கார மபின்.சோளம்.
ஒக்ரோபர் 25, 2011 at 5:19 பிப 5 பின்னூட்டங்கள்
மெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று
செய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்
மெல்லியதான சோளரவை–1 கப்.polenta
மைதா—1 கப்
ருசிக்கு உப்பு
இவைகளைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து—எண்ணெய் –கால்கப்,
மோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்
இவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து
இட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
மேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்
காப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்
parmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்
பச்சைமிளகாய்–2 சிறியதாக நறுக்கியது
இவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை—அவனைச் சூடாக்கவும்
கலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு
ட்ரேயில் அடுக்கி வைத்து
90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்
பேக் செய்து எடுக்கவும்.
அழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.
ருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 8:53 பிப இல் ஒக்ரோபர் 25, 2011
I’ve seen polenta..but never tasted it..muffins look yumm!
Happy Diwali to you and your family Kamatchimmaa! 🙂
2.
chollukireen | 1:08 பிப இல் ஒக்ரோபர் 27, 2011
ஸந்தோஷம். நான் மும்பை வந்திருக்கிறேன். தொடர்ந்து உன் அன்பான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிரு. செய்து பார்த்தும் ருசிக்கவும்.
3.
சித்ராசுந்தர் | 4:42 முப இல் ஒக்ரோபர் 27, 2011
காமாட்சி அம்மா,
மஃபின்கள் அருமையாக உள்ளது.நான் இங்கு வந்த புதிதில் வாங்கி ஒருநாள் உப்புமா செய்தேன்.அதோடு சரி.முயற்சி செய்கிறேன்.பகிர்வுக்கு நன்றியம்மா.
சித்ராசுந்தர்.
4.
chollukireen | 1:25 பிப இல் ஒக்ரோபர் 27, 2011
ஒரு காலத்தில் ரேஷனில் சோளம் கட்டாயமாக வாங்க வேண்டிய நிலை இருந்தது. அப்போதெல்லாம் விதரணையாக எதுவும் தெரியாது. சோளமாவில் உளுந்து, கடலைமாவுகள் சேர்த்து முருக்கு முதலானதுகளும் செய்யலாம். உன் பதிலுக்கு மிகவும் ஸந்தோஷமம்மா.
5.
Geetha Sambasivam | 10:12 முப இல் செப்ரெம்பர் 24, 2015
நன்றாக இருக்கும் போல் இருக்கிறது. ஆனால் அவன் எல்லாம் இப்போ வைச்சுக்கலை. மைக்ரோவேவில் வைக்கலாமானு தெரியலை! குக்கரில் உப்பைப் போட்டு அதன் மேலே வைத்துப் பார்க்கலாம். 🙂 அவன் வாங்குவதற்கு முன்னால் குக்கரில் தான் மணல் பரப்பி பிஸ்கட்டுகள் செய்வேன்.