கடாரங்காய் ஊறுகாய்
ஏப்ரல் 28, 2011 at 8:54 முப 2 பின்னூட்டங்கள்
இதுவும் நாட்பட இருக்கும் ருசியான ஊறுகாய்தான்.
ஹிந்தியில் இதை கல்கல்என்று சொல்லுவார்கள். பழுத்த கடாரங்காயில்
ஊறுகாய் தயாரித்தல், கலந்த சாதம் தயாரித்தல் என எல்லாம் ருசியாக
இருக்கும்.
வேண்டியவைகள்—-
கடாரங்காய்—–3
வறுத்துப் பொடிக்க சாமான்கள்
கடுகு—-2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்—2 டீஸ்பூன்
பொடிகள்
பெருங்காயப்பொடி—-2 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—4 டேபிள்ஸ்பூன்
உப்புப் பொடி—–3டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்—முக்கால் கப்
கடாரங்காய் என்று சொல்லுகிறோமே தவிர இதுவும் பழுத்து மஞ்சள்-
-நிறம் வந்த பிறகுதான் ஊறுகாய் போடுகிறோம்.
அவசரத்திற்கு ஊறுகாய் போடுவதானால்காயைமுழுவதாகஎண்ணெயில்
வதக்கி, பிறகு நறுக்கி உப்பு காரம் சேர்த்து உபயோகிப்பதும் உண்டு.
நாம் நிதான முறையிலேயே செய்வோம்.
செய்முறை—-2 காய்களைச் சுருளாக நறுக்கி சிறிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது உப்பைக்கலந்துகசக்கினாற்போலதுண்டுகளைக் கலந்துவைத்தால்
,விதைகளைச் சுலபமாக நீக்க முடியும். விதைகளை நீக்கவும்.
ஒரு கடாரங்காயை இரண்டாக நறுக்கி அதன் ரஸத்தைப் பிழிந்து
நறுக்கிய துண்டுகளுடன் கலக்கவும்.
பாட்டிலிலோ, சுத்தமான ஜாடியிலோ மிகுதி உப்பைக் கலந்து 2அல்லது3
நாட்கள் நன்றாக ஊறவிடவும்.
ஊறின துண்டங்களை , பாட்டிலின் வாயில் ஒரு மெல்லிய துணியைக்
கட்டி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து எடுக்கவும்.
வெந்தயத்தைச் சிவப்பாக வறுத்து பொடிக்கவும்.
கடுகு, சீரகத்தைச் சூடு ஏறும்படி வறுக்கவும்.
யாவற்றையும் பொடிக்கவும்.
அடுத்து எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவிடவும்.
பொடி வகைகள்,யாவற்றையும் சேர்த்துக் கிளறி ஊறின கடாரங்காய்த்-
-துண்டுகளையும் சேர்த்துக் கலந்து பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.
ஊறஊற ருசியாக இருக்கும்.
கை படாமலும், மரக் கரண்டியினால் கிளறி விட்டும், அழுத்தமாக
மூடி வைத்தும் உபயோகிக்கவும்.
காயின் சைஸைப் பொறுத்து , உப்பு காரம் , ருசி பார்த்து கூட்டிக்
குறைக்கவும். எண்ணெய் அளவும் கூட்டவும்.
டில்லியில் போட்ட ஊறுகாய். படம் எடுக்க மறந்து போனேன்.
Entry filed under: ஊறுகாய் வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 8:28 பிப இல் மே 3, 2011
நார்த்தங்காயைத்தான் கடாரங்காய்னு சொல்றீங்களோ? ஊரிலே சித்தி வீட்டில் இந்தமரம் உண்டு.
நான் ஊறுகாய் செய்யும் அளவுக்கெல்லாம் அனுபவசாலி ஆகலை! ருசி-ஊறுகாய்தான்! 😉
2.
chollukireen | 9:47 முப இல் மே 4, 2011
இல்லையம்மா நாரத்தங்காய் வேறு. இது நீங்க இருக்கிர ஊரில் எலுமிச்சையாக நீண்ட சைஸில். பெறிய உருவாக, தோல் சற்று தடியாக கிடைக்கிரதே, அந்த
வகையைச் சேர்ந்ததிது. நல்ல வாஸனையாக இருக்கும். இங்கேயும் அந்த எலுமிச்சை கிடைக்கிறது. கடாரங்காய் இன்னும் சற்று பெரியதாக ஷேப் அம்மாதிரியே இருக்கும். உன் சித்தி வீட்டுக்குப் போனால் நாரத்தை இலை உபயோகித்து வேப்பிலைகட்டி செய்யவும்.. ஊருகாய்செய்யப் பழகினால் ருசி..யைவிட
ருசியாகச் செய்ய முடியும்…தமிழ்க் கடையில், இங்கு சில சமயம் நெல்லிக்காய்கூட கிடைக்கிரது. நாரத்தங்காய் ஊறுகாய்க்கு போஜன கஸ்தூரி என்று மிகவும் மதிப்பான பெயர் உண்டு. ஆர்வம் அனுபவசாலியாக மாற்றிவிடும். ஸரியா