இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.
ஜூலை 30, 2011 at 3:47 பிப 10 பின்னூட்டங்கள்
இது வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமுமான தொக்கு.
செய்வதுமெளிது. விருப்பமானவைகளுடன் சேர்த்துச்
சாப்பிடலாம். டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.
வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6
சக்கரை—ஒன்றரை கப்
மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய சீரகப்பொடி–1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.
உப்பு—–ருசிக்கு ஏற்ப
செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக
இருந்தால் 4 ஆக எடுத்துக் கொள்ளலாம்.
பழத்தை அலம்பி சிறிய ப்ரஷர் குக்கரில் அரைகப் தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் 2 விஸில் வரும்வரை வேகவைத்து
இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியபின் ஆறவைத்து, பழத்தைப்பிய்த்துப்போட்டு
விதைகளை அகற்றிவிட்டு, மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்
போட்டு நன்றாக அறைத்து எடுக்கவும்.
வேகவைத்த ஜலமும் சேர்த்து அறைக்கலாம்.
அடி கனமான நான்ஸ்டிக் பேனில் சக்கரையுடன் சிறிது
ஜலம் சேர்த்து சற்று கொதிக்கவிடவும்.
சக்கரை கறைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அறைத்த
விழுதை அதனுடன் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் ஹல்வா மாதிரி சுருண்டு வரும் வரைக் கிளறி
உப்பு,மிளகாய்ப்பொடி, வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்
பொடிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
வேக வைத்த அளவு எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தின்
சாற்றை எடுத்து கொட்டைகளை நீக்கி இறக்கி வைத்துள்ள
கலவையில் சேர்த்துக் கிளறவும். சாறு அதிகம் சேர்க்கலாம்.
சூடு ஆறிய பின்னர் சுத்தமானபாட்டில்களில்
சேமித்துவைக்கவும்.
பெருங்காயம் தூக்கலாக இருந்தால் வாஸனையாக இறுக்கும்.
விருப்பப்பட்டவர்கள் சோம்பு, ஏலக்காய், லவங்கம்,பட்டை,
ஜாதிக்காய், முதலாவதின் ஏதாவதொன்றின் பொடியையும்
ஒரு துளி சேர்க்கலாம்.
எண்ணெய் இல்லாத தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்
அவசியமில்லை.
இதனுடனேயே இன்னொரு பக்கம் பூண்டு சேர்த்த டொமேடோ
தொக்கும் தயாராயிற்று.
அதையும் சேர்த்துப் பாருங்களேன். ஏற்கெனவே இஞ்சி சேர்த்துச்
செய்த குறிப்பு இருக்கிரது.
இது வேறு ருசி. இதையும் பாருங்களேன் ஸமயத்திற்குஉதவும்.
வேண்டியவைகள்—-பெறியசைஸ் தக்காளிப்பழம்—6
உறித்த பூண்டு இதழ்கள்—15
மிளகாய்ப்பொடி—3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—1டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய, சீரகப் பொடி—தலா 1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
புளி—ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய்—கால் கப்பிற்கதிகம்
சக்கரை—1டீஸ்பூன்.
செய்முறை—தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக
கொதிக்கும் தண்ணீரை பழம் அமிழும்படியாக அதன்மேல்
விட்டு மூடிவைக்கவும்.
புளியை ஈரப்படுத்தி ஊர விடவும்.
ஜலம் ஆறியபின் பழத்தை எடுத்துத் தோலை உறித்துத்
தனியாக வைக்கவும்.
உறித்து வைத்துள்ள பூண்டை சிறியதாக நறுக்கிப் போட்டு
மிக்ஸியில் அறைக்கவும்.
தக்காளி, புளியையும் சேர்த்து அறைக்கவும்.
நான்ஸ்டிக் பாத்திரத்திலோ,அல்லது அகலமான பேனிலோ
கலவையைக்கொட்டி நிதானமான தீயில் கொதிக்கவைத்துக்
கிளறவும்.
கலவை திக்காக சேர்ந்து வரும்போது வாணலியில்எண்ணெயை
– க்காயவைத்து மிளகாயை வறுத்து, கடுகை வெடிக்கவிட்டு
கீழிறக்கி பொடிகளைச் சேர்த்துக் கிளறி, கலவையில் கொட்டிக்
கிளறவும். வேண்டிய உப்பு சேர்க்கவும்.
சக்கரையும்தான்.
துளி ஸ்பூனில் எடுத்து ஆற வைத்து ருசி பார்க்கவும்.
சுருளக்கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டில்களில் சேமிக்கவும்.
ப்ரிஜ்ஜில் வைத்து நீண்ட நாள் உபயோகிக்கலாம்.
ருசி பார்க்கச் சொன்னது உப்புக்காரம் கூடக் குறைய
வேண்டுமானால் சேர்ப்பதற்காகத்தான்.படத்தில் சில பொடிகள்
வைக்கத் தவறியிருப்பேன். அதெல்லாம் ஒரு பிரமாதமில்லை.
குறிப்புகளே அவசியமானது.
