மட்ரி.
ஜூன் 28, 2011 at 10:09 முப 8 பின்னூட்டங்கள்
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு.
பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள்
போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச்
செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.
இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட
மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்.
மைதாமாவு—-2 கப்
ஓமம்—2 டீஸ்பூன்
மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்
செய்முறை.
ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாவைக் கொட்டி ஓமம், திட்டமான உப்பு
சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவில் சிறிது சிறிதாக மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
புட்டுமாவுபோல , மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால் பிடிபட
வேண்டும்.
உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.
செய்து பார்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஜலத்தைத் தெளித்து மிகவும்
கெட்டியான மாவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
அழுத்தமாகப் பிசைந்த மாவைத் திரட்டி பாதி மாவைச் சிறிய
உருண்டைகளாக உருட்டி அப்பளக் குழவியினால் சிறிய கனமான
வட்டங்களாகச் செய்து கொள்ளவும்.
போர்க்கினால் வில்லைகளின் மேல் குத்தி துளைகளிடவும்.
மீதிமாவைக் கனமான அப்பளாமாக இட்டு போர்க்கினால் குத்தி
கத்தியினால் துக்கடாக்களாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஜாஸ்தி புகையவிடாமல்
நிதானமான சூட்டில் இவைகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப்போட்டு
கிளறிவிட்டு பொறித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில்ஆறவிடவும்.
கரகரப்பான மட்ரி தயார்.
மாவு அழுத்தி இடும்படியான கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைய
வேண்டும். இது நன்றாக ஞாபகம் வைக்க வேண்டும்.
பெரிய அளவில் சற்றுப் பெரியதாகச் செய்து வைத்துக்கொண்டு
டிபனில் ஒரு அயிட்டமாக உபயோகிப்பார்களென நினைக்கிறேன்.
இதையே ஒருகப் மைதாவுடன் 1 டேபிள்ஸ்பூன் கடலைமாவு,துளி
மிளகாய்ப்பொடி, 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெந்தயக்கீரை,
எண்ணெயும்,நெய்யுமாக 2டேபிள்ஸ்பூன், உப்பு,ஜீரகப்பொடி சேர்த்து
ஸாதா மட்ரி செய்யும் முறையிலேயே மேதி மட்ரியும் செய்யலாம்.
.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 11:30 பிப இல் ஜூன் 28, 2011
காமாட்சி அம்மா,
மட்ரி_பெயர் வித்தியாசமாக உள்ளது.காரமான கலகலா போல் உள்ளது.எங்கள் ஊரின் இன்றைய திடீர் மழைக்கு கொஞ்சம் காரமாக டீயுடன் சேர்த்து சாப்பிட நாலாவது படத்தில் உள்ளது மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
புதுப்புது குறிப்புகள். அத்தனையும் அருமையாக உள்ளது. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அம்மா.
2.
chollukireen | 2:06 பிப இல் ஜூன் 29, 2011
உன்னுடைய கமென்ட் ஸந்தோஷத்தைத் தந்தது.
ஆமாம். கலகலா போன்ற ஒன்றுதான். தேங்காய்ப்பாலும், சக்கரையும் சேத்து இனிப்பாகவும் செய்யலாம்..மழைக்கு காரத்துணையைத்தான் டீ எதிர் பார்க்கும்.எல்லோரும் வாருங்கள். நிறைய செய்து தருகிறேன். உன்னுடைய ப்ளாக் தவறாமல் பார்த்து வருகிறேன். பாராட்டுகளம்மா. 4நாட்களாக வடாம் இட்ட வெய்யில் இங்கே.. வானம் இங்கும் மழை மூட்டம்தான் இன்று. தொடர்ந்து ஸந்திப்போம்
3.
Mahi | 1:19 பிப இல் ஜூன் 30, 2011
புதுப்பெயரில் ஒரு பலகாரம்..நல்லா இருக்கு காமாட்சிம்மா!
4.
chollukireen | 12:48 பிப இல் ஜூலை 1, 2011
என்ன சொல்லலாம். நன்றியா, ஸந்தோஷமா..இரண்டுமே சொல்லுகிறேன்.
5.
chollukireen | 11:26 முப இல் நவம்பர் 20, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் 2011 இல் ஜெநிவாவில் புதியதாகக் கற்றுக்கொண்டு செய்தது. டில்லியில் கரகரப்பாகச் செய்ததே கிடைக்கும். கசூரிமெத்தி என்ற காய்ந்த வெந்தயக்கீரை பொடி சேர்த்தும் செய்யலாம். இதுவும் ரிப்ளாக்தான். குளிர்காலம் வருகிறதே. காமாட்சி அம்மாவையும் ப்ளாகில் பார்க்க வேண்டாமா? ஜெனிவா படங்கள் மும்பையினின்றும் உங்களைத் தேடிவருகிறது. எல்லோரும் ஸவுக்கியமா அன்புடன்
6.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:51 முப இல் நவம்பர் 20, 2015
புதுப்பெயரில் ஓர் அருமையான தின்பண்டம். மிக்க மகிழ்ச்சி.
இந்த என் பின்னூட்டமும் போகுமோ போகாதோ, தெரியவில்லை. ஈஸ்வரோ ரக்ஷது.:)
7.
chollukireen | 12:07 பிப இல் நவம்பர் 20, 2015
தர்மம் எல்லாவற்றையும் ரக்ஷிக்கும் அல்லவா? உங்களைப் பார்த்ததும் பின்னூட்டங்களுக்குச் சென்று நல்வரவு கொடுத்து விடுகிறேன். பிளாகரிலும் காமாட்சி என்ற பெயரிலேயே வலைப்பூ ஆரம்பித்து மேன்மேலும் எழுதாமல் அம்போ என்று நிற்கிறது. என்மாதிரி அதற்கும் தள்ளவில்லை. உங்கள் வரவிற்கும்,அன்பிற்கும் நன்றி. அன்புடன்
8.
chollukireen | 12:12 பிப இல் நவம்பர் 20, 2015
உங்களதைப் பார்த்து ஸந்தோஷித்து மறுமொழி எழுதியுள்ளேன் அன்புடன்