பால்ப்போளி
திசெம்பர் 6, 2011 at 1:24 பிப 20 பின்னூட்டங்கள்
கார்த்திகைப் பண்டிகை வருகிரதே ஏதாவது எழுதுவோம்
என்று தோன்றியது. ஸரி, பால்ப்போளி இன்று செய்து
ப்லாகிலும் போடலாமென்று நினைத்தேன். செய்து
முடித்து எழுதவும் ஆரம்பித்தாகி விட்டது.
நீங்களும் செய்து பாருங்களேன். வேண்டியஸாமான்களை
பார்ப்போமா.
வேண்டியவைகள்
மைதா–1கப்
மெல்லிய பேணிரவை—அரைகப்
பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய்
பால்—அரைலிட்டர்
சக்கரை—ஒன்றரைகப்
ஏலக்காய்–3
முந்திரிப் பருப்பு—10
பாதாம் பருப்பு—10
ஒரு சிட்டிகை—உப்பு
குங்குமப்பூ—துளி.
அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட
செய்முறை
பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்
பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்
பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்
கொள்ளவும்.
மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு
சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை
கெட்டியாகப் பிசையவும்.
நன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர
விடவும்.
பாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.
ஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்
பிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து
வட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி
வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
கரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
அகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ
சக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை
கரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து
கொள்ளவும்.
குங்குமப்பூகரைசல்,பொடித்தபொடி இவைகளைக் கலந்து
காய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3
நிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.
பூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,
இரண்டொரு நிமிஷங்களில்மடித்தமாதிரிஅரைவட்டஷேப்பில்
தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற
வைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.
பால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்
சூடான பாலில் பூரிகள் சீக்கிரம் ஊறும்.
தட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.
பால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்
நன்றாக ஊறும்.
உடனேயும் சாப்பிடலாம்.
இரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,
மிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்
கொடுக்கலாம்.
விருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.
பூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது
சுலபமாக இருக்கும்.
அதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.
பால்ப் போளி ரெடி.
திட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 1:38 பிப இல் திசெம்பர் 6, 2011
அடுக்கி வைத்த போளிகள் பார்க்கவே அருமையா இருக்கு .என் கணவருக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை .வார இறுதியில் செய்கிறேன் .
அப்புறம் உங்க ரெசிப்பி கரகர மொரு மொரு தோசை செய்தேன் மிகவும் அருமையாக வந்தது .
2.
chollukireen | 5:22 பிப இல் திசெம்பர் 6, 2011
ரொம்—-ம்——ப ஸந்தோஷமம்மா. தோசைக்கும் சேர்த்து.உங்களுடைய பதில்களெல்லாம் ஆகாயத்தில் எங்கேயோ பறப்பதுபோல மனது லேசாகி விடுகிறது. என்ன தெறியுமா. எல்லோரும்
என் பெண்கள் என்று நினைக்கிறேன். இதைவிட என்ன பதில் ஸரியாக இருக்கும். போளி செய்து
அப்புறம் என்னை நினைத்துக்கொள்.
3.
chitrasundar5 | 9:27 பிப இல் திசெம்பர் 6, 2011
காமாட்சி அம்மா,
பருப்புபோளி செய்திருக்கிறேன்.இதை செய்ததில்லை. தெளிவான படங்களுடன் நல்ல விளக்கமாக உள்ளது. செய்திட வேண்டியதுதான்.குறிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி .
‘ப்ளாகில் பவனிவர தயாரகிவிட்டபோளிகள்’.அப்படியே பவனி வந்து என் வீட்டில் நிறுத்திவிடுங்கள்.சும்மா சொன்னேன்.
திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று,மலை சுற்றி வந்து,பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.தீபத்திற்கு திருவண்ணாமலை செல்வீர்களா?.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 6:15 முப இல் திசெம்பர் 7, 2011
அன்புள்ள சித்ரா உங்களுக்கெல்லாம் இல்லாத போளியா. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். வேர்ட்ப்ரஸ் அட்சயப்
பாத்திரம். எடுக்க, எடுக்கக் குறையாது. வளர்ந்துகொண்டே இருக்கும். திருவண்ணாமலை. ஸ்மரணாத் அருணாசலம்.
