ஆலுமட்டர் ஸப்ஜி
பிப்ரவரி 21, 2011 at 11:27 முப 1 மறுமொழி
இதை என்ன உருளை, பட்டாணி கூட்டு,கறி என்று சொல்லலாமா?
எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், ருசி என்னவோ
மாறப்போவதில்லை.ஹிந்தி தாக்கம் நிறைய இருக்கிறது என்னிடம்.
அவ்வளவுதான்.
வேண்டியவைகள்.——நடுத்தர அளவு,உருளைக்கிழங்கு 6
உரித்த பச்சைப் பட்டாணி—-1 கப்
அரைப்பதற்கு
திட்டமானசைஸ்—வெங்காயம் 3
பழுத்த தக்காளி—–2
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறிய துண்டு
பூண்டு—2 இதழ்கள்
பொடிகள்—-கரம்மஸாலா, தனியா,சீரகம் வகைக்கு1 டீஸ்பூன்
தாளிக்க,எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை–சிறியதாக 1
ருசிக்கு—உப்பு
நிறத்திற்கு—-அரைடீஸ்பூன் மஞ்சள்ப்பொடி
செய்முறை—–கிழங்குகளைத் தோல் சீவி சற்றுப் பருமனானதுண்டுகளாக
நறுக்கி நன்றாகத் தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.
இதனுடன் சுத்தம் செய்த பட்டாணியும் சேர்த்து 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் விட்டுக் கலந்து மைக்ரோவேவில் ஹைபவரில் 5நிமிஷங்கள்
வைத்து எடுக்கவும்.
அரைக்கக் கொடுத்தவைகளைத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில்
மென்மையாக அரைத்து எடுக்கவும்.
சமைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையைத்
தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து, நிதானமான தீயில் சுருளக்
கிளறவும்.
எண்ணெய் பிரிந்து கலவை சுருண்டு வரும்போது பொடிகள், உப்பு என
யாவற்றையும் போட்டு சற்றுப் பிரட்டி ஒன்றறைகப் தண்ணீர் சேர்த்துக்
கொதிக்க விடவும்.
ஆலு மட்டரைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு சற்றுக் கிரேவியுடனே
வேகவைத்து இறக்கி உபயோகிக்கவும்.
உருளைக் கிழங்கை, முழுதாக வேகவைத்து உரித்துத் துண்டங்கள்
செய்து, பட்டாணியை வேக வைத்தும் சேர்க்கலாம்.
சில காலிப்ளவர் துண்டங்களையும் வேகும்போது சேர்க்கலாம்.
மிளகாயிற்குப் பதில் பொடியும் சேர்க்கலாம்.
உப்பு காரம் கிரேவியின் அளவிற்குத் தக்கபடி அதிகரிக்கவும்.
ரொட்டி,பூரி, தோசை, ஏன் சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிட
ருசியானதுதான். மாதிரிக்குதான் புகைப்படம்.
Entry filed under: கறி வகைகள்.
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 4:09 முப இல் பிப்ரவரி 22, 2011
‘ஆலுமட்டர் ஸப்ஜி’ நல்ல கலர்ஃபுல்லாக உள்ளது.பார்த்ததும் சாப்பிடத்தோன்றுகிறது.
நீங்கள் சேர்த்துள்ளப் பொருள்களைத்தான் (கரம்மசாலா தவிர்த்து) நானும் சேர்ப்பேன்.நீங்கள் அரைத்து சேர்த்துள்ளதை நான் வதக்கிச் சேர்ப்பேன்.அவ்வளவுதான்.ஆனாலும் எனக்கு இந்தக்கலரில் வராது.ஒருவேளை அரைத்துச் சேர்த்தால் வருமோ! முற்சிக்கிறேன்.
இக்குறிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.