சக்கரைப் பொங்கல்
ஜனவரி 8, 2011 at 12:44 பிப 10 பின்னூட்டங்கள்
பொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும்
முறையையும் பார்ப்போமா.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப். பாஸ்மதி
பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு
பாகுவெல்லம்—பொடித்தது—2 கப்
நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்–5 பொடித்துக் கொள்ளவும்
முந்திரி, திராட்சை–விருப்பத்திற்கு
குங்குமப்பூ–சில இதழ்கள்
ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு
தேன்—2 ஸ்பூன் ருசிக்கு
பால்—-அரைகப்
செய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே
வாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை ஜலம் விட்டுக் களைந்து
இறுத்து , இரண்டரைகப் ஜலமும் அரைகப் பாலையும் சேர்த்து
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குழிவான கரண்டியினால் வெந்தவற்றை
நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-
-கிளறி, கெட்டியான பாகாக் காய்ச்சி மசித்த அரிசி, பருப்பில்
சேர்த்து, நிதான தீயில் ஒன்று சேரக் கிளரவும்.
கலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில் இறக்கவும்.
பாகு காயும் போதே ஏலக்காய், குங்குமப்பூ,ஜாதிக்காய்ப்பொடி
இவைகளைச் சேர்த்து விடலாம்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு தேனையும்,
நெய்யையும் சேர்த்துக் கலக்கவும்.
நெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய், தேன் முதலானது
கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.
அடுத்து வெங்கலப் பானையில் பாலும் ஜலமுமாகக் கொதிக்க
வைத்து வறுத்த அரிசி, பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து
மசித்து , வெல்லம் சேர்த்துக் கிளறி, மற்ற சாமான்களையும்சேர்த்து
நன்றாக இருகும்வரை கிளறி நெய்விட்டு இறக்குவதும் ஒரு முறைதான்.
கடலைப் பருப்பு சிறிது பருப்பு வறுக்கும் போது சேர்ப்பதும் உண்டு.
பாகு வைத்து சேர்க்கும் பொங்கலில் அடி பிடித்துவிடுமோ என்ற அச்சம்
குறைவு.
அரிசி சாதம் செய்ய வைக்கும் அளவிற்குச் சற்று கூடுதலாகவே
ஜலம் பொங்கலுக்கு வைக்கவும்.
பாஸ்மதி அரிசியைவிட பொன்னி போன்ற அரிசி வகைக்கு ஒரு
பங்கு அரிசிக்கு, மூன்று பங்கு ஜலம் தேவையாக இருக்கிறது.
அரிசி ரகத்தை மனதிற்கொண்டு , ஜலம் சேர்க்கவும்.
இனிப்பும் விருப்பத்திற்கிணங்க கூட்டி, குறைக்கலாம்.
பொங்கல் பானைக்கு அலங்காரம் செய்வதுபோல குக்கருக்கும்
மஞ்சள் கட்டி குங்கும அலங்காரம் செய்து,
ஹாட் ப்ளேட்டானாலும், காஸ் அடுப்பானாலும் அதற்கும்
கோலம் போட்டு பொங்கலைக் கொண்டாடுவதுதான்
இப்பொழுது வழக்கமாக உள்ளது.
எது சௌகரியமோ அதன்படி இனிப்பான பொங்கலைச் செய்வோம்
வெல்லம் நிறத்தின்படிதான் பொங்கலின் கலரும் அமையும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 4:06 முப இல் ஜனவரி 12, 2011
தங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சர்க்கரைப் பொங்கலின் செய்முறை நன்றாக உள்ளது.
என் சொந்த ஊர் பன்ருட்டி.தற்காலிகமாக வசிப்பது USA ல்.
சிறுவந்தாட்டில் பட்டுச் சேலை நெய்வதை தினமும் பார்த்திருக்கிறேன்.அவ்வூருக்கு அருகில்தான் பூவரசங்குப்பம் உள்ளது.ஆனால் அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.தங்களுடன் பேசியதில் மிகுந்த சந்தோஷம்.
