மணத்தக்காளிக்கீரைக் கூட்டு. எளியமுறை.
ஏப்ரல் 5, 2011 at 10:02 முப 4 பின்னூட்டங்கள்
மிகவும் சுலபமான மருத்துவ குணமுள்ள எளிய கூட்டு இது.
வேண்டியவைகள்
மணத்தக்காளிக் கீரை—-2கட்டு
தேங்காய்த்துருவல்—அரைகப்
பயத்தம்பருப்பு—–அரைகப்
மிளகாய்—2
சீரகம்–1 டீஸ்பூன்
உளுத்தம்பருபபு—2 டீஸ்பூன்
பூண்டு.உறித்த இதழ்கள்—3
நெய்—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
சிறிது, கடுகு, பெருங்காயம்.
செய்முறை.
கீரையின் இலைகளை ஆய்ந்து நறுக்கி த் தண்ணீரில்
நன்றாக அலசி வடிக்கட்டவும்.
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை சற்று சிவக்க வாஸனை
வரும்படியாக வறுத்துக் கொள்ளவும்.
துளி நெய்யில் மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு
பூண்டையும் சேர்த்து இறக்கவும்.
ஆறினவுடன் தேங்காய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக
அறைத்துக் கொள்ளவும்.
வறுத்த பருப்பை நன்றாகக் களைந்து ஒண்ணரைகப் ஜலமும்,
கீரையும் , மஞ்சள் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 2 விஸில் விட்டு
நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கீரை, பருப்புடன் அரைத்த கலவை, வேண்டிய
உப்பு சேர்த்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
ஒரு தக்காளியையும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் முதலானவைகளை ஆற்றும்
குணமுள்ளது இக்கீரை. காய்களையும்.பச்சையாக சமைத்தும்
வற்றலாகச் செய்தும் உபயோகப் படுத்துதல் இன்றும் நடை
முறையில் உள்ளது. பத்தியச் சாப்பாடுகளில் மணத்தக்காளி
வற்றல் முதன்மையானது.
Entry filed under: கூட்டு வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 4:13 முப இல் ஏப்ரல் 7, 2011
மணத்தக்காளி கீரையெல்லாம் இங்கே கிடைக்காது..கூட்டு நல்லா இருக்குமா! கீரையையும் குக்கரில் வைக்கணுமா? வதக்கினாலே வெந்துருமே?!
ஸ்பினாச் வாங்கும்போது செய்துபார்க்கிறேன். நன்றி!
2.
chollukireen | 5:22 முப இல் ஏப்ரல் 7, 2011
எல்லா கீரை கூட்டுகள் மாதிரி ருசியாகவே இருக்கும். பயத்தம் பருப்பு தேங்காயெல்லாம் வேறெ இருக்கிறதே. ஜெனிவாவில் சில இடங்களில்,
பார்க்குகள் ஓரங்களில் பார்த்து தானாக முளைத்து புதராக இருப்பதை
பறித்துக் கொண்டு வந்த நிகழ்வுகளும் உண்டு.2009 ஸெப்டம்பரில் நயக்ரா நீர் வீழ்ச்சி பார்த்து விட்டு, அதுதான் மஞ்சள் ரெயின்கோட் போட்டுப் போய்
பார்த்துவிட்டு வரும்போது வழி எங்கும் புதரோடு புதராய் ஒரே மணத்தக்காளிச் செடிகள். அப்படியே நின்னூட்டேன். ஒரு பாம்புக் குட்டி ஒன்று ஓடுகிறது. வாம்மாவா. இன்னொரு தரம் செடியைப் பார்க்க வரலாம்
என்று பெண் சொல்லவே வழி எங்கும் செடியை எண்ணிக்கொண்டே வந்தேன். பருப்போடு கீரையைச் சேர்த்துப் போட்டால் மயமாக வெந்துவிடும். அமெரிக்காவிலும் செடியின் உபயோகம் தெறிந்தால் காப்பு
உறிமை வாங்கி விடுவார்கள் என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டேன்.
எல்லா கீரை வகைகளையுமே இந்தமாதிரி கூட்டு செய்தால் நன்றாகவே
இருக்கும்.கீரையை வதக்கி துவையல் செய்வதும் உண்டு. நீண்டபதில்.உன்
வரவுக்கு மகிழ்ச்சி.
வரவுக்கு மகிழ்ச்சி
3.
thulasi | 6:33 முப இல் ஜூன் 8, 2011
நன்றாக இருந்தது
4.
chollukireen | 9:42 முப இல் ஜூன் 8, 2011
துளசி உங்கள் முதல் வரவுக்கு மிகவும் நன்றியும், ஸந்தோஷமும். அடிக்கடி பார்க்கலாமா. அன்புடன் சொல்லுகிறேன்.