வெந்தயக்கீரைப் புலவு
திசெம்பர் 27, 2010 at 6:09 முப 20 பின்னூட்டங்கள்
இதுவும் சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்றுதான்.
வேண்டியவைகள்
மெல்லியரக பாஸ்மதி அரிசி—1 கப்
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
நெய்—–1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்—-1 சிறியதாக நறுக்கவும்
பூண்டு—–2 இதழ்கள் தட்டிக் கொள்ளவும்
பச்சைப் பட்டாணி—அரைகப்
பச்சை மிளகாய்—2 கீறிக் கொள்ளவும்
சற்று பெறியதாக தக்காளிப் பழம்—1 நறுக்கியது
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை—-ஒன்றறை கப்
இஞ்சி—-வாஸனைக்குத் துளி
லவங்கம்–2, ஏலக்காய் 1 , பட்டை வெகு சிறியத் துண்டு
இஷ்டத்திற்கிணங்க முந்திரி, திராட்சை
ருசிக்கு—உப்பு
சீரகம்—சிறிது
செய்முறை—- அரிசியைக் களைந்து தண்ணீரை இறுத்துவைக்கவும்
ஒரு கப் செய்ய ப்ரஷர் பேனே போதுமானது.
பட்டை,லவங்கம், ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
பேனில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து
நறுக்கிய மிளகாய், வெங்காயம்,பூண்டு இஞ்சியை வதக்கவும்
.மசாலாவைச் சேர்க்கவும்
தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி கீரையைச் சேர்த்து வதக்கி
கீரை வதங்கியபின் பொடியாக நறுக்கிய தக்காளி,பட்டாணி
சேர்த்துக் கிளறி நிதான தீயில் வைத்து அரிசியையும்
சேர்த்து ப் பிரட்டி உப்பும் கால் டீஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து ஒன்றறைக் கப் தண்ணீர் விட்டுக் கிளறி மூடி
ப்ரஷர் குக் செய்யவும் ஒரு விஸிலே போதும்.
ஸிம்மில் 2, 3 நிமிஷங்கள் வைத்து இறக்கவும்
முந்திரி, திராட்சையை யும் தாளிப்பிலேயே சேர்க்கவேண்டும்.
தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்ப்பது கலர் மாறாதிருக்க வேண்டியே.
என்ன இஷ்டமோ பச்சடி செய்து ஜோடி சேர்க்கவும்.
கீரையை நறுக்காமலும் வதக்கலாம்
உங்களின் குக்கர் நேரம் உங்களுக்குத் தெறியும்
அதை அனுசரிக்கவும்.
ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும் என்று எழுதினால்
சுருக்கமாக முடிந்திருக்கும்.
டில்லியில் வெந்தயக்கீரை பச்சென்று அவ்வளவு நன்றாக இருக்கும்.
தயிரில் தக்காளி, ப.மிளகாய்,வெங்காயம், கொத்தமல்லி பொடியாக
நறுக்கிச் சேர்த்து உப்பு கலந்தால் பச்சடியும் ரெடி. ஸிம்பிள்
Entry filed under: புலவு வகைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 6:27 பிப இல் திசெம்பர் 28, 2010
இன்றைக்கு வெந்தயக்கீரை புலவுதான் செய்தேன்,சாப்பிட்ட உடனே உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கேன். மிகவும் அருமையாக இருந்தது. சுவையான குறிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா!
2.
chollukireen | 5:37 முப இல் திசெம்பர் 29, 2010
உன் மறுமொழியும் அன்புடன் கலந்த சுவையாக இருக்கிரது. ஜனவரி முதல் தேதிவருகிறதே. உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் மற்றும் இதைப் பார்க்கும் யாவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் .
3.
மகி | 7:58 முப இல் ஜனவரி 1, 2011
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
4.
chollukireen | 1:09 பிப இல் ஜனவரி 2, 2011
நன்றி மகி. மிகவும் ஸந்தோஷம். அடுத்தது கைபிசகு நடந்து விட்டது. கற்றுக் கொள்ள இன்னும் இருக்கிறது
5.
asiya omar | 3:48 பிப இல் பிப்ரவரி 18, 2011
மகி ப்ளாக் பார்த்து வந்தேன், அருமை.
6.
chollukireen | 10:53 முப இல் பிப்ரவரி 19, 2011
உங்களுடைய கமென்ட் பார்த்து மிக்க ஸந்தோஷம். மஹி
ப்ளாக் மூலம் வந்தது இன்னும் ஸந்தோஷம். உங்கள் ப்ளாக் பார்த்து கதைக்கு கமென்ட்டும் எழுதினேன். போஸ்ட் ஸரியாக ஆனதா தெரியவில்லை. நீங்களும் அடிக்கடி வாருங்கள். உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் புனைவுக்கதை அறியாமையின் ,
நிகழ்கால நிகழ்வுகள்,எண்ணங்களைத் துல்லியமாகத்
தெளிவு படுத்தியது.
7.
suganya | 12:06 முப இல் செப்ரெம்பர் 15, 2011
You have mentioned that masala needs to be added after frying onions. I did not find any masalas in the ingredients. Could you please clarify?
