வாங்கி பாத்
செப்ரெம்பர் 14, 2010 at 1:26 பிப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்——
அரிசி மெல்லியவகை—-1கப்
சாம்பார் வெங்காயம் உறித்து நறுக்கியது—முக்கால் கப்
சிறியவகை பிஞ்சு குண்டு கத்தரிக்காய்—-6
தக்காளிப் பழம்—1
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
கறிப்பொடி—-3 டீஸ்பூன்
கொப்பறைத் துருவல்–3 டீஸ்பூன்
இஞ்சித் துருவல்—-அரை டீஸ்பூன்
கடுகு—அரைடீஸ்பூன்
முந்திரி–7,8
டோபூ அல்லது, பனீர் துண்டுகள்—15
நறுக்கிய கொத்தமல்லி இலைகள்–சிறிது
நெய்—1டீஸ்பூன்
விருப்பத்திற்கிணங்க காப்ஸிகம்–1
பச்சைப் பட்டாணி——கால்கப்
ருசிக்கு உப்பு, நிறத்துக்குத் துளி மஞ்சள் பொடி,வாஸனைக்கு4கிராம்பு
செய்முறை—-அரிசியைக் களைந்து உதிர் உதிரான சாதமாகச்
சமைத்து தாம்பாளத்தில் கொட்டி ஆற விடவும்.
கத்தரிக்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து தண்ணீரில்
அலம்பி வடிய வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க
விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, தக்காளி சேர்த்து பின்னும்
வதக்கவும். பட்டாணியைச் சேர்க்கவும்
நறுக்கிய கத்தரிக்காய், காப்ஸிகம், சேர்த்து நிதானமான தீயில்
உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய காயுடன் பனீர்த் துண்டங்களையும் சேர்த்து
வதக்கி, கறிப்பொடி தூவி இறக்கவும்.
நெய்யில் ஒடித்த முந்திரியை வறுத்து கிராம்பையும் சேர்க்கவும்.
யாவற்றையும் சாதத்தில் சேர்த்து உதிர்,உதிராகக் கலக்கவும்.
கொப்பறைத் துறுவல், கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
காய் அதிக மானால் எண்ணெய்,சற்று அதிகம் சேர்க்கவும்.
பொடி வகைகள் குறிப்பில் கறிப்பொடி செய்யும் விதம்
கொடுக்கப்பட்டு இருக்கிரது.
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed