முள்ளங்கிக்கறி,அதன் கீரையுடன்.
ஏப்ரல் 15, 2011 at 11:03 முப 2 பின்னூட்டங்கள்
பிஞ்சு முள்ளங்கி அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம்
கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக
தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில்
போதுமென கறி செய்தேன்.
எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது ப்ளாகிற்காக ப்ளான்
செய்துவிடுகிறேன்.
ஒரு கட்டில் சின்னதாக நாலோ ஐந்தோ இருந்தது.
வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1
கடுகு, உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன்
ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர்
துளி சீரகப்பொடி, இஞ்சித்துருவல் சிறிது.
எண்ணெய்—2, 3 டீஸ்பூன்
ருசிக்கு –உப்பு
செய்முறை—
முள்ளங்கிக் கீரையை காம்பு, நரம்புகள் நீக்கிப் பொடியாக
நறுக்கித் தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.
முள்ளங்கியையும் தோல் சீவி மெல்லிய வட்டங்களாக
நறுக்கி நீரில் அலசி வடிக்கட்டவும்.
நான் ஸ்டிக் பேனில் எண்ணெய்விட்டுக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து
மிளகாயைஇரண்டாகக்கிள்ளிப்போட்டுஇஞ்சியுடன்வதக்கவும்.
கீரையை உடன் சேர்த்து வதக்கவும். மட்டரைச் சேர்த்துக்
,கிளரி நிதான தீயில் தட்டினால் மூடி சில நிமிஷங்கள்
வைக்கவும்.
கீரை வதங்க ஆரம்பித்ததும் முள்ளங்கி வில்லைகளையும்
சேர்த்து உப்பு, சீரகப் பொடி சேர்க்கவும்.
நீர் வற்றி நன்றாக வதங்கும்வரை வதக்கி இறக்கி
உபயோகிக்கவும்.
சுயமாக தன் மணத்துடன் ருசியாக இருக்கும்.
தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
வெங்காயம், பூண்டு, பயத்தம்பருப்பு முதலானவைகளும்
சேர்த்துச் செய்வதுண்டு. உடல் நலத்திற்குகந்த சாதாரண
ஸப்ஜி இது.
Entry filed under: கறி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 2:38 பிப இல் ஏப்ரல் 19, 2011
கறி சிம்பிளா,நன்றாக இருக்கிறது.
2.
chollukireen | 10:39 முப இல் ஏப்ரல் 20, 2011
அப்படியா ஸந்தோஷம்.