பூந்தி லட்டு
ஒக்ரோபர் 27, 2010 at 12:31 பிப 5 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
புதியதாக அரைத்த கடலை மாவு—2கப்
சர்க்கரை—இரண்டரைகப்
நெய்—–1டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல்
லவங்கம்—–6
திராட்சை—–15
ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும்
பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய்
கேஸரி பவுடர்—-ஒரு துளி
குங்குமப்பூ—சில இதழ்கள்
பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு
செய்முறை
சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற
பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும்.
பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால்
அழுக்கு ஓரமாக ஒதுங்கும்.
கரண்டியால் அதை எடுத்து விடவும்.
ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும் பாகை இறக்கி வைக்கவும்.
–கடலை மாவைச் சலித்து ஒரு சிட்டிகை
ஸோடாஉப்பு, உப்பு, கேஸரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு
தோசைமாவு பதத்தில் கறைத்துக் கொள்ளவும்.
சற்றுக் குழிவான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
பூந்தி தேய்க்கும் கரண்டியில், ஒரு கரண்டி மாவை விட்டு,
எண்ணெயினின்றும் சற்று தூக்கலாக கரண்டியைப்
பிடித்துக் கொண்டு, மற்ற கரண்டியின் அடி பாகத்தினால்,
மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும்.
முக்கால் வேக்காடே போதும். சல்லிக் கரண்டியினால்
கிளறிவிட்டு , பூந்தியை எடுத்து எண்ணெயை ஒட்ட
வடித்துவிட்டு, பாகில் சேர்க்கவும். இப்படியே மாவு
பூராவையும் பூந்தியாகத் தேய்த்து எடுத்து பாகில் சேர்க்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, லவங்கத்தையும்
சேர்த்து பிரட்டி பூந்தியில் சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக்
கிளரவும். சற்றே ஊரவைத்து சூடு இருக்கும் போதே கலவையை
லட்டுகளாகப் பிடிக்கவும்
குங்குமப்பூவை துளி பாலில் கறைத்து பாகிலேயே சேர்த்து விடவும்.
பச்சைக் கற்பூரம் வாஸனை பிடித்தவர்கள் சேர்க்கலாம்.
இனிப்பு அதிகம் வேண்டியவர்கள் பாகு வைக்கும் போதே
கால்கப் சர்க்கரை, அதிகம் சேர்க்கவும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
petunia | 8:18 பிப இல் நவம்பர் 2, 2010
Ladoo miga miga ruchiyaga irundadu!! Yummy!
2.
chollukireen | 3:31 பிப இல் நவம்பர் 3, 2010
லட்டு, மிட்டாய் ஹல்வாவும்,பாஸந்தியும், தட்டு ஜிலேபியும் பாட்டு எனக்கு உன் கமெண்ட்டைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது மிகவும் ரஸித்து எழுதியிருக்கிராய்.
3.
chollukireen | 7:56 முப இல் நவம்பர் 6, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் ஐந்து வருஷங்களுக்குமுன்னர் ஜெனிவாவில் பூந்தி கரண்டி இல்லாமல் காய்கள் வடியப்போடும் தட்டின் உதவியால் செய்தது. ப்ளாக் ஆரம்பித்தபோது இந்த போட்டோவெல்லாம் போடவராது. அப்படியும் ஒரு ஆசை.போட்டோவுடன்போட. அவ்வளவு ஸந்தோஷம் பேத்தி போட்டுக் கொடுத்தவுடன். அந்த ஞாபகம்வந்தது. தீபாவளி. நீங்களும் படத்தை மற்ற இனிப்பு வகைகளுடன் சுவையுங்கள்.ஆசிகளையும்,வாழ்த்துக்களையும் பெறுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்
4.
Geetha Sambasivam | 11:18 முப இல் நவம்பர் 6, 2015
பழைய பதிவில் படங்கள் தெரிகின்றன. இப்போப் போட்டிருப்பதில் படங்கள் தெரியவில்லை. இங்கே வந்து தான் பார்க்கணும். 🙂 அதனால் என்ன பரவாயில்லை! லட்டு நன்றாகவே இருக்கிறது. மு.ப. தி.ப. எல்லாம் போட்டு சுவையோ சுவை!
5.
chollukireen | 6:46 முப இல் நவம்பர் 8, 2015
ரிப்ளாக் செய்தால் இப்படிதான் ஒரிஜனலைப் பார்க்க வைத்துவிடுகிரார்கள். அன்புடன்