பாலக்கீரை மசியல்
ஜூன் 24, 2011 at 9:46 முப 2 பின்னூட்டங்கள்
இதுவும் ஸாதாரண கீரை மசியல் போல்தான். கொஞ்சம்
வித்தியாஸம் தாளித்துக் கொட்டுவதில் தான்.
வேண்டியவைகள்
பாலக் கீரை—-400 கிராம்வரை. முன்னே பின்னே இருந்தாலும்
பரவாயில்லை. நன்றாக நறுக்கி அலம்பி நீரை வடிக்கவும்.
உறித்த பூண்டு—5 அல்லது 6 இதழ்கள்.பொடியாக நறுக்கவும்.
மிளகாய்ப் பொடி—காரத்திற்கேற்ப கால் டீஸ்பூனிற்கு அதிகம்
தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—அரைடீஸ்பூன்
தாளித்துக் கொட்ட—2 டீஸ்பூன் நெய்
சீரகம்–அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம்–1
ருசிக்கு–உப்பு
சோளமாவு—-ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை—அடி கனமான வாணலியில் நெய்யைச் சூடாக்கி
சீரகத்தை வறுத்து, பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கி,
சிறிதளவு
நறுக்கிய கீரையும்,பொடிகளையும் போட்டுப் பிரட்டிப் பின்பு
எல்லா கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கால் டம்ளர் ஜலம் சேர்த்து ருசிக்கு உப்பு, ஒரு சிட்டிகை
சர்க்கரை, நறுக்கிய தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்றாக
மூடிவைத்து நிதான தீயில் வேகவைத்து மசிக்கவும்.சோள
மாவைக் கெட்டியாக கரைத்துவிட்டு இரண்டு கொதி விட்டு
மசித்து இறக்கவும்.
இந்த மாதிரி என் போபால் சம்பந்தி செய்த கீரை மசியலிது.
சாதாரணமாக கீரையை நன்றாக வேகவைத்து மிளகாய்,
சீரகம், சிறிது தேங்காய், துளி அரிசியை மிக்ஸியில்
அரைத்துசேர்த்து மசித்து, கடுகு உளுத்தம் பருப்பை நெய்யில்
தாளித்துக் கொட்டிஉப்புப் போட்டாலும் கீரை ருசிதான்.
இதேமாதிரி வெங்காயம், பச்சைமிளகாய் பூண்டையும்
வதக்கிச் சேர்த்தும், அரைத்துவிட்டும் செய்யலாம்.
நாம் கீரை சேர்ந்தாற்போல இருக்க துளி அரிசிமாவு கரைத்து
விடுவோம்.
பாலக்கிற்கு சிறிது தக்காளி சேர்த்தால் ருசி கூடும்.
பெருங்காயம் அதுவும் வேண்டியவர்கள் சேர்க்கலாம்.
கீரை குறைவாக இருந்தால் வேகவைத்த பயத்தம் பருப்பு,
அல்லது துவரம் பருப்பு சிறிது சேர்த்தும் மசிக்கலாம்.
பருப்பு சேர்த்து மசிக்கும் போது ஒரு பச்சை மிளகாயை
காரத்திற்காக சேர்த்து மசிக்கலாம்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 4:39 பிப இல் ஜூன் 24, 2011
நீங்க சொல்லியிருக்கும் செய்முறைகள் எல்லாமே புது விதமான செய்முறைகளாக தெரிகிறது எனக்கு. எங்க வீட்டில் கீரை மசியல் வேறுமுறையில் செய்வோம்.
பாலக் இருக்கிறது..சீக்கிரம் செய்துபார்த்து சொல்றேன் காமாட்சிமா!
2.
chollukireen | 5:24 பிப இல் ஜூன் 24, 2011
செய்து பார்த்து விட்டு சொல்லம்மா. ரொம்ப ஸந்தோஷமாக இருக்கும். இந்த பாலக் விஜயம் செய்யாத இடமே இல்லை.ஸாம்பார்,மோர்க்குழம்பு,பகோடா, வடை,கூட்டு போண்டா என எதில் சேர்த்தாலும் கொள்ளை ருசி.. உன்னுடைய பக்குவங்களையும் கொடு. மீதி அப்புறம்