குழம்புக் கருவடாம்
மார்ச் 23, 2011 at 10:07 முப 2 பின்னூட்டங்கள்
நல்ல வெய்யில் காயும் போது இந்தமாதிரி வடாங்களைத்
தயாரித்து வைத்துக் கொள்வதுண்டு.
பருப்பு வகைகளில் தயாரிக்கும், இவ் வடாங்கள் கூட்டு,குழம்பு,
டால்கள், வத்தக்குழம்புகள், சாம்பார் என எல்லாவற்றுடனும்
எண்ணெயில் வறுத்துப் போட்டு செய்தால் மாறுதலுக்கு ஒரு
ருசி கிடைக்கும். இப்போதுதான் யாவுமே ரெடிமேடாக
.கிடைக்கிறது. அது வேறு விஷயம்.
இன்ட்ரஸ்ட் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாமே.
நான் ப்ளாகில் போடுவதற்காக இந்த பாம்பே வெய்யிலையும்
சற்று உபயோகிக்கலாமே என்று செய்தேன். கிழக்கு மேற்காக
அமைந்த டூப்ளே அபார்ட்மென்ட் இது. காலையில்
பக்கவாட்டு வெய்யிலும் 2மணிக்குமேலே மேற்கத்திய
வெயிலும் உதவி செய்தது. துணியாலே மூடிமூடி
காயவைத்து ரொம்பவே அக்கரையாக செய்திருக்கிரேன்.
வேண்டிய சாமான்கள்
உளுத்தம் பருப்பு—-1 கப்
மிளகாய் வற்றல்—-4
வாஸனைக்கு —ஒரு டீஸ்பூன் மிளகு சீரகம்
ஒருகப்—-துருவிய வெள்ளை பூசணிக்காய்
திட்டமாக உப்பு.
செய்முறை—-உளுத்தம் பருப்பை நன்றாகக் களைந்து
தண்ணீரில் 4மணி நேரம் ஊரவைத்து வடித்து மிளகாய்
சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அறைத்துக்
கொள்ளவும்.
பூசணித் துருவலை ஒட்டப் பிழிந்து சேர்க்கவும்.
உப்பு, மிளகு சீரகப்பொடியையும் கலக்கவும்.
அகலமான ட்ரேயின் மீது பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி
வடாம் இட ட்ரே தயாரிக்கவும்.
ட்ரேயைத்தண்ணீரால் துடைத்துவிட்டு கையை ஈரமாக்கிக்
கொண்டு அறைத்த மாவை சிறு பகோடாக்கள் மாதிரி
ஒன்றிற்கொன்று இடம் விட்டு உருட்டிவைத்து ட்ரேயை
வெய்யிலில் வைத்து காயவிடவும்.
நல்ல வெய்யிலில் காயவைத்து மறுநாள் திருப்பிப் போட்டு
கருவடாங்களைக் காயவைக்கவும்.
ஈரப்பதம் போய் நன்றாக மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு
வெய்யிலில் காயவைத்து காற்றுப் புகாத பாட்டில்களில்
சேமித்து வைக்கவும்.
வேண்டிய போது வறுத்து கூட்டு, குழம்புகளில் சேர்க்கலாம்.
நாட்டுப்புரத்து குறிப்புகளாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நான் வெங்காயத்தை சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன்
வெந்தயக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம்.
தனி பயத்தம் பருப்பிலும், காராமணி, தட்டைப் பயறு
சேர்த்தரைத்தும் கருவடாம் இதேமுறையில் தயாரிக்கலாம்.
தயாரிப்பது பெரிய காரியமில்லை. வெய்யிலில்
காயவைத்தெடுப்பதுதான் பெரிய காரியம்.
வட இந்தியர்கள் தயாரிப்பில் கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,
லவங்கம், என யாவும் முழுதாகவே சேர்த்தும் காரமாக
தயாரிக்கிரார்கள். தயாரிக்க முடிகிறதோ இல்லையோ எப்படி
எதில் தயாரிக்கிறார்கள் என்பதாவது அறியமுடிகிறது
அல்லவா.படம் ஒரு மாதிரிக்குதான்.
Entry filed under: வடாம் வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 1:07 முப இல் மார்ச் 24, 2011
வடாம் நன்றாக இருக்கிறது. காய்ந்தபின் படமெடுக்கலயா காமாட்சிமா?
இதெல்லாம் எனக்குபுதுசா இருக்கிறது..ஊருக்குப் போகையில் முயற்சித்துப்பார்க்கிறேன். இங்கே இன்னும் வெயில் அவ்வளவு சூடு இல்லை.
2.
chollukireen | 6:38 முப இல் மார்ச் 25, 2011
காய்ந்த பிறகு எடுத்தது போட்டிருக்கவேண்டும். திரும்ப போட முயற்சி செய்து ப்ளாகில் போட்டேன். ஸம்திங் ராங் வரவில்லை. வரவிற்கு ஸந்தோஷம்மகி.