எலுமிச்சை சாதம் பலவிதம்.
நவம்பர் 21, 2011 at 1:19 பிப 19 பின்னூட்டங்கள்
அடிக்கடி கையில் டிபன் கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை
சாதம் என நினைக்காமல் சற்று தாளித்துக் கொட்டுவதை
மாற்றி, ருசியையும் சற்று மாற்றியதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். பிரமாதம் ஒன்றுமில்லை. ஆனாலும் யோசிக்க
முடியாத ஒரு ஸமயத்தில் படம் வேறு எடுத்திருந்தேன்.
நீங்களும்தான் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
நல்ல மெல்லியதான அரிசியில் ஒருகப் எடுத்து உதிர் உதிரான
சாதமாக வடித்து ஸ்டீல் தம்பாளத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் நல்ல சாறுள்ளதாக—–1
சிகப்புநிற காப்ஸிகம்—-1 . சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்–2 . நீட்டுவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி பிஞ்சு—1. கைப்பிடி, பொடியாக நறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது 1, டீஸ்பூன்
சில கரிவேப்பிலை இலைகள்
நல்லெண்ணெய்–2 டேபிள்ஸ்பூன்
கடுகு–1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
மஞ்சள்ப்பொடி–சிறிது
பெருங்காயப்பொடி—-சிறிது
ருசிக்கு உப்பு
வறுத்துப் பொடி செய்த வெந்தய, கடுகுப்பொடி 1/2டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய கேப்ஸிகம், பிஞ்சு பட்டாணியை ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டுக் கலந்து 3 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்து
எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து , இஞ்சி பச்சைமிளகாய்.
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மைக்ரோவேவ் செய்ததையும்
சேர்த்துப் பிரட்டி இரக்கவும். மஞ்சள்ப் பொடி சேர்க்கவும்.
ஆறினவுடன் எலுமிச்சை சாற்றையும், உப்பையும் சேர்த்துக்
கலந்து ஆறின சாதத்தில் கொட்டிக் கலக்கவும். பொடிகளைச்
சேர்த்துக் கலந்தால் சாதம் ரெடி.
மற்றும், பூண்டு, இஞ்சி விழுதை வதக்கி ரெட் கேப்ஸிகம்,கேரட்,
மட்டர், ப.மிளகாய் சேர்த்து, கடுகு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு
தாளித்துக்கொட்டி எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து,
சாதத்துடன் கலந்து பூண்டு வாஸனை மேலோங்க
தயாரிக்கலாம். பொடிகள் அவசியம்.
பெறிய எலுமிச்சை வகையுடன், கிரீன் காப்ஸிகம்,கேரட்,
பேபிகார்ன், காரமில்லாத பெறியவகைமிளகாய், லேசாக
வேண்டியவகை மஸாலாவும் சேர்த்து. உப்பு காரம் கூட்டி
வகையாக முந்திரி வகைகளுடன் தயாரிக்கலாம்.
எல்லாம் ஒரே மாதிரி தோன்றினாலும் காய்களை மைக்ரோவேவ்
செய்து , ருசியை சிறிது மாற்றி செய்யலாம். ஒரே நாளில்
யாவற்றையும் செய்யப் போவதில்லை.கலர்க் கலராக
செய்யலாமே. பாதாம், பிஸ்தா, மற்றும் வேறுவித பருப்புகளும்
அலங்காரமாகச் சேர்க்கலாம்.
பெறிய எலுமிச்சை சாற்றில் செய்யும்போது திட்டமாக சாற்றைச்
சேர்க்கவும். சிறிய வகைப் பழத்தில் வாஸனைநன்றாகஇருக்கும்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
19 பின்னூட்டங்கள் Add your own
சித்ராசுந்தர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 3:44 பிப இல் நவம்பர் 21, 2011
Wow!!! Looks so colorful! Nice twists in the regular recipe-ma! 😀
2.
chollukireen | 5:32 பிப இல் நவம்பர் 21, 2011
உடனே பதில். எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கு தெறியுமா. இன்னும் பல தினுஸுகள் சேர்க்கலாம்.
