கத்தரிக்காய் காரக்கறி.
பிப்ரவரி 16, 2011 at 10:58 முப 2 பின்னூட்டங்கள்
தினம் செய்வதில் ஒவ்வொன்று போடலாம்என்றுதோன்றியது.
பிரமாதமானது ஒன்றுமில்லை. கார கத்தரிக்காய் கறிசுலபமாக
செய்வதுதான். கறிப்பொடி எனது குறிப்புகளில் இருக்கிறது.
வேண்டியவைகள்.—-மீடியம் சைஸ்–உருளைக்கிழங்கு—4
சின்னசைஸ்—கத்தரிக்காய்—8
தக்காளி—1
பெரிய வெங்காயம்—-1
உறித்த பூண்டு—4 இதழ்கள்
மஞ்சள்பொடி—கால் டீஸ்பூன்.
கறிப்பொடி—-1டேபிள்ஸ்பூன்
கடுகு—-அரைடீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது
செய்முறை—-உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில்
நறுக்கி, தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.
பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய உருளைக் கிழங்கை 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுப்
பிசறி மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு ஹைபவரில்
5 நிமிஷம் வைத்தெடுக்கவும்.
கத்தரிக்காயை மெல்லிய நீண்ட துண்டுகளாக நறுக்கி நீரில்
அலம்பி வடியவிடவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகை வெடிக்கவிட்டு
முறையே பூண்டு, வெங்காயம், தக்காளி எனச் சேர்த்து சுருள
வதக்கி, கத்தரிக்காயைச் சேர்த்து , மஞ்சள்பொடி,உப்பு போட்டு
வதக்கவும். மிதமான தீயில், காய் வதங்கியதும்,மைக்ரோவேவ்
செய்த உருளைக்கிழங்கை சேர்த்து, கறிப்பொடியைத்தூவி
வதக்கி இறக்கவும். தாளிக்கும் போதே கறிவேப்பிலையை
சேர்த்து விடலாம்.
.கறிப்பொடிக்குப்பதிலாகதனியா,மிளகாய்ப்பொடிதேவைக்கேற்ப
வதக்கும்போது சேர்க்கலாம்.
வறுத்துப் பொடித்த வேர்க்கடலைப் பொடியும் சேர்க்கலாம்.
ஜெனிவாவில் எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் அக்ரூட்டைப்
பொடித்தும் சேர்ப்பார்கள். எந்த விதமாகிலும் சத்துள்ளவைகளைச்
சேர்த்தால் நல்லதுதானே. இந்த,பூண்டு , வெங்காயமெல்லாம்
சேர்த்துச் செய்தால் ரொட்டியுடன் சாப்பிட ஏற்றதாக அமையும்.
Entry filed under: கறி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 7:22 பிப இல் பிப்ரவரி 16, 2011
நாங்க கத்தரிக்காய்-உருளை கிழங்கு பொரியல்னு சொல்லுவோம் இதை. 🙂 கறிப்பொடி ரெசிப்பி இன்னும் பார்க்கலை,அது சேர்க்காமல்தான் செய்திருக்கேன்.
கறி பார்க்கவே நல்லா இருக்கு.
2.
chollukireen | 8:30 முப இல் பிப்ரவரி 17, 2011
கறி, வதக்கல் எல்லாம் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டதால் பொரியல்என்று எனக்குச்சொல்லவே வரவில்லை என்று நினைக்கிறேன்.இனி எழுதும்போது குட்டி குட்டியாக கறிப்பொடியின் ரெசிப்பியும் எழுத வேண்டும். செய்யும் ஒரு வகையில் நம் இஷ்டத்திற்கு மாற்றங்கள் சிறிது செய்தால் அதுவும் ஒருவகை புது ரெசிபிதான். பிஞ்சு கத்தரிக்காயின் டேஸ்டே அலாதி. அழகாக செய்து பார்த்து கமென்ட் கொடுத்தது மிகவும் திருப்தியாக இருக்கிரது.