கார சாரமான பூண்டுப் பொடி
மே 30, 2011 at 8:38 முப 2 பின்னூட்டங்கள்
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை சேர்த்து செய்ததுதான்
சாப்பிடும்போது தனியாக சிறிது எடுத்து தயிர் கலந்தும் உபயோகிக்கலாம்.
Entry filed under: பொடி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 5:25 முப இல் ஜூன் 3, 2011
நல்லா இருக்கு காமாட்சிம்மா,சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.
2.
chollukireen | 12:35 பிப இல் ஜூன் 7, 2011
ஆமாமாம்.நான் செஞ்சு பார்த்து விட்டுதான் எழுதினேன். ருசி புரியறது. நன்றி