திருவாதிரைக் களி.
திசெம்பர் 18, 2010 at 11:39 முப 4 பின்னூட்டங்கள்
திருவாதிரை ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி
இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.
நாம் களியை செய்து பார்த்து விடலாம்.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்
துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்
நெய்—2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல்—அரைகப்
முந்திரி திராட்சை—-விருப்பம்போல்
ஏலப்பொடி—-சிறிது
இருந்தால்—ஒருஸ்பூன் தேன்
செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து
மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்புக்களையும் வறுத்து ரவைபதத்தில் பொடிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைகப் ஜலத்தைநன்றாகக்
கொதிக்க விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.
தீயை நிதானப்படுத்தி கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்
கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.
உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக வேக
வைக்கவும்.
வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு
வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி
கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.
நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்
சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.
ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
களி ரெடி. பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்
முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்
பிழிந்தும் சேர்க்கலாம். நான் தற்போது டில்லி
வந்திருப்பதால் படம் எடுத்துப் போட சௌகரியப்
படவில்லை.
கொதிக்கும் ஜலத்திலே யே வெல்லத்தைப் போட்டு
கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்
செய்வதும் உண்டு.
நல்ல கலரான பாகு வெல்லமாக இருந்தால் களியும் நல்ல
நிறமாக வரும்.
விருப்பப்படி நெய் விடவும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 10:15 பிப இல் திசெம்பர் 18, 2010
இந்தக் களி கேள்விப்பட்டிருக்கேன்,சிறுவயதில் சாப்பிட்டது..யாராவது செய்து தந்தா நல்லா சாப்பிடலாம். 😛 🙂
2.
chollukireen | 7:00 முப இல் திசெம்பர் 19, 2010
ரொம்பவே சரியாகச் சொன்னாய். நான்செய்து கொடுக்கத் தயார். கூட்டோடு சாப்பிட்டால் ருசியாகத்தான் இருக்கும். அதையும் எழுதுகிறேன். எப்போது சாப்பிட வருகிரீர்கள்.
3.
மகி | 3:48 முப இல் திசெம்பர் 21, 2010
ஹாஹா! சீக்கிரமா வந்துடறேன் அம்மா! 😀 🙂
4.
chollukireen | 6:22 முப இல் திசெம்பர் 16, 2013
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மூன்று வருஷத்திற்கு முன்பு எழுதியது. படம் பிரகு போடுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்