கடுகுக்கீரை வதக்கல்.
திசெம்பர் 11, 2010 at 10:46 முப 2 பின்னூட்டங்கள்
குளிர் சீஸனில் இந்தக் கீரை மிகவும் நன்றாக இருக்கும்.
வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக இதை உபயோகிப்பார்கள்.
க்ரோட்டன்ஸ் மாதிரி பெறிய இலைகளுடன் ஒரு வகையும்,
சிறிய இலைகளுடன் மஞ்சள் பூவுடன் ஒரு வகையும் கிடைக்கும்.
இரும்புச் சத்து அதிக முள்ளது இக்கீரை.
ஸரஸோங்கி ஸாக்.மக்கைகா ரோடி .ஜோடி ப்ரபலமானது.
முதலில், கீரையைச் செய்ய வேண்டிய சாமானைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—–பெரிய இலை கடுகுக் கீரை 2 கட்டு
சுமார் 20 இலைகள்.
எண்ணெய்——2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு—-1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—–2
பெருங்காயம்—–சிறிது
பூண்டு—4 இதழ் தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கியது
தேங்காய்த்துறுவல்—-கால்கப்
ருசிக்கு—உப்பு.
செய்முறை—–.கீரையைச் சுத்தம் செய்து, அதன் பருமனான
அடிபாகக் காம்பையும், நரம்புகளையும் நீக்கி, பொடியாக
நறுக்கித் தண்ணீரில் அலசி வடிய வைக்கவும்.
அடிக் கனமான காய்கள் வதக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக்
காயவைத்துமிளகாய், சீரக, பருப்பு வகைகளை சிவக்க வறுத்து,
பூண்டு பெருங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தாளிப்பு வதங்கியதும், கீரையைச் சேர்த்து, ஒரு கால்சிட்டிகை
சர்க்கரை சேர்த்துக் கிளறி மூடவும்.
நிதான தீயில் கீரை நன்றாக வெந்து வதங்கும் வரை அடிக்கடி
கிளறி மூடவும்.
ஈரப் பதம் குறைந்தால் சிறிது ஜலம் தெளித்து வதக்கவும்.
கீரை வதங்கியதும், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கி
இறக்கவும்.
துளி சர்க்கரை சேர்ப்பது கீரை பச்சென்று நிறம் மாறாமல்
இருப்பதற்காக.
சாதாரணமாக நம் சமையலில்தான், தேங்காய்,
பருப்புகள் உபயோகம்அதிகம்.
வெந்தயம்,மிளகாய், பெருங்காயம் மட்டிலும் சேர்த்து
வதக்குவதும் ருசியாகத்தான் உள்ளது.
மிருதுத் தன்மைக்காக வெந்தயம் சேர்ப்பது.
வதங்கிய கீரையில் லேசாக புளிப்பு ருசியும் இருக்கும்.
அதனால் வெந்தயம் வறுத்துச் சேர்த்தாலும் கசப்பு இருக்காது.
ஏறக்குறைய ஆத்திக் கீரையின் ருசிதான் என்று எனக்குத்
தோன்றுகிறது. குளிர்காலத்துக்கு ஏற்ற கீரை.
ஜெனிவாவில் கூடகடுகு கீரை வகையைச் சேர்ந்த cima di rapa
என்ற italie வகைக் கீரை கிடைக்கிறது. அதே ருசி.
பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறது.
Entry filed under: கறி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 5:40 பிப இல் திசெம்பர் 11, 2010
நன்றாக இருக்கிறது கீரைப் பொரியல்..இந்தக் கீரை இதுவரை சாப்பிட்டதே இல்லை,சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.
2.
chollukireen | 2:34 பிப இல் திசெம்பர் 12, 2010
தமிழ் நாட்டில் இந்தக்கீரை உஷ்ணம் என்று சொல்வார்கள். நான் நேபால், டில்லி, கல்கத்தா என 50 வருஷங்களாக இருந்து பழக்கமாநதால் இந்தக் கீரையும் என்னோடு பழகிவிட்டது. நேபாலில் இந்தக் கீரை இல்லாது சாப்பாடே இல்லை. அவ்வளவு ப்ரபலம்..சமைத்துப் பாருங்கள்.