புத்துருக்குநெய் மைசூர் பாகு
நவம்பர் 1, 2010 at 2:43 பிப 5 பின்னூட்டங்கள்
வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு
தயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்
அம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
கால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்
ஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்
நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து
மைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்
வைத்தெடுக்கவும்.
அல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்
போட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்
கிளறவும்.
கூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்
கொண்டே இருக்கவும்.
சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது
மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.
நல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது
கிளறவும்.
நெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி
பாத்திரத்தை விட்டு விலகி நுறைத்து மேலே வர ஆரம்பிக்கும்
நன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய
தட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை
இரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.
சற்று ஆறியபின் கத்தியினால் வில்லைகளாகக் கீறி
எடுத்து வைக்கவும்.
கைவிடாது கிளறுவது அவசியம்.
நெய்யை சூடாக சேர்த்து கிளறவும்.
1 பங்கு கடலைமாவு, 2பங்கு சர்க்கரை, 2பங்குநெய்
சாமான்கள் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது.
நல்ல பதமாக செய்தெடுத்தால் வாயில் போட்டால் மணத்துடன்
கரையும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
petunia | 8:14 பிப இல் நவம்பர் 2, 2010
Recipe + photos parthavudan Deepavali vandu vittar pola thondrugiradu. Inda sei murayil seida mysore pak miga miga ruchiyaga irundadu. Angilathil koorinal, “Melts in your mouth”. Photos pramadam!
2.
chollukireen | 3:25 பிப இல் நவம்பர் 3, 2010
இம்மாதிரி கமென்ட்ஸ் எல்லாம் எழுதுபவர்களுக்கு விடமின் B 12 மாதிரி. படிப்பவர்களுக்கும் நல்ல ஊட்டச் சத்து மாதிரிதான். ஆமாம்.தீபாவளி வந்தே விட்டது. இனிமையாகக் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் ஆசிகளுடன் கூடிய தீபாவளி வாழுத்துகள். நன்றி.
3.
மகி | 6:56 பிப இல் திசெம்பர் 9, 2010
காஞ்சீபுரம் இட்லி என்று கூகுளில் தேடியபோது உங்கள் தளம் கிடைத்தது. எல்லா ரெசிப்பிகளும் அருமையாக இருக்கிறது அம்மா! தொடரட்டும் உங்கள் பணி!
வாழ்த்துக்கள்!
4.
chollukireen | 2:20 பிப இல் திசெம்பர் 10, 2010
நன்றி மகி. இட்லியைத் தேடப்போக நான் கிடைத்திருக்கிறேன் உன்னுடைய பாராட்டுகள் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்தது. உன்னுடைய தள த்திற்கும் போனேன். இன்னும் வந்துகொண்டு இருப்பேன் பாராட்டுகள் உனக்கு.தொடர்ந்து வந்து கொண்டிருக்கவும். தெறிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள , உற்ற என் பெண்ணாகவும் இருப்பாய். அன்புடன் வாழ்த்துகிறேன். ஆசீர்வாதங்கள்
5.
chollukireen | 11:47 முப இல் ஒக்ரோபர் 10, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.