பாகற்காய் இனிப்புப் பச்சடி
மே 20, 2011 at 9:58 முப 2 பின்னூட்டங்கள்
கசப்பு காயாக இருந்தாலும் செய்யும் விதத்தில்
பச்சடி ருசியாக இருக்கும்.
பாகற்காய் பிடித்தவர்களுக்கு இது சுலபமாக தயாரிக்க
முடியும். கிரேவியைச் சுருக்கி கெட்டியாகத் தயாரித்தால்
ரொட்டியுடன் எடுத்துப் போக மிகவும் ஸௌகரியமானது.
எண்ணெய் சற்று கூட விட்டால் 2, 3, நாட்கள் வரை கெடாது.
வேண்டியவைகள்
திட்டமான நீளத்துடன் கூடிய பாகற்காய்—2
பச்சை மிளகாய்—–3
தோல்நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள்– –2
-டேபிள்ஸ்பூன்
புளி—ஒரு பெறிய நெல்லிக்காயளவு
வெல்லம் பொடித்தது–4,5 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு—ஒருடேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
ரஸப்பொடி—ஒருடீஸ்பூன்
கரிவேப்பிலை–சிறிது
எண்ணெய்—5, 6 டீஸ்பூன்
உப்பு—-ருசிக்கு
விருப்பப் பட்டால்–ஏலக்காய்-1
பாகற்காயை அலம்பி இரண்டாகப் பிளந்து விதைகளை நீக்கி
மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கசக்கின மாதிரி பிசறி ஒரு
பாத்திரத்தில் அழுத்தி வைக்கவும். புளியை ஊறவைத்து ,
2, 3 ,முறை ஜலம் விட்டு கெட்டியாகசாரு பிழிந்து வைத்துக்
கொள்ளவும். பாகற்காயை ஒட்டப் பிழிந்து ஒரு டீஸ்பூன்
எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் ஹை பவரில்
5, நிமிஷங்கள் வைத்து எடுக்கவும். காய் நன்றாக வெந்து விடும்.
நான்ஸ்டிக்பேனில்,எண்ணெயைககாயவைத்து,கடுகு,
பெருங்காயம், பருப்பைத் தாளித்து மிளகாய், கரிவேப்பிலை
இஞ்சி சேர்த்து வதக்கவும். வெந்த காயையும் உடன் சேர்த்து
வதக்கி புளி ஜலம் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம்,உப்பு
,ரஸப்பொடி சேர்த்து நிதானமாகக் கொதிக்க விடவும். ஏலக்காய்ப்
பொடி, மஸாலாப்பொடி வேண்டியவர்கள் துளி சேர்க்கலாம்.
குழம்பை நன்றாகக் கொதிக்க விடவும்.
குழம்பு திக்காவதற்காக ஒரு ஸ்பூன் அரிசி மாவைக்
கடைசியில்சிறிதுஜலத்தில் கரைத்துச் சேர்த்து ஒரு
கொதிவிட்டு இறக்கவும்.
காய் அதிகம் சேர்த்துச் செய்தால் சுருளக் கிளறினாலே போதும்.
மாவு அவசியம் இல்லை
.டிபனுடன் எடுத்துப்போக சௌகரியமாக இருக்கும்.
உப்பு காரம்,மற்றும் யாவும் காய்க்குத் தக்கபடி அதிகம்
சேர்க்கவும்.
-
- இனிப்பு, புளிப்பு கசப்பு, எல்லாம் கலந்த அறுசுவைப்
- பச்சடி. வாஸனையுடன் கூடிய பச்சடி.
- பாகற்காய்பிடித்தவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- நான்வீட்டிலசெய்ததால்உங்களுக்கும் பிடித்தவர்கள்
- செய்யட்டுமே என்று எழுதியிருக்கிறேன். பெருஞ்சீரகமும்
- பிடித்தவர்கள் தாளிப்பில் சேர்க்கலாம்.
Entry filed under: ஸ்வீட் கார பச்சடிகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 9:33 பிப இல் மே 27, 2011
ம்ம்ம்..சூப்பரா இருக்கு! 😛 😛 😛
2.
chollukireen | 1:25 பிப இல் மே 28, 2011
அப்பா உன் பதிலும் அப்படியே இருக்கு.ஸந்தோஷம்.