மஸாலாபொடி
மே 13, 2011 at 1:19 பிப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
சீரகம்—–100 கிராம்—-
மிளகு—50கிராம்
லவங்கம்—-15
பெறிய ஏலக்காய்—-8
வெந்தயம்—-100கிராம்
லவங்கப் பட்டை—-2அங்குல அளவு
வெறும் வாணலியைச் சூடாக்கி
மேற்கூறியவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சுக்கு—-2அங்குல நீளத்திற்கு 2துண்டுகள் சிறிது அதிகமோ,
குறைவோ ஆனாலும் பரவாயில்லை
.சின்ன ஏலக்காய்—12
ஜாதிக்காய்—–1
மஸாலா இலை—பிரிஞ்சி இலை–2
வறுத்த சாமான்களுடன் இவைகளையும் துண்டுகளாகச்
சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டால்
வேண்டியபோது, இதில் சிறிது போட்டால் சமையல்
மஸாலா வாஸனையுடன் ருசியாக இருக்கும். பொடியை
காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வீட்டில் பொடி இருந்தால் சமயத்திற்கு உதவும்.
Entry filed under: பொடி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 3:49 பிப இல் மே 13, 2011
நேத்துல இருந்து ப்ளாகர் ஏதோ ப்ரச்சனையாக இருக்கு. கூகுள் ப்ளாக்ஸ் எல்லாம் ஸ்தம்பிச்சுப் போயிருக்கு,Wordpress-ல நீங்க கலக்கறேள் அம்மா! 🙂
முதல் முறையா இந்த காம்பினேஷன்ல பொடி கேள்விப்படறேன். எந்த விதமான சமையல்ல இந்த மசாலாபொடி யூஸ் பண்ணலாம்னு சொல்லுங்களேன். குருமா? கறி? குழம்பு?
2.
chollukireen | 1:51 பிப இல் மே 17, 2011
இந்தப்பொடி தெறிந்தவர்கள் சொன்னதுதான். அதிகம் செய்யாவிட்டாலும் இந்தக் காம்பினேஷன்லே ஓரளவு ஸாமான்களைப் பொடித்துப் போட்டால்கூட நன்ராக இருக்கு. இங்கெல்லாம் எல்லாமே தனித்தனியாக பொடிகள்
கிடைக்கிரதே. முழுப்பருப்பு டால்கள், சோலே, கோப்தா, உருளைக்கிழங்கு மஸாலா
என இவைகளில் போட்டால் நன்றாகவே உள்ளது. சிரிய அளவில் உபயோகிக்கவும்.
ருசிகள் அவரவர்களுக்கு வேறுபடும்.. பதில் கொடுக்க தாமதமாகிவிட்டது.
சில சமயங்கள் கம்யூட்டர் பொருமையை சோதித்து விடுகிரது.