8.
chollukireen | 7:49 முப இல் செப்ரெம்பர் 15, 2011
பட்டை, லவங்கம், ஏலக்காய், பொடி செய்யச் சொல்லி எழுதியிருக்கிறேனே அதுதான் மஸாலா. இதைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் புலவு மிகவும் சுலபமானது. பொதுவாக எதுபுரியவில்லையோ கேட்டு எழுதினால் பதிலெழுதுகிறேன். உன் வரவுக்கு நன்றி.மேலும் வந்துகொண்டிரு. 2வாரமாக எழுதவில்லை. உனக்கு கட்டாயம் பதிலெழுதுவது அவசியம். நீயும் பதிலெழுது. ஆசிகளுடன் சொல்லுகிறேன்.
9.
மகிஅருண் | 10:55 பிப இல் ஜூலை 27, 2013
காமாட்சிம்மா, மேத்தி புலாவ் செய்து படங்களுடன் பகிர்ந்திருக்கேன்.
http://mahikitchen.blogspot.com/2013/07/blog-post_27.html
நேரமிருக்கையில் வந்து பாருங்கம்மா.
உங்க உடல்நலம், சிகிச்சை எல்லாம் நல்லபடியாகப் போகிறது என்ற நம்பிக்கையுடன், மகி.
10.
Geetha Sambasivam | 10:14 முப இல் செப்ரெம்பர் 24, 2015
தேங்காய் சேர்க்காமல் செய்திருக்கேன். தேங்காய் சேர்த்தும் செய்து பார்க்கணும். 🙂
11.
chollukireen | 11:56 முப இல் செப்ரெம்பர் 7, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மிக்க பழைய பதிவு இது. டில்லியில், அதுவும் டிஸம்பரில் இருந்திருக்கிறேனா? எனக்கே நம்ப முடியவில்லை.ஸிம்பிளான பதிவு. படங்களும் அதிகம் இல்லை. ருசிக்கவும். அன்புடன்
12.
ஸ்ரீராம் | 1:56 பிப இல் செப்ரெம்பர் 7, 2021
வெந்தயக்கீரை சுலபத்தில் கிடைபப்தில்லை. முன்பு கிடைத்தபோதெல்லாம் நாங்கள் சாம்பார் மட்டுமே செய்திருக்கிறோம். இது நன்றாய் இருக்கும் போல இருக்கிறது.
13.
chollukireen | 11:43 முப இல் செப்ரெம்பர் 8, 2021
குளிர்நாளில் அதிகமாகக் கிடைக்கும் நம் ஊரில். இங்கெல்லாம் எப்போதுமே கிடைக்கின்றது. நேற்றுகூட ஸாம்பார் அதுதான். நான் கஞ்சி காமாட்சி. மெனு தெரிந்தது. அவ்வளவுதான். ஸந்தேகமில்லாமல் நன்றாகவே இருக்கும். நன்றி. அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 2:55 பிப இல் செப்ரெம்பர் 7, 2021
அட.. இது நல்லா இருக்கும் போலிருக்கே…
இங்கு எல்லாவித கீரையும் கிடைக்கும். நானும் அடிக்கடி வெந்தயக் கீரை வாங்குவேன் (வாங்கி மெத்தி ஆலு பண்ணச் சொல்லி அடிக்கடி சாப்பிட்டுட்டு போரடித்துவிட்டது).
நிச்சயம் இதனை (மைனஸ் பூண்டு…) செய்யச் சொல்கிறேன்.
15.
chollukireen | 11:51 முப இல் செப்ரெம்பர் 8, 2021
பெங்களூருவில் கிடைக்காத கீரையா. பச்சென்று நன்றாகவே இருக்கும்.பட்டாணி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. விருப்பம்போலச் செய்து ருசியுங்கள். நன்றி. தொடர்ந்து எங்கள் பிளாக் உங்கள் சமையல் குறிப்புகள் ருசித்து வருகிறேன். நன்றி. அன்புடன்
16.
Geetha Sambasivam | 1:36 முப இல் செப்ரெம்பர் 8, 2021
Super amma. My favourite
17.
chollukireen | 11:53 முப இல் செப்ரெம்பர் 8, 2021
எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அன்புடன்
18.
Geetha Sambasivam | 10:04 முப இல் செப்ரெம்பர் 8, 2021
என்னோட இப்போதைய கருத்து மொபைல் வழி கொடுத்தது வரலையோனு நினைச்சேன். வந்திருக்கு. வெந்தயக்கீரைப் புலவு அடிக்கடி பண்ணுவேன். இப்போதெல்லாம் ஜாஸ்தி வாங்கறதே இல்லை. வாங்கினால் ஒருதரம் பண்ணணும்.
19.
chollukireen | 12:01 பிப இல் செப்ரெம்பர் 8, 2021
நானும் மொபைலில் படித்தேன். பதில் எழுதினால் ஸரியாக பதங்கள் வருவதில்லை. நாமொன்று சொல்ல வேறொன்று பதிவாகிறது. கணினியில் உட்கார முடிவதில்லை. அரை மணிநேரம்தான்.அவரைக்காயுடன் சேர்த்துச் செய்தால் ஸாம்பார் அதீத ருசி. வீட்டுக்காய். மறுமொழி க்கு மிகவும் நன்றி. அன்புடன்
20.
chollukireen | 12:13 பிப இல் செப்ரெம்பர் 8, 2021
கிராமங்களில் மார்கழி தையில் பச்சைக் கொத்தமல்லி, புதினா, வெந்தயக்கீரை, மிகவும் மலிவாககட்டுக் கட்டாய்க் கிடைக்கும். அவரையும் காய்க்கும். அந்த ஞாபகம் வருகிரது.முள்ளங்கியும் அப்படியே!ஆனால்வாங்க மாட்டார்கள். புலவு எல்லாம் தெரியவே தெரியாது. அன்புடன்