ஜெவ்வரிசி கிச்சடி
ஒக்ரோபர் 4, 2010 at 1:11 பிப 11 பின்னூட்டங்கள்
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.
Entry filed under: டிபன் வகைகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chollukireen | 11:16 முப இல் ஏப்ரல் 29, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
உங்கள் பார்வைக்கு ஜெவ்வரிசிக் கிச்சடி பத்து வருஷங்களுக்கு முன்னர் பிரசுரித்ததைக் கொண்டுவந்து இருக்கிரேன். உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள். அன்புடன்
2.
ஸ்ரீராம். | 11:52 முப இல் ஏப்ரல் 29, 2021
ஜவ்வரிசி மோர்க்கூழ் செய்வதுண்டு. இதுமாதிரி செய்ததில்லை.
3.
chollukireen | 12:02 பிப இல் ஏப்ரல் 29, 2021
இது ஒரு ஜெயின் முறை. சற்று மாறுதலாய் எங்கள் பிளாகிலும் இம்மாதி குறிப்பு வந்திருக்கிறது. மோர்க்கூழ் அதுவும் ருசியாகவே இருக்கும். நன்றி. அன்புடன்
4.
நெல்லைத்தமிழன் | 5:27 முப இல் ஏப்ரல் 30, 2021
இன்று என்ன செய்ய என்று யோசனையா இருக்கு. இட்லி புழுங்கரிசி ஆர்டர் செய்தது இன்னும் டெலிவரி செய்யலை. வெளியில் செல்ல தயக்கமா இருக்கு. (பு.அரிசி இருந்தால், அடைக்கு அரைத்திருப்பேன்). ஜவ்வரிசி வந்தால், இதனைச் செய்வேன். இல்லைனா, பேசாம பூரி மசாலாதான் இரவிற்கு.
5.
chollukireen | 11:38 முப இல் ஏப்ரல் 30, 2021
இது இல்லாவிட்டால் அது. பசங்கள் மெச்சும் அப்பா. மானஸீகமாக நானும் சாப்பிட வருகிறேன்.. அன்புடன்
6.
நெல்லைத்தமிழன் | 5:26 முப இல் ஏப்ரல் 30, 2021
செய்முறை எளிதுதான். கிச்சன் என் வசம் இப்போது. ஆனால் பாருங்க… நைலான் ஜவ்வரிசி ஸ்டாக் இல்லை. ஜியோல ஆர்டர் பண்ணி 3 நாளாச்சு, இன்னும் வரலை. இன்றைக்கு அல்லது நாளைக்கு செய்து பார்த்துவிடுவேன். அப்புறம் சொல்கிறேன்.
இதையே கொஞ்சம் பிசைந்து வடையாகத் தட்டிப் பொரித்தெடுத்தால் சாபுதானா வடை வந்துவிடாதோ?
சுலபமான அதேசமயம் வித்தியாசமான செய்முறைகளைத் தொடர்ந்து கொடுங்கள். நிச்சயம் பசங்க விரும்புவாங்க (குழம்பு, கூட்டு, காய்னா ரொம்பவே சலிச்சுக்கறாங்க, சரியா சாப்பிடுவதில்லை)
7.
chollukireen | 11:34 முப இல் ஏப்ரல் 30, 2021
வாஸ்தவம்தானே. நாம் பழக்கத்தில் செய்யாதது, புதுசாகத் தோன்றுமே தவிர, இதுவும் ஏதோ புதியது இல்லை.. சுடச்சுட நன்றாகவே இருந்தது. என்னுடைய முகாம்கள் மாறுதலாக இருந்துகொண்டு இருந்த ஸமயம் இதெல்லாம். செய்துபார்த்தது பசங்களும் சாப்பிட்டு பார்க்கட்டும். அப்புறம் அபிப்ராயம் . யாராவது ஏதாவது கொடுத்தால் அது மிகவும் ருசியாக இருக்கிரமாதிறி இருந்த காலம் ஒன்று இருந்தது. எனக்கு அதெல்லாம் ஞாபகம் வருகிரது. ஸம்பந்தமில்லாத பதிலிது. ஸாபுதானா வடைக்குறிப்பும் இருந்தது ஜெவ்வரிசி வந்தாச்சா? நன்றி. அன்புடன்
8.
நெல்லைத்தமிழன் | 4:26 முப இல் மே 1, 2021
நைலான் ஜவ்வரிசி – அமேசனில் ஆர்டர் பண்ணியது 3ம் தேதிதான் வருமாம். வேற ஜவ்வரிசி ஸ்டாக் இல்லை (2 கரண்டிதான் இருக்கு). நேற்று பூரி மசால். இன்று அடை செய்வேன். நேரம் இருந்தால் மோதிச்சூர் லட்டு கொஞ்சம் செய்யலாம் என்று கடலைப்பருப்பு ஊறவைத்திருக்கேன்.
(அதுக்குள்ளயே பசங்களுக்கு, அம்மா..நாளைலேர்ந்து நீதானே என்று கேள்வி. மனைவி சொல்றா, நீங்க பண்ணிவச்சுட்டு, டக்குனு சாப்பிடணும்னுலாம் சொல்வீங்க. நான்லாம் அவங்க எப்போ வந்தாலும் தயார் பண்ணுவேன்கிறா… ஹாஹா. நான் 8 3/4க்கு கிச்சனை மூடிவிட்டு, 9 மணிக்குத் தூங்கப் போயிடுவேன்)
9.
chollukireen | 11:13 முப இல் மே 1, 2021
அதனாலென்ன? மோதிச்சூர் லட்டு.கடலைப்பருப்பு ஊரவைத்து செய்வது எப்படி? படித்து தெரிந்து கொள்ளுகிறேன். எழுதுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது கூட ஒரு ஒழுங்கு முறைதானே!!அப்பா,அம்மாவிடம் அணுகு முறை வித்தியாஸமாகத்தான் இருக்கும்.எல்லாம் ஸரிதான். அன்புடன்
10.
Geetha Sambasivam | 10:40 முப இல் ஏப்ரல் 30, 2021
மோரில் ஊற வைத்தது இல்லை. ஒரு முறை இப்படியும் பண்ணிப் பார்க்கிறேன். இப்போதைக்கு வெந்தய தோசை மாவு கைவசம் இருக்கு. ஆகவே 2 நாட்கள் கழிச்சுப் பார்க்கணும்.
11.
chollukireen | 12:02 பிப இல் ஏப்ரல் 30, 2021
நல்லது.தோசைமாவு இருந்தால் துணை ஒன்று இருக்கும் மாதிரி அல்லவா. ஸாப்டான வெந்தய தோசை.அதையும் கூட சிறிது எண்ணெய் விட்டு கரகரவென்று நானும் சாப்பிட்டேன். நிதானமாகப் பண்ணுங்கள் ஸாபுதானா கிச்சடியை. அவஸரம் ஒன்றும் இல்லை.கீதாக்களின் பக்குவமும் ஒரேமாதிரி பதில். ஸந்தோஷம். அன்புடன்