மூங்ரா ஸப்ஜி
ஜனவரி 18, 2011 at 8:20 முப 4 பின்னூட்டங்கள்
முள்ளங்கிச் செடியின் காய்க்கு மூங்ரா என்று சொல்லுகிறார்கள்.
மெல்லிய வெங்காயத் தாள்போல சற்று உருட்சியாக இறுக்கிறது.
பனீர் சேர்த்தும், சேர்க்காமலும் ஸப்ஜி செய்கிறார்கள். ருசியும் வாஸனையும் முள்ளங்கியை ஒத்திருக்கிறது.
வேண்டியவைகள்.– மூங்ரா—அதுதான் முள்ளங்கிக்காய் கால்கிலோ
பனீர் துண்டுகள்—-10,அல்லது 15 துண்டுகள்
பச்சைமிளகாய்—3
பூண்டு இதழ்கள்—6
இஞ்சி—சிறிய துண்டு்
எண்ணெய்—2டேபிள்ஸ்பூன்
சீரகம்—அரைடீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி—நிறம் கொடுக்க
செய்முறை.—–பனீர்த் துண்டுகளை சிறிது எண்ணெயில்
லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்
. காயைக் காம்பு நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி அலம்பி வடிக்கட்டவும்.
இஞ்சி, மிளகாய், பூண்டை அரைத்துக் கொள்ளவும்.அல்லது
நசுக்கிக் கொள்ளவும். வாணலியோ, நான் ஸ்டிக்பேனிலோ எண்ணெயைச் சூடாக்கி சீரகத்தைத்தாளித்து அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.
மஞ்சளைச் சேர்க்கவும்.
விழுது வதங்கியதும் , நறுக்கிய காயைச் சேர்த்து, சிறிது
ஜலம் தெளித்து நிதான தீயில் மூடிவைத்து வதக்கவும்.
காய் வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கி.பனீரையும்
சேர்த்துப் பிறட்டி இறக்கவும். பனீரை உதிர்த்துப் போட்டும்
வதக்கலாம்.
கொத்தவரைக்காய் கறி மாதிரியும், தேங்காய், பருப்பு
சேர்த்தும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
இதுவும் டில்லியில் வின்டரில் கிடைக்கும் காய் வகை-
-தான். மாருதலான காய். ரொட்டி, டாலுடன் இதுவும்
ஒரு ஸப்ஜி.
Entry filed under: கறி வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 2:27 முப இல் ஜனவரி 20, 2011
நல்லவேளை,மூங்ராவின் படத்தைப் போட்டீங்க! 🙂
இப்படி ஒரு காய் இருப்பதை இந்தக்குறிப்பை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.புது காய்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி!
2.
chollukireen | 10:03 முப இல் ஜனவரி 21, 2011
எனக்கு பஞ்சாபி மருமகள் செய்து போட்ட ஸப்ஜி இது. இப்படியே போபால், அஸ்ஸாம் என சில குறிப்புகளும் எழுதுவேன். காய் தெரியும். இப்போது சமைக்கவும் தெரியும். அதுதான் விசேஷம்.
நன்றி உனக்கும்தான்.
3.
சித்ராசுந்தர் | 4:22 முப இல் ஜனவரி 26, 2011
முள்ளங்கியில் காயா? இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.என்றைக்காவது market ல் பார்த்தால் வாங்கிவிடுகிறேன்.மேலும் குறிப்புகளைக் காண (போபால், அஸ்ஸாம்) ஆவலாக உள்ளேன்.
4.
chollukireen | 5:20 பிப இல் ஜனவரி 27, 2011
முள்ளங்கிச் செடியில் பூ பூத்து, காயாகி, முற்றி,காயவைத்து பிறகுதான் விதைகள் எடுக்கப்படுகிறது..தமிழ் நாட்டில், இந்தக்காய் சமைக்க உபயோகம் என்று நானும் அறிந்ததில்லை, உங்கள் கேள்வி நியாயமானது.நான் தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொண்டேன். நன்றி.