2.
chollukireen | 10:22 முப இல் ஜனவரி 13, 2011
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசியுடன் கூடிய இனிமையான பொங்கல் நல் வாழ்த்துக்கள் நான் குளிர் காலத்தைக் கழிக்க மும்பை வந்துள்ளேன். வடை,பாயஸ,பொங்கல், மற்றும் குறிப்புகளைப் பார்த்து மிகவும் ஸந்தோஷம். யாவும் நன்றாக உள்ளது. ஒருவர்க்கொருவர் யாவற்றையும் பகிர்ந்து கொள்வதின் உணர்வே அலாதியானது. அன்புடன் சொல்லுகிறேன்
3.
மகி | 7:27 பிப இல் ஜனவரி 13, 2011
இந்த முறை பாஸ்மதி பொங்கல்தான் எங்க வீட்டில்!
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா!
4.
chollukireen | 7:47 முப இல் ஜனவரி 14, 2011
போட்டோ போட்டிருக்கிறேனே அதுவும் பாஸ்மதி பொங்கல்தான். கேஸரி ருசி பாஸ்மதியில் எட்டி, எட்டிப் பார்க்கிறதுபோலத் தோன்றிவிடுகிறது. வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி மகி.
5.
ramasamy | 10:23 முப இல் பிப்ரவரி 22, 2011
tamil
6.
chollukireen | 12:33 பிப இல் பிப்ரவரி 23, 2011
உன்னுடைய கமென்ட் நன்ராக உள்ளது. தக்காளி அரைத்து சேர்ப்பதில் கலர் ,கிரேவி இரண்டுமே நன்றாக வரும். மஸாலா கட்டாயம் போட அவசியம் எதுவும் இல்லை…என்னுடய பிள்ளைகள் வீட்டில் கூட சமையலில் வெவ்வேறு வித்தியாஸங்கள் உள்ளது. சமையலில் வெவ்வேறு அவதாரங்கள் என்று தமாஷாகச் சொல்லுவேன். ருசி அவசியம். என் அன்பான நன்றிகள்.
7.
chollukireen | 12:40 பிப இல் பிப்ரவரி 23, 2011
ஆசிகள். என்ன தமிழ் என்று எழுதி விட்டு விட்டீர்கள். பொங்கலெல்லாம் செய்து கொண்டாடினீர்களா. சுபஸ்ரீயுடன் பேசினதெல்லாம் சொல்லுகிறேனைப் பற்றிதான். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
அடிக்கடி வந்து கருத்து தெறிவியுங்கள். அன்புடன் காமாட்சி மாமி.
8.
Akillan | 8:53 முப இல் ஜனவரி 11, 2013
HI
MAM REALLY VERY USEFUL TIPS FOR ME
9.
chollukireen | 10:33 முப இல் ஜனவரி 11, 2013
உங்களின் முதல் வருகையை அன்புடனும்,பொங்கல் வாழ்த்துக்களுடனும்,அன்புடன் வரவேற்கிறேன். ரஸித்து ருசியாகச் செய்து
கடவுளுக்கு அர்ப்பணித்து உண்டு மகிழவும். அன்புடன்
10.
chollukireen | 12:59 பிப இல் ஜனவரி 9, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இரண்டு வருஷத்திற்கு முன் எழுதியது. வெல்லம் சற்று கலர் குறைவாக இருந்தால் பொங்கலும் அதேமாதிரி வருகிறது.
நல்ல பாகு வெல்லமாக இருந்தால் கலரே அலாதியாக இருக்கும். நான்கு நாட்கள் முன்னர் கொடுத்தால் பலருக்குப் பதிவு உபயோகமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்செய்யும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். அம்மா என்று அழைக்கும் பலபேர் எனக்கு வலைப்பூவில் உண்டு. அவர்களுக்கும்,மற்றும் எல்லோருக்கும் பசுமஞ்சள் குங்குமத்துடன் வெற்றிலைப்பாக்கும், பழமும்,ஒரு ரூபாய் அன்பளிப்புடன் எடுத்துக் கொள்ளுங்கள் பொங்கல் ஆசிகளும்,
அன்புடனும் சொல்லுகிறேன்