கடலைப்பருப்பின் ஸப்ஜி

பிப்ரவரி 5, 2011 at 4:53 முப 7 பின்னூட்டங்கள்

இதுதான்   கடலைப் பருப்பில் செய்யும் டால்.

அதிகம் அரைத்து, கரைத்து விடாமல் சுலபமாக

செய்யக்கூடிய ஒன்று. தனித்த கடலைப் பருப்பில்

செய்வது.

வேண்டியவைகள்–

கடலைப் பருப்பு —அரைகப்

பெரிய பழுத்த தக்காளிப்பழம்—1

தோல்நீக்கிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைகப்

நெய்–1 டீஸ்பூன்

எண்ணெய்  –2 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி–கால் டீஸ்பூன்

மஞ்சள் பொடி –சிறிது

சீரகப்பொடி—கால் டீஸ்பூன்

இஞ்சி,பூண்டு  —நறுக்கிய சில துண்டுகள்

ருசிக்கு—உப்பு

கொத்தமல்லித்  தழை—வாஸனைக்கு

செய்முறை.—-பருப்பைத்   தண்ணீர் விட்டுக் களைந்து

திட்டமாக  ஜலம் சேர்த்து,  மஞ்சளும் போட்டு,ப்ரஷர்–

—குக்கரில்  மலர வேகவிடவும்.

வாணலியில் எண்ணெயும், நெய்யுமாக காயவைத்து

வெங்காயம்,இஞ்சி,பூண்டு வகைகளை நன்றாக வதக்கி,

பொடிகளையும் சேர்த்துப் பிரட்டி, தக்காளித் துண்டுகளை

-ச்     சேர்த்து நன்றாக வதக்கி   சிறிது ஜலம் சேர்த்துக்

கொதிக்க விடவும்.

உப்பு சேர்த்து,   பருப்பைச் சற்று மசித்தமாதிரி  வதக்கிய

கலவையில்   கலந்து  ஒரு கொதிவிட்டு இறக்கி,  மல்லித்தழை

தூவி   உபயோகிக்கவும்.

ரொட்டியுடன்   சேர்த்துச் சாப்பிட இதுவும் ஒரு வகை. சில பேர்

ஒரு துளி சக்கரையும் சேர்க்கிரார்கள்.

விருப்பம்போல்எதையும்   கூட்டிக்கழிக்கலாம்.அதுநம்கையில்

சிறிது  புதிநா, பாலக் இவைகளை ப் பொடியாக நறுக்கி

வதக்கும் போது சேர்க்கலாம்.

கடலைப் பருப்பின் ஸப்ஜி

Entry filed under: டால் வகைகள்.

அம்ருத்காஸப்ஜி. கத்தரிக்காய் காரக்கறி.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. chollukireen  |  11:44 முப இல் ஓகஸ்ட் 14, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இன்று மீள் பதிவிற்கு எனக்குக் கிடைத்தது இந்த ஸப்ஜி என்ற டால். இதுவும் ருசியானதுதான். பிடிக்கிறதா பாருங்கள். அன்புடன். பத்து வருஷ புராணபதிவு இது. அன்புடன்

    மறுமொழி
  • 2. ஸ்ரீராம்  |  12:18 பிப இல் ஓகஸ்ட் 14, 2021

    பாசிப்பருப்பில் செய்வோம்.  கடலைபபருப்பில் சொல்லி இருக்கிறீர்கள்.  செய்துபார்க்கிறேன்.  ஆனால் இந்த மாதம் முழுவதும் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டேன் என்று பாஸ் ஆடம் பிடிக்கிறார்.  அடுத்த மாதம் மாளயபட்சம் வேறு வந்துவிடும்!

    மறுமொழி
    • 3. chollukireen  |  12:27 பிப இல் ஓகஸ்ட் 14, 2021

      நவராத்ரியும் பிறகு வந்துவிடும்.. எனக்குச் சொல்லுகிறேனில் ஏதாவது போடவேண்டும். அவ்வளவுதான். அம்மாதிரிநிலை எனக்கு. படித்தவரை ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 4. Geetha Sambasivam  |  12:43 பிப இல் ஓகஸ்ட் 14, 2021

    My favorite sabji. Thank you amma. 🙏🙏🙏🙏🙏

    மறுமொழி
    • 5. chollukireen  |  1:26 பிப இல் ஓகஸ்ட் 14, 2021

      அட உங்களுக்கு பிடித்த வஸ்துவா மிக்க சந்தோஷமாக இருக்கிறது உங்கள் கமெண்ட் என்னால் எதுவும் எழுத முடியாததால் 10 வருஷத்திற்கு முன் எழுதிய இந்தக் குறிப்பு உங்களுக்கு கால் எப்படி இருக்கிறது அதே யோசனையாக இருக்கிறது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும் நம் பக்கத்தில் கூட்டு களுடன் சேர்த்து செய்வோம் கடலைப்பருப்பை அது ஒரு தனி ருசி உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 6. நெல்லைத்தமிழன்  |  11:17 முப இல் ஓகஸ்ட் 15, 2021

    இது புதுவிதமாக இருக்கிறது. கிச்சன் என் கையில் வரும்போது செய்துபார்க்கிறேன்.

    கீதா சாம்பசிவம் மேடம், ரொம்ப நல்லா இருக்கும் என்று எழுதியுள்ளதால் செய்துபார்க்கும் ஆர்வம் அதிகமாக வருகிறது.

    மறுமொழி
    • 7. chollukireen  |  11:36 முப இல் ஓகஸ்ட் 15, 2021

      நீங்களும் படித்தீர்களா? உங்களுடைய சமையல் திறனும் சேர்ந்து விட்டால் நன்றாகவே வரும். ஸந்தேகமே இல்லை. இதெல்லாம் வட இந்தியர்கள் செய்யும் விதம்தான். அடிக்கடி கிச்சனிலிருந்து வகை வகையாக எழுதுகிறீர்கள்.ஆர்வம் அதிகம் ஸந்தோஷம். நன்றியுடனும் அன்புடனும்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

பிரபலமான இடுகைகள்

வருகையாளர்கள்

  • 547,471 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: