எலுமிச்சை சாதம் பலவிதம்.
நவம்பர் 21, 2011 at 1:19 பிப 8 பின்னூட்டங்கள்
அடிக்கடி கையில் டிபன் கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை
சாதம் என நினைக்காமல் சற்று தாளித்துக் கொட்டுவதை
மாற்றி, ருசியையும் சற்று மாற்றியதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். பிரமாதம் ஒன்றுமில்லை. ஆனாலும் யோசிக்க
முடியாத ஒரு ஸமயத்தில் படம் வேறு எடுத்திருந்தேன்.
நீங்களும்தான் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
நல்ல மெல்லியதான அரிசியில் ஒருகப் எடுத்து உதிர் உதிரான
சாதமாக வடித்து ஸ்டீல் தம்பாளத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் நல்ல சாறுள்ளதாக—–1
சிகப்புநிற காப்ஸிகம்—-1 . சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்–2 . நீட்டுவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி பிஞ்சு—1. கைப்பிடி, பொடியாக நறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது 1, டீஸ்பூன்
சில கரிவேப்பிலை இலைகள்
நல்லெண்ணெய்–2 டேபிள்ஸ்பூன்
கடுகு–1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
மஞ்சள்ப்பொடி–சிறிது
பெருங்காயப்பொடி—-சிறிது
ருசிக்கு உப்பு
வறுத்துப் பொடி செய்த வெந்தய, கடுகுப்பொடி 1/2டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய கேப்ஸிகம், பிஞ்சு பட்டாணியை ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டுக் கலந்து 3 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்து
எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து , இஞ்சி பச்சைமிளகாய்.
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மைக்ரோவேவ் செய்ததையும்
சேர்த்துப் பிரட்டி இரக்கவும். மஞ்சள்ப் பொடி சேர்க்கவும்.
ஆறினவுடன் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் சேர்த்துக்
கலந்து ஆறின சாதத்தில் கொட்டிக் கலக்கவும். பொடிகளைச்
சேர்த்துக் கலந்தால் சாதம் ரெடி.
மற்றும், பூண்டு, இஞ்சி விழுதை வதக்கி ரெட் கேப்ஸிகம்,கேரட்,
மட்டர், ப.மிளகாய் சேர்த்து, கடுகு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு
தாளித்துக்கொட்டி எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து,
சாதத்துடன் கலந்து பூண்டு வாஸனை மேலோங்க
தயாரிக்கலாம். பொடிகள் அவசியம்.
பெறிய எலுமிச்சை வகையுடன், கிரீன் காப்ஸிகம்,கேரட்,
பேபிகார்ன், காரமில்லாத பெறியவகைமிளகாய், லேசாக
வேண்டியவகை மஸாலாவும் சேர்த்து. உப்பு காரம் கூட்டி
வகையாக முந்திரி வகைகளுடன் தயாரிக்கலாம்.
எல்லாம் ஒரே மாதிரி தோன்றினாலும் காய்களை மைக்ரோவேவ்
செய்து , ருசியை சிறிது மாற்றி செய்யலாம். ஒரே நாளில்
யாவற்றையும் செய்யப் போவதில்லை.கலர்க் கலராக
செய்யலாமே. பாதாம், பிஸ்தா, மற்றும் வேறுவித பருப்புகளும்
அலங்காரமாகச் சேர்க்கலாம்.
பெறிய எலுமிச்சை சாற்றில் செய்யும்போது திட்டமாக சாற்றைச்
சேர்க்கவும். சிறிய வகைப் பழத்தில் வாஸனைநன்றாகஇருக்கும்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 3:44 பிப இல் நவம்பர் 21, 2011
Wow!!! Looks so colorful! Nice twists in the regular recipe-ma! 😀
2.
chollukireen | 5:32 பிப இல் நவம்பர் 21, 2011
உடனே பதில். எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கு தெறியுமா. இன்னும் பல தினுஸுகள் சேர்க்கலாம்.
அன்புடன்
3.
சித்ராசுந்தர் | 12:45 முப இல் நவம்பர் 22, 2011
காமாட்சி அம்மா,
படங்கள் அருமையாக உள்ளது.
இனிமேல் எலுமிச்சை சாதத்தை நல்ல கலர்ஃபுல்லாக செய்திட வேண்டியதுதான்.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 5:34 முப இல் நவம்பர் 22, 2011
ஆமாம். நீங்களெல்லாம் செய்வதற்கு கேட்க வேண்டுமா. நான் நினைத்தேன். நீங்கள் கட்டாயம் பதில் எழுதுவீர்களென்று. கலர் மாத்திரமில்லை. ருசியையும் கூட்டிச் செய்திடுவீர்களென்று. படங்கள் நன்றாக வந்தது. அருமையாக உள்ளது என எழுதியதற்கு மிகவும் ஸந்தோஷம். சிறிது நாட்களாக உங்களைக் பார்க்கவில்லை.
5.
chitrasundar5 | 5:56 முப இல் நவம்பர் 24, 2011
காமாட்சி அம்மா,
பதிவுகள்தான் போடவில்லையே தவிர தினமும் வந்து நமது ப்ளாக்கை பார்த்துவிடுவேன்.
அன்புடன்,
சித்ராசுந்தர்.
6.
Dr.M.K.Muruganandan | 8:30 முப இல் ஏப்ரல் 26, 2013
சுவையாகத்தான் பார்க்கவே தெரிகிறது.
அத்துடன் காய்கறி துண்டுகள் இயற்கையாக இருப்பதுபோல கலர் கலராகவும் இருக்கின்றன.
சுவையான விருந்துதான்.
7.
chollukireen | 10:47 முப இல் ஏப்ரல் 26, 2013
மைக்ரோ அவனில் காய்களை வைத்து வதக்கிப் போட்டால்,வாய்க்குமட்டுமல்ல, கண்ணிற்கும், நல்ல விருந்தளிக்கின்றது.
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி டாக்டர்.
அன்புடன்
8.
Maha Lakshmi | 8:49 முப இல் திசெம்பர் 30, 2013
very nice for tounge and eyes