பாலக் பன்னீர்
மார்ச் 10, 2011 at 6:19 முப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
பாலக்கீரை—250 கிராம் வரை
அரைக்க சாமான்கள்
வெங்காயம்—-3
பூண்டு—3 இதழ்கள்
இஞ்சி—சிறியதுண்டு
நல்ல சைசில் தக்காளி—-1
பொடிகள்
மிளகாய்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்
ஜீராப்பொடி—-அரைடீஸ்பூன்
கரம் மஸாலா–கால்டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது.
ருசிக்கு உப்பு
பன்னீர்—200 கிராம். திட்டமான துண்டுகளாக செய்து
கொள்ளவும்.
தாளிக்க, பன்னீர் பொரிக்க வேண்டிய எண்ணெய்
செய்முறை. கீரையைத் தண்ணீரில் அலசவும்.
கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் சற்று வேகவைத்து
தண்ணீரை வடிக்கட்டி தனியாக வைக்கவும். வெந்த
கீரையைக் குளிர்ந்த நீரைவிட்டு அலசி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை ஜலம் சேர்க்காமல்
மிக்ஸியிலிட்டு அரைத்தெடுக்கவும்.
கீரையையும் தனியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான
சூட்டில், துண்டுகள் செய்யப் பட்ட பன்னீரை இலேசாக
வறுத்தெடுக்கவும். வேறொரு நான் ஸ்டிக் வாணலியில்ல்
சிறிது நெய்யும் எண்ணெயும் கலந்து சூடாக்கி அரைத்த
வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து நிதான தீயில்
வதக்கவும். நன்றாக வதங்கி சுருண்டு
எண்ணெய் பிரிந்து வரும் போது பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி, அரைத்த பாலக் விழுதையும் சேர்த்துக் கிளறவும்.
வேண்டிய அளவிற்கு, கீரையை வேக வைத்து வடிக்கட்டிய
நீரைச் சேர்த்து கொதிக்க வைத்து பொரித்த பன்னீரைச்
சேர்த்து திட்டமாக உப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு
இறக்கவும்.
கீரை நிறம் மாறாமலிருக்க உப்பைக் கடைசியில்
சேர்க்கிறோம்.
பன்னீரை வறுக்காமல் சேர்ப்பவர்களும் உண்டு.
எல்லாவற்றுடனும் சேர்த்துச் சாப்பிட பாலக் பன்னீர்
தயார்.
.கீரையை நறுக்கி மைக்ரோவேவில், 5, 6 நிமிஷங்கள்
வேகவைத்து , பிறகு அரைத்துச் சேர்த்துச் செய்வதும்
உண்டு
இந்த முறையிலும் கீரை பச்சென்று நிறம் மாராமல்
இருக்கும். பன்னீர் கூட்டிக் குரைக்கலாம்.
Entry filed under: கறி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 4:59 பிப இல் மார்ச் 20, 2011
பாலக் பிடிக்கும்,பனீர் அவ்வளவா பிடிக்காது. அதனால் இந்த ரெசிப்பி பக்கம் வரவே மாட்டேனே! 😉
2.
chollukireen | 9:30 முப இல் மார்ச் 21, 2011
கமென்ட்ஸ் எழுதியதற்கு நன்றி. இப்படியே வந்து கொண்டிரு.