Entry filed under: தொக்கு வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
sudhakumar | 2:02 முப இல் ஓகஸ்ட் 2, 2011
Dear Amma.,
I tried lemon thokku yesterday with six lemons. It came out well and
also we tasted with adai yesterday. Really superb. I tried ur latest
receipe though i entered very late in ur web net work.
Keep going
Own daughter
Sudha
Akka
Thank U for the New Tasty Thokku.
Really very tasty.
Bye
Kumar
2.
chollukireen | 8:16 முப இல் ஓகஸ்ட் 2, 2011
அப்பாடா. யாராவது செய்து பார்த்து கமென்ட் கொடுத்தால் அதில் இருக்கும் த்ருப்தி வேறு எதிலும் கிடைக்காது. உங்களின் முதல் வரவுக்கு மிகவும் நன்றி.அடையோடு காம்பினேஷன் நன்றாகவே இருக்கும்.
3.
chollukireen | 9:14 முப இல் ஓகஸ்ட் 2, 2011
திரு.குமார் அவர்களேபாராட்டுகளுக்கு நிஜமாகவே நன்றி.இங்கேயும் எல்லோருக்கும்
மிகவும் பிடித்திருந்தது தொக்குகள்.
4.
Mahi | 9:56 பிப இல் ஓகஸ்ட் 3, 2011
மிகவும் வித்யாசமா இருக்கிறது தொக்கு. வீட்டில் 3 எலுமிச்சைப்பழம்தான் இருக்கு,அதிகமா இருந்திருந்தா கண்டிப்பா செய்து பார்த்திருப்பேன். 😉
பயனுள்ள பதிவும்மா!நன்றி!
5.
chollukireen | 8:37 முப இல் ஓகஸ்ட் 4, 2011
மூன்று பழத்தில் செய்தால் கூட போதுமே. பொம்மை கலியாணம் மாதிரி…அழகாகவும் டேஸ்டியாகவும் வருமே. நீ செய்து பார்த்தால் ருசிப்பதற்கு நிறையபேர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள். நான் இதை யாரோ கொடுத்ததை ருசி பார்த்ததில் பிடித்துபோய் ,இப்படிதான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் செய்தேன்.
இதுவரை 3 முறை செய்து விட்டேன்.. நன்றாகவே வருகிறது. எனக்காக நீயும் செய்துபார்.
இது3முறை செய்து விட்டேன்.
6.
Mahi | 10:01 பிப இல் ஓகஸ்ட் 3, 2011
சொல்ல மறந்துட்டேனே..வெங்காய வடாம் செய்தேன்,சூப்பரா வந்திருக்கு.சீக்கிரம் ப்ளாகில் போஸ்ட் பண்ணறேன். உங்க வடாம் பதிவுகள் பாத்துதான் இந்த முயற்சியெல்லாம்!
ஊருக்கு பேசுகையில் வடாம் செய்திருப்பது பற்றி அம்மாவிடம் சொன்னேன்,அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! 🙂
நன்றிம்மா!
7.
chollukireen | 9:56 முப இல் ஓகஸ்ட் 4, 2011
நான் எதிர் பார்த்தேன். வடாம் காய்ந்து, வறுத்துப் பார்த்து, இன்னொரு பதிவு போடுவாயென்று. பதிவே வருகவருக.
வெளிநாடடில் இருக்கும் ஒரு பெண் வடாம் இட்டேனென்றால் பெருமையாகவும் இருக்கும். .எதோ ஆராய்ச்சி செய்து பரீட்சை எழுதி டாக்டர் பட்டம் வாங்கிய பெருமிதமும் கூட இருக்க வேண்டும். டைலாக் இல்லை இது. பெறியவர்களை மதிக்கும் உன்
தன்மையும் ரொம்ப பிடித்திருக்கிறதம்மா.
தன்மையும் தன்மையும்
8.
chollukireen | 11:03 முப இல் ஜனவரி 19, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நான்கு வருஷத்துக்கு முன் ஜெனிவாவில் இரண்டு தொக்குகளும் செய்தேன். எலுமிச்சை இனிப்பு தொக்கு மிகவும் ருசியானது. நான் அடிக்கடி செய்து கொண்டு இருந்தேன். நான்கு நாட்களுக்கு முன் என் பெண் விசாரித்தாள்.
ஸரி உங்களுக்கும் உதவலாம் என்ற எண்ணத்துடன் மறு பிரசுரம் பண்ணுகிறேன். கூடவே ஒன்றும் உண்டு. தக்காளி எலுமிச்சை எப்போதும் கிடைக்கும் வஸ்து. செய்து பார்த்துச்
சொல்லுங்கள். made in ஜெனிவா இது.
9.
பிரபுவின் | 3:50 முப இல் ஜனவரி 22, 2015
எனக்கும் சமையல் செய்ய ஆசை .முயற்சி செய்து பார்க்கிறேன்.
10.
chollukireen | 11:45 முப இல் ஜனவரி 22, 2015
உங்கள் குடும்பத்தினர் செய்யலாமே. அன்புடன்