ஆமவடை
ஜனவரி 12, 2011 at 10:47 முப 2 பின்னூட்டங்கள்
பொங்கலுடன் நிவேதனம் செய்ய வடை செய்யும் குறிப்பும்
இருந்தால் விசேஷம் தானே?
கலந்த பருப்பு வடையும் செய்யலாம். உளுத்தம் பருப்பு வடையும்
செய்யலாம். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
கடலைப் பருப்பு—அரைகப்
உளுத்தம் பருப்பு—அரைகப்
துவரம்பருப்பு—அரைகப்
காரத்திற்கு வேண்டியபடி—4, 5 மிளகாய்
சிறியதுண்டு–இஞ்சி, அரை டீஸ்பூன்சீரகம்
அரைடீஸ்பூன் பெருங்காயப் பொடி
வாஸனைக்கு—கொத்தமல்லி, கரிவேப்பிலை
வடையை ,வேகவைத்தெடுக்க வேண்டிய எண்ணெய்
பச்சரிசி—ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—4 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு
செய்முறை.—பருப்புக்களைக் களைந்து 3மணி நேரம் ஊற
வைக்கவும்.
அந்த ஒரு ஸ்பூன் அரிசியையும் தனியாக ஊற வைக்கவும்.
ஊற வைத்த பருப்பை வடிக்கட்டி 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு
தனியாக எடுத்து வைத்துவிட்டு, மிகுதி பருப்புடன் , இஞ்சி,
மிளகாய் உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்து, மிக்ஸியில்
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அவசியமிருந்தால் சிறிது
ஜலம் தெளிக்கவும். அரிசி,தேங்காய் சேர்த்து மேலும் ஒரு
முறை சுற்ற விட்டு எடுத்து, பருப்புக்களைச் சேர்க்கவும்
நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலையுடன் ஒரு டேபிள்-
-ஸ்பூன் காய்ச்சிய எண்ணெயையும் கலவையில் சேர்த்துக்
கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இலையிலோ,
அல்லது, பாலிதீன் பேப்பர் மேலோ வடைகளைத் தயாரித்து
போட்டெடுக்கவும்.
வடைகளை இருபுறமும் திருப்பிவிட்டு கரகரப்பாக வேக-
-விட்டு எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கி
உபயோகிக்கவும்.
மாமூலான வார்த்தை.நிதான தீயும் எண்ணெய் புகையாமலும்
இருப்பது அவசியம். இதன் பெயர்தான் ஆமவடை.
உளுத்தம் பருப்பு வடையும் எழுதுகிறேன். ஸரியா? இஷ்டம் உள்ளவர்கள் வெங்காயம், பூண்டும் சேர்த்தும் எந்தவிதமான வடைகளையும் தயாரிக்கலாம்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 7:31 பிப இல் ஜனவரி 13, 2011
😛 😛
இதுவும் பார்த்து ரசிக்க மட்டுமே!
2.
chollukireen | 8:08 முப இல் ஜனவரி 14, 2011
இது அதைவிட சுலபம் மகி. பகோடாமாதிரி பொரித்து கூட்டுகள், மோர்க்குழம்பு, பச்சடியில் கலக்கலாம். ரஸத்தில் கொஞ்சம் எடுத்து ஊரவைத்துக் கொடுத்தால் அதன் பெயர் ரஸ—-உனக்குத்தான் தெரியுமே. பருப்புகள் கூட முன் பின் அளவுகள் இருந்தாலும் பரவாயில்லை. ரஸித்துப் புசி.