பன்னீர் துக்கடா
ஏப்ரல் 29, 2011 at 5:41 முப 4 பின்னூட்டங்கள்
மிகவும் சுலபமாக தயாரிக்கலாம் இதை.
வேண்டியவைகள்.
பன்னீர்—-200கிராம்
ஸாம்பார் வெங்காயம்—உறித்தது 5 அல்லது 6
தக்காளி—-சின்னதாக 1
பச்சை மிளகாய்—-சின்னதாக ஒன்று
பச்சைக் கொத்தமல்லி இலை—–அரைகப்
பன்னீர் பொறிக்க வேண்டிய— எண்ணெய்
ருசிக்கு –உப்பு
செய்முறை—-பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
வெங்காயம்,மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில்
ஜலம் விடாமல் பேஸ்ட்டாக அறைத்துக் கொள்ளவும்.
அடுத்து நான் ஸ்டிக் பேனில் , நிதான தீயில் பரவலாக சிறிது எண்ணெய்
விட்டு சூடாக்கி பனீர் துக்கடாக்களைப் பரப்பவும்.
ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று
சிவக்கவைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்
நீக்கவும். ஒரு பாத்திரத்தில்தயாரான துண்டங்களின் மேல்
வேண்டிய அளவிற்கு அறைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில்
அலங்கரித்து வைக்கவும்.
பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.
பன்னீர் பிடித்தவர்களுக்கு துக்கடா ருசியான ஒன்று.
Entry filed under: சுலபமானது.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 8:26 பிப இல் மே 3, 2011
அட,சிம்பிளா நல்லா இருக்கே! 😛
2.
chollukireen | 11:59 முப இல் மே 4, 2011
மிகவும் சுலபம்தான்.
3.
வேங்கடநாராயண் | 2:32 முப இல் மே 8, 2011
எனக்கு எங்கம்மா செய்யுர இடியாப்பம்தான் சேவைனு இப்பதான் தெரியும்…நன்றி…! என் மனைவியிடம் படிச்சு காண்பிச்சேன் (அவளுக்கு தமிழ் பேசதான் வரும்
)
4.
chollukireen | 11:19 முப இல் மே 8, 2011
பாருங்கள் உங்கள் ஸந்தோஷத்தில் எனக்கும் பங்கு உண்டு. உங்களம்மா செய்யும் இடியாப்பம்தான் சேவை என்று தெறிந்ததும் எனக்கு ஒரு கமென்ட் அனுப்பி நன்றி சொல்லி இருக்கிறீர்கள். அதுவும் மதர்ஸ்டே. எனக்கும் ஒரு வாசகர் கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் மனைவி என்ன . என்னுடைய பிள்ளைகள் யாவருக்குமே தமிழ் பேசதான் வரும். அதனால் என்ன. நாம்தான் இருக்கிறோமே. உங்களைப் பற்றியும் தெறிந்து கொள்ள ஆவல். முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஸந்திப்போம்.