நினைத்தாலே போதும். எண்பதுகள் எதையும்
நினைக்க முடியாது. வெறும் நாட்களில் போகலாம்.
உன்னுடைய கமென்ட்டிற்கு நிறைய மகிழ்ச்சி.
எதாவது ப்ளாகில் எழுதாவிட்டால் மனது
ஸரிப்பட மாட்டேனென்கிறது.
இதுதான் இப்போது மனதின் திருப்தி.
போளி செய்து பார்.
5.
Mahi | 6:02 முப இல் திசெம்பர் 7, 2011
சூப்பர் போளி! மிகவும் அருமையாக இருக்கிறது. நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.
அதுக்கு முன்னாலயே சந்தேகம் கேட்டுக்கிறேன், இந்த போளிகள் ப்ரிட்ஜில் 2-3 நாட்கள் வைத்து சாப்பிடலாமா? இல்லை ரூம் டெம்பரேச்சரில் வைத்து ஒரே நாளில் சாப்பிட்டு முடிச்சுடணுமா அம்மா?
என்ன ஒரு சந்தேகம் பாருங்க!!! 😉 😉
6.
chollukireen | 9:17 முப இல் திசெம்பர் 7, 2011
உன்னுடைய கமென்ட் பார்க்க மிகவும்ஸந்தோஷம். இந்தப் போளியும் ஸாதாரணமாகச் செய்வதுதான். இதில் எக்ஸ்ட்ரா முந்திரி பாதாம் பொடிகள் சேர்த்திருக்கிறேன். நிஜமாகவே நல்ல ருசியாக
இருக்கிறது. இதைத் தாராளமாக பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மைக்ரோவேவில்
சற்று சூடு செய்து சாப்பிடவேண்டும். அது தான் இங்கும் நடக்கிரது. உன் ஸந்தேகக் கேள்வி ஸரியானது. நானே குறிப்பில் எழுதியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகள் மிகவும் அவசியம். பராட்டுகள் மகி. செய்து பார். அன்புடன் சொல்லுகிறேன்
7.
chollukireen | 9:27 முப இல் திசெம்பர் 7, 2011
இதைத் தாராளமாக பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம். இதை நானே எழுதியிருக்க வேண்டும். மைக்ரோவேவில் சற்று சூடாக்கி
சாப்பிடலாம். உன்னுடையது ஸரியான ஸந்தேகம்.
இப்படிப்பட்ட கேள்விகள் அவசியம் மகி. பாராட்டுகள். எல்லோருக்கும் உபயோகமான கேள்வி. செய்து பார்.அன்புடன் சொல்லுகிறேன்
8.
chollukireen | 10:13 முப இல் ஜனவரி 11, 2013
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
போகிப் பண்டிகைக்காகப் பால்ப்போளி செய்ய உதவும் என்பதற்காக திரும்பவும் வெளியிடுகிறேன். செய்துப் பார்த்துச்
சொல்லுங்கள். அன்புடன் சொல்லுகிறேன். வாழ்த்துகள்
9.
ranjani135 | 10:37 முப இல் ஜனவரி 11, 2013
என் மாமியார் அடிக்கடி இதைச் செய்வார்.
ரவை மட்டும் தான் போடுவார். ரவையை நீரில் பிசைந்து விட்டு கல்லுரலில் போட்டு இடிக்க வேண்டும். நைசாக மாவு பதத்திற்கு வரும் வரை. பிறகு பூரியாக இட்டு பாலில் ஊற வைக்கவேண்டும். நான் மைதாமாவில் பூரி செய்து (ஷார்ட்-கட்) பாலில் ஊற வைப்பேன்.
நீங்கள் கொடுத்திருக்கும் வகையில் செய்து பார்க்கிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை போகிப் பண்டிகை அன்று செய்து விடுகிறேன்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்!
