வெண்டைக்காய் ஸப்ஜி
மார்ச் 3, 2011 at 10:12 முப 2 பின்னூட்டங்கள்
நல்ல பிஞ்சு வெண்டைக்காயில் ஸப்ஜி செய்தால் ரொட்டிக்கு
மிகவும் ஏற்றதாக இருக்கும். வேண்டியவைகள்.
வெண்டைக்காய்—-கால்கிலோ
பெரிய வெங்காயம்—–2
பழுத்த தக்காளி –1
எண்ணெய்—2அல்லது 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி–சிறிது
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
கடுகு—அரைடீஸ்பூன்
விருப்பப் பட்டால்—கரம் மஸாலா சிறிது
செய்முறை—–வெண்டைக்காயைத் தண்ணீரில் அலம்பித்
துடைத்து சுத்தமான துணியில் பரத்தி ஈரத்தைப் போக்கவும்.
காயைச் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் தனித்தனியாக பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காயுடன் ஒருஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து
மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு 4 நிமிஷம் ஹை பவரில்
மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
வாணலியோ,நான்ஸ்டிக் பேனோ எண்ணெயைக்
காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு வெங்காயத்தைச்
சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
சுருள வதக்கி, உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்துக்
கிளறி , வெண்டைக்காயையும் சேர்த்து , ஸிம்மில் வைத்து
நன்றாக வதக்கவும்.
காய் வதங்கியதும் இறக்கி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சாப்பிட ஸப்ஜி தயார்.
வெண்டைக்காயுடன் துளி ஆம்சூரோ.அல்லது துளிபுளி
பேஸ்ட்டோ கலந்து மைக்ரோவேவ் செய்து தக்காளி
வெங்காயம் போடாமல் கடுகை தாளித்து எண்ணெயில்
வதக்கி உப்பு காரம் போட்டு உபயோகிக்கலாம்.
காயை 2 அங்குல நீளத்திற்கு மிகவும் மெல்லியதாக நறுக்கி
உப்பு காரம் பிசறி எண்ணெயில் நேரடியாக வறுவலாகவும்
வறுத்தெடுக்கலாம்.
இப்போது நான் செய்தது ஸப்ஜிதான். இப்படியே வீட்டில்
செய்தது போட்டிருக்கிறேன்.
புளி, ஆம்சூரெல்லாம் உபயோகிப்பது காயின்
கொழகொழப்பை நீக்குவதற்கே.
கரிப்பொடி தூவியும் செய்யலாம்.
Entry filed under: கறி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 7:35 பிப இல் மார்ச் 5, 2011
நன்றாக இருக்கிறது. வெண்டைக்காய் பிசுபிசுப்பு வராமல் சூப்பரா செய்திருக்கீங்க!
இங்கே வெண்டைக்காய் யானை விலை குதிரை விலை விற்கிறது. சீஸன் இல்லை போலும்.விலை குறைந்ததும் செய்து பார்க்கிறேன்.நன்றி!
2.
chollukireen | 10:09 முப இல் மார்ச் 7, 2011
விலையைப் பற்றி எதையும் பற்றி யோசனை செய்ய வேண்டாத ஸீனியர் ஸிடிஸன் டிபார்ட்மென்ட் எனக்கு மிகவும் அனுகூலம். பிசுபிசுப்பில்லாத உன்னுடைய கமென்ட் மிகவும் ரஸிக்கும்படி இருந்தது. நிதானமாகச் செய். அவஸரம் ஒன்றுமில்லை. அன்புடன்