பருப்புப் பாயஸம்
ஓகஸ்ட் 8, 2011 at 4:14 பிப 4 பின்னூட்டங்கள்
இது ஒரு சின்ன அளவில் நினைக்கும்போது வைக்கும் பாயஸம்
ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்தது.
இதன் குறிப்பையும் பார்க்கலாமா. நினைத்துக் கொண்டால்
நிவேதனத்திற்குச் செய்ய உபயோகமாக இருக்கும்.
வேண்டிய ஸாமான்கள்
கடலைப் பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி—1 டேபிள்ஸ்பூன். இவை மூன்றையும் வெறும்
வாணலியில் நன்றாக வாஸனை வரும்படி சற்று சிவப்பாக
வறுத்துக் கொள்ளவும்.
சக்கரை— 5,அல்லது 6 டேபிள்ஸ்பூன். இனிப்புக்குத் தக்கபடி
பால்— 1 டம்ளர்
ஏலப்பொடி—-வாஸனைக்கு சிறிது
பாதாம் பருப்புத் தூள்–2 டீஸ்பூன்.
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை–விருப்பத்திற்கு.
செய்முறை–
வறுத்த அரிசி, பருப்புக்களை நன்றாகத் தண்ணீர் விட்டுக்
களைந்து, திட்டமாகத் தண்ணீர் விட்டுப் ப்ரஷர் குக்கரில்
2 விஸில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
பருப்பை லேசாக மசித்து சக்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு
பாதாம் தூளையும், பாலையும் சேர்க்கவும்.
ஓரிரண்டு கொதிவிட்டு இறக்கி முந்திரி திராட்சையைச்
.சேர்த்து ஏலப் பொடிபோட்டு கலக்கி உபயோகப் படுத்தவும்.
பாலிற்கு பதில் சிறிது தேங்காயை அறைத்தும் செய்யலாம்.
குங்குமப்பூ சேர்த்தால் கலரும் கூடும்.மணமும் கூடும்.
வெல்லம் சேர்த்து செய்வதுதான் அதிகம். வேண்டிய அளவு
இனிப்பு கூட்டவும்
Entry filed under: இனிப்பு வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar's blog | 6:09 முப இல் ஓகஸ்ட் 9, 2011
காமாட்சி அம்மா,
நலமா? ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்த பருப்புப் பாயஸம்.அருமையாக இருக்கிறது. ,நீங்கள் செய்தது எனும்போது அதன் சுவையும்,மணமும் கேட்கவா வேண்டும்!
2.
chollukireen | 1:18 பிப இல் ஓகஸ்ட் 9, 2011
நலமம்மா. வெகு நாட்களாக உன்னைக் காணவில்லை. ப்ளாக் பக்கம். நிவேதனத்துக்காக பாயஸம் செய்தால் ருசியாக இருக்கும் ப்ரஸாதம் என்று சொல்வார்கள். அது ஞாபகத்திற்கு வந்தது.ஸந்தோஷமம்மா.
அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்.
அன்புடன்
3.
Mahi | 8:55 பிப இல் ஓகஸ்ட் 11, 2011
பாயசம் நன்றாக இருக்கு. அடுத்தமுறை பாசிப்பருப்புடன் கடலைப்பருப்பும் சேர்த்து செய்து பார்க்கிறேன்.
4.
chollukireen | 12:20 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
பாயஸம் பண்ரதிற்கெல்லாம் பண்டிகைகள்தான் சான்ஸ் கொடுக்கும். இல்லாவிட்டால் கைவராது. இனி யாவும் பண்டிகை நாட்களே வரவிருக்கிறது. செய்வதற்கு சான்ஸ் இருக்கு. பார்ப்போம்.