கம்ப்யூட்டர் சரியாகி விட்டதுபோல் இருக்கிறதே!
10.
chollukireen | 11:15 முப இல் ஜனவரி 11, 2013
கம்ப்யுட்டர் ஸுமாராக வேலை செய்யறது. நினைத்தது முடியலே. அதனாலே ரி ப்ளாக் செய்ய ஸரியா வரதா என்று பால்ப்போளி வெள்ளோட்டம். பதிலும் கிடைச்சதிலே ஸந்தோஷம் குழந்தை மாதிரி.
ரவை ஊறவைத்து இடித்துதான் முன்னாடி செய்வோம்..
இடவும் ஸரியாக வரும். இதுவும் ஒரு ஷார்ட் கட்தான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி. பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும். அன்புடன்
11.
mahalakshmivijayan | 5:21 முப இல் ஜனவரி 12, 2013
பார்க்கவே அழகாக இருக்கிறது! உங்கள் குடும்பத்தினருக்கு எனது எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
12.
chollukireen | 8:31 முப இல் ஜனவரி 12, 2013
உன் வாழ்த்துக்கு நன்றியம்மா.போளி ருசியாகவும் இருக்கும். முடிந்தபோது முயற்சி செய். உனக்கும்,உன் குடும்பத்தாருக்குஎங்களின் இனிய பொங்கள் வாழ்த்துகள். அன்புடன்
13.
adhiVenkat | 2:59 பிப இல் ஜனவரி 12, 2013
பால் போளி பார்க்கவே பிரமாதமா இருக்கு. எங்கம்மா ஜீரா போளி செய்வார். இதை எழுதும் போதே அந்த சுவை நாவில் வருகிறது.
14.
chollukireen | 12:34 பிப இல் ஜனவரி 13, 2013
அம்மா செய்யும் ஜீரா போளி என்னாவிலும் சுவையாக இருக்கு. அன்புடன்
15.
T S JAYANTHI | 4:32 பிப இல் ஜனவரி 12, 2013
காமாட்சி அம்மா, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் பார்க்கும் போது அம்மா ஞாபகம் வந்துடறது. அப்படியே என்னுடைய சின்ன வயசுக்கு என்னை அழைச்சுண்டு போயிடறது.
16.
chollukireen | 1:18 பிப இல் ஜனவரி 13, 2013
அன்புள்ள ஜயந்தி பொங்கல் வாழ்த்துகளும் ஆசிகளும். சின்ன வயதுக்கு போவது கஷ்டம். ஆனால் போக முடிந்தத பற்றி மிக்க ஸந்தோஷம். அம்மா ஞாபகம் வந்துடறது. பாசம் என்பது அம்மாதான். கமென்ட் டச்சிங்கா இருக்கு.அன்புடன்
17.
Rajarajeswari jaghamani | 2:43 முப இல் திசெம்பர் 10, 2013
ப்ளாகில் பவனிவர தயாரகிவிட்டபோளிகள்’.
மிக அருமை அம்மா..
இன்றைய வலைச்சர அறிகுகத்திற்கு வாழ்த்துகள்..!
18.
chollukireenchollukireen | 11:30 முப இல் திசெம்பர் 10, 2013
வாழ்த்துகளுக்கு நன்றி ராஜேச்வரி. வருகைக்கும் நன்றி அன்புடன்
19.
துரை செல்வராஜூ | 3:28 முப இல் திசெம்பர் 10, 2013
இன்று உங்கள் வலைத்தளத்தினை வலைச்சரம் மூலமாக அறிந்து வந்தேன். பால்போளியைப் போல தாங்கள் வழங்கிய குறிப்புகளும் இனிமையாக இருக்கின்றன. மகிழ்ச்சி!..
20.
chollukireenchollukireen | 11:33 முப இல் திசெம்பர் 10, 2013
உங்களின் முதல் வருகைக்கு வருக என்று வரவேற்கிறேன். உங்கள் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.