அரிசி உப்புமா
நவம்பர் 26, 2010 at 2:48 பிப 3 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்—
பச்சரிசி—–2கப்
துவரம் பருப்பு–2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் —கால் டீஸ்பூன.
இந்த அளவு செய்வதற்கு வீட்டிலேயே மிக்ஸியில் ரவை தயாரித்துக்
கொள்ளலாம்.
அரிசியில2 ஸ்பூன் ஜலம் சேர்த்துப் பிசறி வைத்து ஒரு மணி நேரம்
கழித்து மிக்ஸியில் பெறிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு வகைகளைச் சற்று சூடாக்கி ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
வெந்தயமும் சேர்த்துப் பொடிக்கவும்
தாளிக்க வேண்டிய ஸாமான்கள்
நல்ல எண்ணெய்—3 டேபிள் ஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் —3
உளுத்தம் பருப்பு—-3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—முக்கால் கப்
மிளகு சீரகம்–தலா அரைடீஸ்பூன்
நெய் –2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–கறிவேப்பிலை
செய் முறை—
முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் வெண்கலப்பானை, உருளி,போசி,
கோதாவரிகுண்டு என, அளவைகளுடன் கால்படி, அரைபடி, பட்ணம்படி
என அடை மொழிகளுடன் பாத்திரங்கள் உண்டு.
அவைகளில் செய்வதுதான் வழக்கம்.
இப்போது எல்லா அளவுகளையும் ப்ரஷர் குக்கர்கள் ஏற்றுக்
கொண்டு விட்டது. நாம் இப்போது குக்கரிலேயே செய்வோம்.
ப்ரஷர் பேனோ அல்லது குக்கரையோ காஸில் வைத்து எண்ணெயைச்
காயவைத்து மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
இவைகளைத் தாளித்து,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
தண்ணீர் சேர்ப்போம்.
அளவு ஒரு பங்கு ரவை என்றால் இரண்டரை பங்கு ஜலம்
சேர்க்கலாம். மிளகு,சீரக ம் உடைத்தது
உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும் போது தீயைச் சற்றுக் குரைத்து,
அரிசி பருப்புரவையைச் சேர்த்து நிதானமாகக் கிளறவும்.
கலவை, வெந்து சேர்ந்து வரும் சில நிமிஷங்கள்
இரண்டொருதரம் நன்றாகக் கிளறி விட்டு நெய் சேர்த்துக் கிளறி,
குக்கரை மூடவும். தீயை ஸிம்மில் வைத்து 7, 8, நிமிஷங்கள்
வேகவைத்து இறக்கி 5, 6, நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்.
வெந்தயம் சேர்ப்பது உப்புமா மெத்தென்று மென்மையாக
இருப்பதற்காக.வாஸனையாகவும் இருக்கும்.
சாதம் காணும் பழைய அரிசியாக இருந்தால் உப்புமா உதிர்உதிராக
வரும்.
காய் வகைகள், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய்
சேர்த்தும் செய்யலாம்.சாதாரணமாக தேங்காய் சேர்த்து செய்வது
சுலபமாகவும், பழக்கமாகவும் இருக்கிறது.
உடன் சாப்பிட சட்னி, ஊறுகாய்கள், தயிர், வெல்லம், சர்க்கரை
என எல்லாமே ஸரியாக இருக்கும்.
மாகாளிக்கிழங்குசேர்த்த தயிர் பச்சடிமாதிரி சுவை கொடுக்கும்.
மொத்தமாக அரிசியில், பருப்பு, வெந்தயம் சேர்த்து மிஷினில்
உடைத்து வைத்துக் கொண்டால் வேண்டும்போது செய்ய இன்னும்
சுலபமாக இருக்கும்.
வாணலியில் கிளறி மைக்ரோவேவ் பாத்திரத்தில் மாற்றி
ஹைபவரில் 6,7 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்தும்
எடுக்கலாம்.
சாதாரணமாக உப்புமாவை வேக வளைய நன்றாகக் கிளற வேண்டும்
என்ற சொல் புழக்கத்தில் உள்ளது.
Entry filed under: டிபன் வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chollukireen | 12:28 பிப இல் நவம்பர் 7, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தப்பதிவு இடும்போது நான் ஜெனிவாவில் இருந்திருக்கிறேன். அதனால் குக்கரில் செய்முறை எழுதியிருக்கிறேன். மற்றும் தேங்காயெண்ணையில் செய்யும் பழக்கமும் கிடையாது. தோசையைத் தொடர்ந்து உப்புமா பதிவு. பாருங்கள். ரஸியுங்கள். .ஜெனிவாவினின்றே மீள்பதிவும் ஆகிறது. அன்புடன்
2.
Geetha Sambasivam | 12:53 பிப இல் நவம்பர் 7, 2022
Super Amma. Without venthayam I am preparing and the oil also coconut oil. For puli pongal I am adding venthayam. Arisi uppuma is my favourite.
3.
chollukireen | 12:20 பிப இல் நவம்பர் 8, 2022
நன்றி. வெந்தயம் சேர்த்துச் செய்தும் பாருங்கள். வெண்கலப்பானை உப்புமாதான் மனதில் நிற்கிறது.அன்புடன்