பொரி உருண்டை
நவம்பர் 18, 2010 at 10:08 முப 3 பின்னூட்டங்கள்
சுத்தம் செய்த அவல் பொரியோ அல்லது நெல் பொரியோ எது
கிடைக்கிரதோ ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.
வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்
சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்
ஏலப்பொடி—கால் டீஸ்பூன்
சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை சிறிது
நெய்—-சிறிது
செய்முறை. —-நெய்யில் தேங்காய்த் துண்டுகளை சிவக்க
வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சற்று கொள்ளளவு பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி
நன்றாக மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து
பாகாகக் காய்ச்சவும்.
பாகில் பொடிகளைச் சேர்க்கவும். முதிர் பாகாக வரும் போது
பொரியையும், தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு கையில்
அரிசி மாவை லேசாக தடவிக்கொண்டு வேண்டிய சைஸில்
உருண்டைகளாக உருட்டவும்.
விருப்பமுள்ளவர்கள், பொட்டுக் கடலையையும், வறுத்த
வேர்க் கடலையையும் பொரியுடன் சேர்க்கலாம்.
பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்
கரையாமல் கெட்டியாக உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.
திருக்கார்த்திகைக்கு விசேஷமான பொரி உருண்டை.
சாதாரணமாக எப்போதும் கிடைக்கும் முட்டைப்பொரி[அதாவது அரிசிப் பொரி]
இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம் பொரி 3 பங்கு, வெல்லம் 1 பங்கு கணக்குதான்.
பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக
வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி உபயோகிப்பது
நல்லது. மைக்ரோவேவில் ஒரு நிமிஷம் வைத்தெடுத்தாலே போதும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chollukireen | 11:21 முப இல் திசெம்பர் 4, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
கார்த்திகையை நினைத்துக் கொண்டு நாம் ஏதாவதுஎழுதினோமா என்று பார்த்தால் ஜெனிவாவில் கிடைத்த பொரியில் செய்தது நான் இருக்கிறேன் என்று முன் வந்து நிற்கிறது. அதுதான் நானே எடுத்த முதல் போட்டோவும். காமா,சோமா என்று இருந்தாலும் கார்த்திகைப்
பருப்பு தேங்காயும்,உருண்டைகளும் கிடைத்த வெல்லத்தைக் கொண்டு செய்தது. நான் எடுத்த முதல் படம்.
என் கேமிராவில் என்ன இருக்கும்? கம்யுட்டரில்தான் என்ன இருக்கும்.? இதுவே அது.அதுவே இது என்ற கணக்கில்தான்.
பாருங்கள்.அண்ணாமலைக் கார்த்திகை வாழ்த்துகளுடன்.
அன்புடன்
2.
chollukireen | 3:40 முப இல் நவம்பர் 29, 2020
ஆறு வருஷத்திற்கு முந்தைய பதிவு இது இன்று கார்த்திகைக்கு நானே பார்த்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது படம் பரவாயில்லை முதல் படம் நானே எடுத்து பதிவு செய்தது அழகாக தோன்றுகிறது அன்புடன்
3.
chollukireen | 5:57 முப இல் நவம்பர் 29, 2020
இல்லை இல்லை பத்து வருஷத்திற்கு முந்தைய பதிவு இது அன்புடன்