காராசேவு
ஒக்ரோபர் 19, 2011 at 4:23 பிப 11 பின்னூட்டங்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.
Entry filed under: கடலை மாவின் கரகரப்புகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 4:43 பிப இல் ஒக்ரோபர் 19, 2011
Poondu araithu serppathu puthusaa irukku. Will try it soon!
Glad to see you back-na! Take care!
2.
chollukireen | 2:14 பிப இல் ஒக்ரோபர் 20, 2011
மும்பை போக, அழைத்துப்போக பிள்ளை
வந்தாகிவிட்டது. எங்கிருந்தால் என்ன.
எழுத முடிந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.நன்றி
3.
Mahi | 4:49 பிப இல் ஒக்ரோபர் 19, 2011
/Glad to see you back-na!// எழுத்துப்பிழை ஆகிட்டது! 😉
Glad to see you back-ma!
4.
chollukireen | 2:09 பிப இல் ஒக்ரோபர் 20, 2011
மகி உன்பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி.
செய்து பார். கடலை மாவுடன், மஸாலா
சேர்த்தால் நன்றாகவே இருக்கும். பூண்டு
விருப்பமில்லாதவர்கள் மிளகை மட்டும்
உடைத்துச் சேர்த்தும் செய்யலாம்.அன்புடன்
5.
chollukireen | 2:17 பிப இல் ஒக்ரோபர் 20, 2011
பரவாயில்லை. அன்புடன்
6.
chollukireen | 10:43 முப இல் ஒக்ரோபர் 25, 2011
அன்புள்ள மகி உனக்கும், உன் கணவருக்கும், உன் குடும்பத்தினருக்கும், மனமார்ந்த தீபாவளிவாழ்த்துகளும், ஆசிகளும். அன்புடன் காமாட்சிமா.
7.
chitrasundar's blog | 3:53 பிப இல் ஒக்ரோபர் 24, 2011
காமாட்சி அம்மா,
நலமா? இந்தியாவுக்கு போறீங்களா?ஏதோ குடும்பத்தில் ஒருவர் வெளியூர் செல்வதுபோல் உள்ளது.
ஒருவிதத்தில் ஊருக்குப் போய்வருவதும் நல்லதுதான்.பழைய நண்பர்கள்,உறவினர்களைப் பார்த்துப் பேசும்போது மனதிற்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.நலமுடன் சென்றுவாருங்கள் .நேரம் கிடைக்கும்போது ப்ளாக்கிற்கும் வந்துபோங்க.
சித்ராசுந்தர்.
8.
chollukireen | 10:33 முப இல் ஒக்ரோபர் 25, 2011
நலமம்மா. உன் பதில் கண்ணில் நீரை வரவழித்து விட்டது.என்னுடைய, பிள்ளைகள், பெண் முதலானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு மாற்றம் அவசியமாகிறது. குளிரும் ஒரு காரணம்.. மும்பை வந்திருக்கிரோம். கட்டாயம் ப்ளாகிற்கு வந்து உங்களுடன் பேசவேண்டுமென்பது என்னுடைய திட்டம்தான். பாசமான உன் கடிதத்திற்கு ஒரு மனப்பூர்வமான வாழ்த்துகள். மேலும் உனக்கும், உன் குடும்பத்தினர், மற்றும் நட்பு வட்டத்தினருக்கும் எங்களின் மனமார்ந்த தீபாவளி வழ்த்துகள். ஆசிகள் சொல்லுகிறேன் காமாட்சி
9.
chollukireen | 11:10 முப இல் மே 5, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் மீள் பதிவுதான். பதினோரு வருஷங்களுக்கு முன்னர். பூண்டு பிடிக்காதவர்கள் அதை நீக்கிவிட்டுச் செய்யலாம். உங்கள் டேஸ்ட் எப்படியோ? அன்புடன்
10.
Geetha Sambasivam | 1:23 முப இல் மே 7, 2022
இந்தப் பதிவுக்கு நான் முன்னர் எழுதின கருத்துப் போய்ச் சேரவில்லை போலிருக்கு. நாங்க காராசேவில் பூண்டு சேர்த்துப் பண்ணிப் பார்த்திருக்கேன், ஆனால் கசகசா, ஏலக்காய், லவங்கம் போட்டதில்லை. ஒரு முறை பூண்டு இல்லாமல் மற்றவை போட்டுப் பண்ணிப் பார்க்கிறேன். ஆனால் லவங்கமே காரம் எனக்கு ஒத்துக் கொள்வது இல்லை. ஏனோ தெரியலை! 😦
11.
chollukireen | 9:07 முப இல் மே 7, 2022
சில சமயங்களில் பதில் எழுதியது பதிவாகாமல் போய்விடுகிறது .அப்படி ஏதாவது இருக்கும் .சாதாரணமாக தேன்குழல் முதலான வகைகளிலும் கசகசா சேர்த்து செய்தால் நன்றாக இருக்கிறது
. ஆனால் மசாலா சேர்ப்பது அபூர்வம். எனக்குச் சொன்னவர் அவர்கள் செய்து பார்த்ததாகவும் நன்றாக உள்ளது என்றும் சொன்னார்கள் நமக்கு ஏற்றபடி சேர்த்தும் சேர்க்காமலும் செய்ய வேண்டியது தான். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. மசாலா போடா மல் செய்யுங்கள் அன்புடன்