அன்புடன்
3.
சித்ராசுந்தர் | 12:45 முப இல் நவம்பர் 22, 2011
காமாட்சி அம்மா,
படங்கள் அருமையாக உள்ளது.
இனிமேல் எலுமிச்சை சாதத்தை நல்ல கலர்ஃபுல்லாக செய்திட வேண்டியதுதான்.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 5:34 முப இல் நவம்பர் 22, 2011
ஆமாம். நீங்களெல்லாம் செய்வதற்கு கேட்க வேண்டுமா. நான் நினைத்தேன். நீங்கள் கட்டாயம் பதில் எழுதுவீர்களென்று. கலர் மாத்திரமில்லை. ருசியையும் கூட்டிச் செய்திடுவீர்களென்று. படங்கள் நன்றாக வந்தது. அருமையாக உள்ளது என எழுதியதற்கு மிகவும் ஸந்தோஷம். சிறிது நாட்களாக உங்களைக் பார்க்கவில்லை.
5.
chitrasundar5 | 5:56 முப இல் நவம்பர் 24, 2011
காமாட்சி அம்மா,
பதிவுகள்தான் போடவில்லையே தவிர தினமும் வந்து நமது ப்ளாக்கை பார்த்துவிடுவேன்.
அன்புடன்,
சித்ராசுந்தர்.
6.
Dr.M.K.Muruganandan | 8:30 முப இல் ஏப்ரல் 26, 2013
சுவையாகத்தான் பார்க்கவே தெரிகிறது.
அத்துடன் காய்கறி துண்டுகள் இயற்கையாக இருப்பதுபோல கலர் கலராகவும் இருக்கின்றன.
சுவையான விருந்துதான்.
7.
chollukireen | 10:47 முப இல் ஏப்ரல் 26, 2013
மைக்ரோ அவனில் காய்களை வைத்து வதக்கிப் போட்டால்,வாய்க்குமட்டுமல்ல, கண்ணிற்கும், நல்ல விருந்தளிக்கின்றது.
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி டாக்டர்.
அன்புடன்
8.
Maha Lakshmi | 8:49 முப இல் திசெம்பர் 30, 2013
very nice for tounge and eyes
9.
chollukireen | 11:38 முப இல் ஓகஸ்ட் 16, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஜெனிவாவில் இருக்கும்போது பிள்ளை,நாட்டுப்பெண்ணிற்காக ஆபீஸ் போகும் போது செய்து கொடுத்தது இந்தக்குறிப்பு. கணவர் ஆஸ்ப்பத்திரியில் இருக்கும்போது ஒத்தாசைக்கு வருபவர்களுக்கும் கொடுத்து அனுப்பும் நேரம்.இதுவும் பத்து வருஷங்களுக்கு முந்தைய பதிவுதான். ருசியுங்கள். அன்புடன்
10.
நெல்லைத்தமிழன் | 4:04 பிப இல் ஓகஸ்ட் 16, 2021
அட… இது புதிதாக இருக்கிறதே… கிராமத்துப் பெண்ணுக்கு வெவ்வேறு நகர மேக்கப் போட்டது போல.
பார்க்க கலர்ஃபுல் ஆக இருக்கிறது.
நான் சென்ற வாரத்தில் மார்கெட் சென்று பச்சைப் பட்டாணி உரித்தது, ஒரு பாக்கெட் 15 ரூபாய் என்று இரண்டு வாங்கிவந்தேன். மறுநாள் மனைவி, அது காய்ந்த பட்டாணியை ஊறவைத்து பச்சைக் கலர் சேர்த்து, புத்தம் புதிய பச்சைப் பட்டாணிபோல ஏமாற்றியிருக்கான் என்றாள். (வாங்கினது …. அந்த ஆட்கள்ட)
இந்த எலுமிச்சை சாதத்தையும் செய்துபார்த்துவிடுகிறேன்.
