கோஸ்வடை
ஜனவரி 13, 2011 at 7:26 முப 4 பின்னூட்டங்கள்
பழக்கமாகிவிட்டால் எதையுமே சுலபமாகச் செய்யலாம்.
இதுவும் அப்படிதான்.
முழு உளுத்தம் பருப்பு—1 கப் தோல் நீக்கியது
துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்—4
இஞ்சி—சிறிய துண்டு
பெருங்காயம்—சிறிது
பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி–அரைகப்
ருசிக்கு—உப்பு
பொரிக்க—வேண்டிய எண்ணெய்
8 மிளகு.—பொடித்தது
செய்முறை—–பருப்புகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற-
வைத்து வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாயையும் சேர்த்து அரைத்து விடலாம்.
லேசாக துளி ஜலம் தெளித்து அரைக்கவும்.
நல்ல மெத்தென்ற பதத்தில் மாவு இருந்தால் நல்லது.
உப்பு,கோஸ், கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து கொண்டு
வடைகளை தயாரித்து, எண்ணெயைக் காயவைத்து
வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
கையை ஈரப்படுத்திக்கொண்டு மாவை எடுத்து உருட்டி
பாலிதீன் பேப்பர்மேல் வைத்து ,வட்டமாக சமன் செய்து,
நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை காயும் எண்ணெயில்
நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-
-விட்டு எடுத்து வடிக்கட்டவும்.
ருசியானது. அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,
ஜலம், அரைப்பதில் அதிகமாகக் கூடாது
வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.
இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க
வேகவைத்தும் எடுக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது சீக்கிரமே சூடாகிவிடுவதால்
சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது அவசியமாகிறது.
கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த வடையிது. சமயத்தில் சிறிது
ஜலம் அதிகம் என்று தோன்றினால் ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,
உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப் பருப்பு விழுது காணும்.
வடையும் ருசியாக இருக்கும்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 7:30 பிப இல் ஜனவரி 13, 2011
வடை பார்க்கவே அருமையாக இருக்கிறது.:P கோஸுடன் சேர்த்திருக்கும் பொருட்களைப் பார்க்கும்போதே வடையின் ருசி தெரிகிறது. பார்த்து ரசித்துக்கறேன்! 😉
இந்த உளுந்துவடை வடிவம் நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை! பொதுவாகவே உளுந்துவடை செய்வது எனக்கு கொஞ்சம் வராது..பக்குவம் இல்லாமல் வடை எண்ணெயைக் குடித்தது ஒரு முறை..அதிலிருந்து செய்வதே இல்லை! 🙂
2.
chollukireen | 7:58 முப இல் ஜனவரி 14, 2011
ஜலத்தைக் குறைத்து விட்டு அரைத்து, குணுக்குமாதிரி சிறியதாகக் கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுத்துப் பார். ருசி ஒன்றே. மெது பகோடாவாக பெயர் மாற்றிக் கொண்டு ப்ளேட்டிலிருந்து பறக்க ஆரம்பித்துவிடும். வடிவம் வேண்டாம். ஒப்பனை போதும்.
3.
இளமதி | 6:36 முப இல் ஒக்ரோபர் 24, 2012
அம்மா நேத்திக்கு இந்த வடைதான் மஹாநவமிக்கு ஒரு பிரஸதமா செஞ்சேன்.
ரொம்ம்ம்பவே நல்லா வந்திச்சு.
எல்லாரும் விரும்பி சாப்பிட்டா. வடை உள்ளே நல்ல மெதுமெதுன்னும் வெளியே கிறிஸ்பியாவும் வந்திச்சு.
மிக்க நன்றிம்மா. அருமையான குறிப்பு தந்ததுக்கு:)
4.
chollukireen | 10:13 முப இல் ஒக்ரோபர் 24, 2012
வடை நன்றாக இருந்தது. செய்து சாப்பிட்டுப்ரஸாதம் நன்றாக இருந்தது என்று
எழுதியது கண்டு நானும் ப்ரஸாதம் சாப்பிட்ட
மாதிரி மனது மகிழ்ச்சியாயிற்று. உன்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லம்மா.
தெறிந்து கொள்கிறேன். அன்புடன்