மணத்தக்காளிவற்றல் குழம்பு
செப்ரெம்பர் 19, 2010 at 2:52 பிப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்—
மணத்தக்காளி வற்றல் —–2 டேபிள்ஸ்பூன்
புளி—-1எலுமிச்சை அளவு
பொறித்த உளுந்து அப்பளாம்—-2
ஸாம்பார்பொடி—–4 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம்—–ஒவ்வொரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு——1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை—–2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—-அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
துளி வெல்லம்
ருசிக்கு உப்பு
அரிசிமாவு—2 டீஸ்பூன்
கறிவேப்பிலை—சிறிது
செய்முறை—–புளியை ஊறவைத்து,3கப் அளவிற்கு கறைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயபருப்பு வகைகளைத் தாளித்து வற்றலையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
ஸாம்பார்ப் பொடியையும் சேர்த்து ஒரு பிரட்டல்
பிரட்டி கறிவேப்பிலையையும், புளித் தண்ணீரையும்
சேர்க்கவும்.
அப்பளாத்தையும் துண்டுகளாக்கி, வேண்டிய உப்பையும்
சேர்த்து குழம்பில் சேர்க்கவும்.
வெல்லம் பெருங்காயம் சேர்த்து நிதான தீயில் நன்றாகக்
கொதிக்க விடவும்.
குழம்பு குறைந்து வரும்போது அரிசிமாவைச் சிறிது
ஜலம் சேர்த்துக் கரைத்து விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சுவையான குழம்பு இது. பழம்புளியில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். காரம் கூட்ட தாளிப்பில்
மிளகாய் சேர்க்கவும். கத்தரி, அவரை, சுக்கங்காய்
,பாகற்காய், வற்றல்களையும் இதே முறையில்
சேர்த்தும் செய்யலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed