குர்ஜர் கறி
ஜூன் 7, 2011 at 12:30 பிப 4 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்.
குர்ஜர்—திட்டமானசைஸில்—4
மிளகாய்ப்பொடி—அரைடீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
சீரகப்பொடி–அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—துளி
வேர்க்கடலை–2 டேபிள்ஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்துப்
பொடிக்கவும்.
தாளிக்க எண்ணெய் —-4,5 டீஸ்பூன்
கடுகு—1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
துளி இஞ்சித் துருவல்
செய்முறை
குர்ஜரைத் தோல்சீவி சற்றுப் பெறிய துண்டங்களாகநறுக்கிக்
கொள்ளவும். அலம்பி நன்றாக வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியிலோ அல்லது நான்ஸ்டிக் பேனிலோ
எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பைத்
தாளித்து, தீயைக் குறைத்து நறுக்கிய தளரில் ஒரு பிடியைச்
சேர்க்கவும். வேர்க் கடலைப் பொடியைத் தவிர மற்றவைகளைச்
சேர்த்துச் சிறிது வதக்கவும்.
பூரா தளர்களையும் சேர்த்து உப்பு இஞ்சி சேர்த்துக் கிளறி
மூடிவைத்து 5 நிமிஷங்கள் வேகவிடவும்.
சற்று நீர் விட்டுக் கொள்ளும். திறந்து வைத்து வதக்கவும்.
வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து வதக்கினால் தண்ணீரை
ஓரளவு இழுத்துக் கொள்ளும்.
பாத்திர சூட்டிலே இருந்தால் ஸரியாக இருக்கும்.
வதக்கியகாயை இறக்கி, மல்லித்தழை தூவி உபயோகிக்கவும்.
ரொட்டி வகைகளுடனும். ஸாதாரண சாப்பாட்டுடனும் ஒத்துப்
போகும். கறி சேர்ந்தாற்போல இருக்கும்.
வேண்டுமானால் சிறிது ஆம் சூரும் சேர்க்கலாம்.
இந்தக் காயை,பஜ்ஜி போடும் போதும் உபயேகிக்க முடியும்.
ஸேலட்டிலும், இது பங்கு பெறுகிறது.
Entry filed under: கறி வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
டி.எஸ்.ஜெயந்தி | 5:36 முப இல் ஜூன் 8, 2011
அம்மா நலமா
குர்ஜர் என்றால் என்ன?
இங்கு இந்தியாவில் கிடைக்குமா?
பெயர் புதிதாக இருக்கிறதே!
ஜெயந்தி
2.
chollukireen | 9:39 முப இல் ஜூன் 8, 2011
இங்கே இந்தக் காயை இப்படிப் பெயர் சொல்கிறார்கள். ஏறக்குறைய நம் ஊர் இளம் பறங்கிக் கொட்டையின் மாதிரிதான் ருசி. சற்று நீண்ட காய்களாக இருக்கிரது. சில விசேஷமான காய்கறிக் கடைகளில்தான் இந்தியாவில் கிடைக்கிறது. நேபாலில் இருக்கும் போது கிடைக்கும். அதிகம் உபயோகித்தது இல்லை. ஜுகுனி என்றும் சொல்கிரார்கள். நுறை பீர்க்கங்காயை ஞாபகமூட்டுகிறது. உன் வரவுக்கு மிகவும் ஸந்தோஷமம்மா. அன்புடனும், நலத்துடனும்
மாமி
3.
மகி | 6:01 பிப இல் ஜூன் 9, 2011
குர்ஜர் என்ற பேர் புதுசா இருக்கே என்று பார்த்தேன், zuccini-யைதான் சொல்றீங்க என்று படத்தைப் பார்த்ததும் தெரிந்தது. இங்கே இந்தியன் ரெஸ்டாரன்ட்ஸ், ஆந்திரத்தோழிகள் வீடுகளில் இந்தக்காயை சாம்பாரில் ருசித்திருக்கேன். ருசி கிட்டத்தட்ட வெள்ளரிக்காயைப்போல இருக்கும். அப்படியே க்ரில் செய்தும் சாப்பிடலாம்.
நான் இதுவரை வாங்கலை,வாங்கிப்பார்க்கிறேன். ரெசிப்பிக்கு நன்றிமா!
ஜெயந்திமாமி, http://en.wikipedia.org/wiki/Zucchini –இதைப் பாருங்க,இன்னும் தகவல்கள் இருக்குது. (உங்களை அறுசுவை மூலம் தெரியும். 🙂 )
4.
chollukireen | 10:14 முப இல் ஜூன் 10, 2011
இதை இவ்விடம் அடிக்கடி உபயோகப் படுத்துகிறேன். விக்கிப்பீடியா மூலம் தகவல் கொடுத்தது
எல்லோருக்குமே உபயோகமாக இருக்கும். ஜாஸ்தி விவரம் எனக்குத் தெறியாவிட்டாலும்
பலவிதங்களில் சமைப்பதற்கு முயற்சி செய்து விடுகிறேன். தேங்காய், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சை, பயத்தம்பருப்பு என சிலதைச் சேர்த்து சோதனை செய்தேன்
என்று சொல்லணும். நீ , ஜெயந்தி எல்லாம் எனக்கு விட்டமின் B–12. ஸம்தோஷம் மகி.
அன்புடன்