11.
chollukireen | 11:45 முப இல் ஓகஸ்ட் 18, 2021
அதுவும் ஒத்துப் போகிறது. ஒரிஜனல் தலைகாட்டாது இருககாது. ஜெனிவாவில் எல்லாம் ப்ரோஸன் பட்டாணிதான். ஏமாற்றுவேலை அங்கு இல்லை. நன்றாக ஏமாற்றிவிட்டான் உங்களை. செய்து பார்த்தால் ருசி தெரியும். நன்றி. அன்புடன்
12.
Geetha Sambasivam | 5:52 முப இல் ஓகஸ்ட் 17, 2021
அருமை அம்மா. ஒரு முறை செய்து பார்க்கிறேன். கோதுமை ரவையில் பண்ணுவேன். அரிசியில் பண்ணிப் பார்க்கிறேன்.
13.
chollukireen | 11:47 முப இல் ஓகஸ்ட் 18, 2021
பண்ணிப் பாருங்கள். சுலபமானதுதானே. நன்றி. அன்புடன்
14.
ஸ்ரீராம் | 12:19 முப இல் ஓகஸ்ட் 18, 2021
முன்னர் எலுமிச்சை சாதம் பிடித்துக் கொண்டிருந்தது. இப்போது அவ்வளவாக கவர்வதில்லை. அம்மா சிம்பிளாய்த்தான் செய்வார். கேரட்டோ, பட்டாணியோ, குடைமிளகாயோ இதுவரை நாங்களும் போட்டு செய்ததில்லை. அடுத்தமுறை இப்படி முயற்சி செய்து பார்க்கவேண்டும்.
15.
chollukireen | 11:53 முப இல் ஓகஸ்ட் 18, 2021
ஜெனிவாவில் எப்போதும் கிடைக்கும் பொருட்கள்.காப்ஸிகமெல்லாம் பெங்களூர் வந்தபிறகுதான் எனக்குத் தெரியும். இதுவும் புது முயற்சிதானே. ஞாபகம் இருந்தால் பாருங்கள்.ஸாதாரணமாக இவகளெல்லாம் போடுவது இல்லைதான். நன்றி. அன்புடன்
16.
Revathi Narasimhan | 10:50 பிப இல் ஓகஸ்ட் 20, 2021
எலுமிச்சை சாதம் எப்போதும் பிடிக்கும்.
அந்தப் புளிப்பு மருந்து சாப்பிடும் நாவிற்கு வேண்டி இருக்கிறது.
மஞ்சள் கலர் சாதத்திற்கு
பச்சை, சிவப்பு என்று காய்கறிகளைச் சேர்ப்பது
அருமையான ஏற்பாடு.
நன்றி காமாட்சி மா.
17.
chollukireen | 11:59 முப இல் ஓகஸ்ட் 21, 2021
உங்களைக் காணோமே என்று மிகவும் நினைத்தேன். சௌக்கியமா? வாயிற்கு எலுமிச்சையின் புளிப்பு அருமருந்தும் கூட. கறிகாய்கள்,மஸாலா மூலம் சிறிது வேறு சுவை கூட்ட முயற்சித்தேன். சாப்பி்டவர்கள் விரும்பினார்கள். நீங்களும் நல்ல ஏற்பாடு என்றீர்கள். மிக்க நன்றி. அன்புடன்
18.
Revathi Narasimhan | 12:17 பிப இல் ஓகஸ்ட் 21, 2021
மிக நன்றி காமாட்சிமா. சில சந்தர்ப்பங்களில்
படிக்க முடியாமல் போகிறதுமா. மன்னிக்கணும்.
19.
chollukireen | 1:51 பிப இல் ஓகஸ்ட் 21, 2021
நான் உங்களுடைய எல்லா பதிப்புகளையும் படிக்கிறேன் பதில் எழுதினால் போவதில்லை அதை சரி செய்ய எனக்கு யாரும உதவ ஒன்றுமில்லை உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி நன்றி அன்புடன்