திருவாதிரைக் குழம்பு
திசெம்பர் 20, 2010 at 6:27 முப 5 பின்னூட்டங்கள்
இதை ஏழுதான் குழம்பு என்று சொல்வார்கள்.
பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் போட்டோமென்று மிகைப்
பட்டுப் போகும் அளவிற்கு காய்கள் கிடைத்து விடும்.
களியும் கூட்டும் நிவேதனம் என்று சொல்லி முருங்கை,
சுரைக்காய், முள்ளங்கி இதெல்லாம் சேர்க்க மாட்டார்கள்,
அது ஒரு கால பழக்கம்.
நாம் வேண்டியவைகளைப் பார்க்கலாம்.
பூசணி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு,
பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ
சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி
என பட்டியல் போட்டால் எதைவிட்டு எதைப் பிடிப்பது.
கத்ரிக்காய், பாகற்காய், வாழைக்காய்,வேறு இருக்கிறது.
இனிப்பு காய் வகைகளைக் குறைத்துப் போடலாம்.
நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ ஏதாவதொன்று.
வேண்டிய காய்களைச் சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும்.
மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம்.
பருப்பு —துவரம்பருப்பு முக்கால் கப்
வறுத்தரைக்க சாமான்கள்.
வற்றல் மிளகாய்—-10
தனியா—2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு——ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் ஒரு மூடி
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
புளி ஒருபெரிய எலுமிச்சை அளவு கரைப்பதற்கு
தாளிப்பிற்கு —கடுகு, பெருங்காயம்
வாஸனைக்கு—-கொத்தமல்லி கறிவேப்பிலை
ருசிக்கு உப்பு
செய்முறை. —பு்ளியை ஊறவைத்துக் கறைத்து
வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு.
வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில்
வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து
மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில் காய்களை
வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி
கலந்து கொதிக்கவிடவும்.
காய்கள், வெந்ததும் அரைத்த விழுதைக் கறைத்துச்
சேர்த்து மேலும் கொதிக்கவிட்வும்
வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.
கடுகு பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி கறிவேப்பிலை
சேர்க்கவும். தென்னார்க்காடு பக்கம் 7தான் குழம்புதான்
செய்வது வழக்கம்.
இதையே காய்களை சற்று குட்டையாக நறுக்கி வறுக்கும்
சாமானில் மிளகு, சீரகம் சேர்த்து,புளி ஜலத்தைக் குறைவாக
சேர்த்துத் தயாரித்தால் கூட்டுதான். வறுக்கும் மிளகாயைக்
குறைத்துத் தேங்காய் அதிகம் சேர்த்தும் செய்யலாம்.
காய்கள் கூட்டிற்கு அதிகம் போடலாம்.
குழம்பில் வெந்தயத்தையும், கூட்டில் உளுத்தம் பருப்பையும்
தாளிதத்தில் சேர்க்கலாம்.
குழம்பிற்கு பச்சைமிளகாய் சேர்த்தால் வாஸனையாக
இருக்கும்.
கூட்டோ, குழம்போ இனிப்புக் களிக்கு ஜோடி சேர்த்து
சாப்பிடுவது ஒரு பழக்கம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 3:50 முப இல் திசெம்பர் 21, 2010
நல்லா இருக்கு,இது வேணா செய்து பாத்து சொல்லறேன். ரெசிப்பிக்கு நன்றி!
2.
chollukireen | 11:54 முப இல் திசெம்பர் 21, 2010
கைக்கு கை ருசி வித்தியாஸம் உண்டு. திருவாதிரைக் குழம்பு மகி கை பக்குவத்தினால் மகிமை பெரும் என்று தோன்றுகிரது
ஒரே அளவு சாமான் ஒரே பக்குவம் ருசிஅசத்தலாக இருக்கும் சமயங்களும் உண்டு. கை மணம் என்று ஒரு வார்த்தை சமையல் பக்குவத்தில் சொல்லப்படுவது ஞாபகம் வருகிரது.
3.
chollukireen | 9:35 முப இல் திசெம்பர் 17, 2013
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
படங்கள் போட முடியாதபடி என்னால் ஸரி செய்யமுடியாத அளவில் இருக்கிறது எனது கணினி. திருவாதிரைக் குழம்பும்
கூட வரட்டுமே. பருப்பு அதிகம் போட்டும் செய்யலாம். பாருங்கள் இதுவும் திருப்பிப் போடும் பதிவுதான்.அன்புடன்
4.
GOPALAKRISHNAN. VAI | 12:23 பிப இல் திசெம்பர் 17, 2013
களிக்கான கூட்டு தங்களின் பதிவினில் ருசியோ ருசியாகச் சொல்லப்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
எனக்கு நிறைய காய்கறிகள் பிடிக்காமல் இருப்பதால், பிடித்தவற்றை மட்டுமே வாங்கி வருவேன். அதை மட்டுமே செய்யச்சொல்வேன்.
பொதுவாக பிடித்த காய்கறிகளை மட்டும் [திதித்து வழியாமல்] காரசாரமாகச் செய்வதுண்டு.
பகிர்வுக்கு நன்றிகள், மாமி.
5.
chollukireen | 2:24 பிப இல் திசெம்பர் 17, 2013
ஆமாம். நீங்கள் சொல்வதை நூறு பர்ஸென்ட் ஸரியானது. விரும்புவதைத்தான் சாப்பிட முடியும். வாலாம்பாள் கேட்டதெல்லாம் செய்து கொடுத்து இப்படி உங்களைச் சொல்லச் செய்து விட்டார். நன்றி எல்லாம் இருவருக்குமே. அன்புடன்