நெல்லிக்காய் ஊறுகாய்
மார்ச் 15, 2011 at 6:16 முப 7 பின்னூட்டங்கள்
இதற்கு நல்ல நெல்லிக்காய் அதுதான் தோப்பு நெல்லிக்காய்
என்றும் சொல்வார்களே அந்த வகைதான் தேவை.
அறி நெல்லிக்காய் என்றும் மற்றொரு வகை உண்டு. அது
ஜூஸ்,சட்னி , கலந்த சாதங்கள் செய்ய பயன்படும்.
நான் பெறியவகை நெல்லிக்காயில் ஊறுகாய் தயாரித்ததை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வேண்டியவைகள்
நெல்லிக்காய்—அரைகிலோ
நல்லெண்ணெய்—அரைகப்
மிளகாய்ப்பொடி—-5 டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்கசாமான்கள்
1 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் சீரகம்
3 டீஸ்பூன்—கடுகு
மற்றும் மஞ்சள்பொடி—-2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி–2 டீஸ்பூன்
உப்பு.—4 டேபிள்ஸ்பூன்
நல்ல வினிகர்—6 டேபிள்ஸ்பூன்
செய்முறை.——வெறும் வாணலியைச்சூடாக்கிவெந்தயத்தைச்
சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடுகு, சீரகத்தை வாஸனை வறும்படி வறுக்கவும்.
ஆறினபின் மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
அலம்பித் துடைத்த நெல்லிக்காய்களை, வாணலியில் சிறிது
2 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து , அதில் போட்டு லேசாக
வதக்கி இறக்கவும்.
காய்கள் ஆறியவுடன், பகுதி,பகுதியாக சிறுகத்தியின் உதவி
யுடன் இதழ்களாகப் பிறித்துக் கொட்டைகளை நீக்கவும்.
உப்பை, அரை கப் ஜலம் விட்டுக் காய்ச்சி சற்று சுண்டியதும்
இறக்கவும்..
அகன்ற ஜாடிக் கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி,வெந்தய,
கடுகுப் பொடிகள், சீரக,பெருங்காயப்பொடிகள், இவைகளுடன்,
நெல்லிக்காய்த் தளர்களைச் சேர்த்து மிகுதி எண்ணெயைக்
காய்ச்சி விடவும்.
உப்பு ஜலம், வினிகர் இவைகளையும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு ஸரி பார்த்துக் கிளறி சுத்தமான பாட்டிலில் எடுத்து
வைத்து, 2, 3 நாட்கள் ஊற விடவும்.
தினமும் சுத்தமான ஈரமில்லாத கரண்டியினால் கிளறவும்.
பிறகு பாட்டிலின் வாயில் மெல்லிய துணியினால் கட்டி
மூடி , நல்ல வெய்யிலில் 4, 5 நாட்கள் வைத்து எடுக்கவும்.
உப்பும், எண்ணெயும் சற்று அதிகமிருந்தால் ஊறுகாய்
கெட்டுப் போகாது.
காற்று புகாத அழுத்தமான மூடியினால் பாட்டிலை மூடி
உபயோகிக்கவும்.
சாதாரணமாக நெல்லிக்காய் சீக்கிரம் கெட்டுப் போகக்
கூடிய வஸ்து. ஆதலால் பிரிஜ்ஜில் வைத்து வேண்டிய
அளவு வெளியில் எடுத்து உபயோகித்தால் மிகவும் நல்லது.
நல்ல ருசியான ஊறுகாய்.உ ப்பு, காரம், எண்ணெய் ருசிக்குத்
தக்கபடி அதிகமாக்கலாம்.
Entry filed under: ஊறுகாய் வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
devimeenachi க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 4:58 பிப இல் மார்ச் 20, 2011
எனக்கும் ஊறுகாயிற்கும் வெகுதூரம்! நான் விரும்பி சாப்பிடுவது மாங்காய் ஊறுகாய் மட்டும்தான். ருசி பார்க்காமலே வேண்டாம் என்கிறாய் என்று என் அம்மா எப்பவும் குறைபட்டுக்கொள்வார்கள்! 🙂
இந்த ஊறுகாயும் நன்றாக இருக்கு காமாட்சிமா!
2.
chollukireen | 9:48 முப இல் மார்ச் 21, 2011
மகி ஊறுகாய் போடுவது என்னுடைய ஹாபி. இப்படிதான் ஆகஸ்டிலே நியூ ஜெர்ஸி வந்திருந்தேன். ஒயிட் ஜிஞ்சர் தலைப்பைப் பார்த்துவிட்டு கடையில், மாங்கா இஞ்சி போல இருக்கே என்று யோசனை செய்து அதை உடைத்து, முகர்ந்து பார்த்து பரிசீலித்துவிட்டு அரைகிலோ வாங்கிவந்து, 4நாள் பிரிஜ்ஜில் வைத்து, ஜெனிவா எடுத்துவந்து ஊருகாய் போட்டுவிட்டுதான் மறுவேலை. அதுவும் நாட்பட இருக்கும்படி.
ஊறுகாய் எப்படி இருக்கு என்று குசலம் வேறு விசாரிக்கிறேன். வெளிநாட்டில் நம் நாட்டுப் பொருள்களைப் பார்த்தால் என்ன குஷி தெறியுமா. ஊறுகாய்ப்புராணம் நிறைய இருக்கு.ஓ.கேயா
3.
ranjani135 | 8:19 முப இல் ஜனவரி 11, 2013
எனக்கு ஊறுகாய் போட வராது. அம்மா தான் போட்டுக் கொடுப்பாள். இப்போது ப்ரியா ஊறுகாய்கள் தான்.
உங்களது பின்னூட்டத்தில் ஊறுகாய் புராணம் நிறைய இருக்கு என்று எழுதி இருக்கிறீர்களே, ஒவ்வொன்றாக எழுதுங்களேன்.
4.
chollukireen | 10:39 முப இல் ஜனவரி 11, 2013
ஏதோ கொஞ்ஜம் ஊறுகாய் வகைகள் எழுதியிருக்கேன். எனக்கு ஹாபி ஊறுகாய் போடுவதுதான். போட்டு, படமெடுத்து, எழுதி போஸ்ட் செய்யணும். சீஸன்லே செய்யறேன். உங்கள் அக்கரைக்கு மிகவும் நன்றி. பால்ப் போளி ருசியுங்கள். அன்புடன்
5.
Manju krishna | 1:54 பிப இல் ஜூன் 13, 2016
வேப்பிலை கட்டி நெல்லி கடாரங்காய் ஊறுகாய் சமையல் குறிப்பு பிரமாதம் அடுத்த பதிவில் ஒக்காரை அரவணை எல்லாம் சொல்லுங்க
6.
devimeenachi | 2:38 பிப இல் செப்ரெம்பர் 11, 2016
Please your phone no give me
7.
chollukireen | 9:44 முப இல் செப்ரெம்பர் 12, 2016
நான் வெளிநாட்டிற்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டுமானால் ப்ளாகிலேயே விவரம் கேளுங்கள். கொடுக்கிறேன். அன்புடன்