—உப்பு, துளி வெல்லம்
மஞ்சள் பொடி—அரைடீஸ்பூன்
செய்முறை—–புளியை ஊற வைத்து, 2, 3 கப் அளவிற்கு
சாறு எடுத்துக் கொள்ளவும
சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்தவைகளை சிவக்க
வறுத்து , தேங்காயையும் போட்டுப் பிறட்டி ஆறியவுடன்
மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்
கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்
பெருங்காயம், நிலக்கடலை, தாளித்து, கறிவேப்பிலையை
வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, வெல்லம் மஞ்சள் சேர்த்து புளிவாஸனை போனவுடன்
அரைத்த விழுதை திட்டமாகக் கரைத்துவிட்டுக் கொதிக்க விடவும்.
மிகுதி எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை நிதானமான
தீயில் நன்றாக வறுத்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி
.இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய்
அதிகம் சேர்க்கவும்.
Entry filed under: குழம்பு வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Krishnaswami S | 3:56 முப இல் செப்ரெம்பர் 25, 2015
தங்கள் சமையல் செயல்முறை விளக்கங்கள் மிகவும் அருமை. தாங்கள் கம்ப்யூடரில் ஏற்றுவதற்கு இண்டிக் என்னும் மென்பொருளை செயலி யாகப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம். என்னுடைய இந்த குறிப்பு மேற்படி இண்டிக் என்னும் மென்பொருளை செயலியாக பயன்படுத்தி எழுதப் பட்டதுதான்.
2.
chollukireen | 1:31 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
எனக்கு 84 வயது ஆகப்போறது. ஆறு வருஷங்களுக்கு முன்னர் ஏதோ யூனி கோட் முறை என்று தமிழே தெரியாத என் பிள்ளை ஜெனிவாவில் தமிழ் எழுத்துக்களை கீபோர்டில் ஒட்டிக் கொடுத்தான். கம்யுட்டரைப்பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. ஏதோ உடும்புப் பிடியாக அதைத் தானாகவே பழக்கப் படுத்திக் கொண்டு எழுதி வருகிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் கற்றுக்கொண்டால் நன்றாகவே இருக்கும். புரிகிறது.
வயது இடம் கொடுப்பதில்லை. உங்களுடயது பிரிண்டே அழகாக இருக்கிறது. நன்றி உங்களுக்கு. வாருங்கள் அடிக்கடி. பின்னூட்டம் கொடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீட்டில் தமிழ் எழுதிப் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை. உங்கள் அக்கரைக்கு திரும்பவும் ஒரு முறை நன்றி. அன்புடன்
3.
chollukireen | 1:33 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
சமையல் செய்முறை விளக்கங்கள் அருமை என்று எழுதியுள்ளீர்கள். நன்றியும்,ஸந்தோஷமும். அன்புடன்