சுரைக்காய் கோப்தா
திசெம்பர் 20, 2011 at 10:40 முப 16 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
சுரைக்காய்—திட்டமாக –1
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—அரை டீஸ்பூன்
புதியதாய்ப் பொடிக்க
லவங்கம்—4
மிளகு—–அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
அரைக்க
வெங்காயம்—2அல்லது 3
இஞ்சி—-சிறியதுண்டு
பூண்டு இதழ்—4
பழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்
ருசிக்கு உப்பு
கடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க
மாவு மீதி இருக்கும்.
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
பிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.
செய்முறை
சுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்
துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
சற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.
வெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
சுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்
கலக்கவும்.
துருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.
வடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.
அடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை
போலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு
எடுக்கவும்.
இதுவே கோப்தாவின் முதல்ப்படி.
அகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்
சூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து
வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து
பிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
எண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் கொதித்துச் சுருண்டு வரும்
பதத்தில் முக்கால்கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கோப்தாக்களைப் பரவலாக அதில் சேர்க்கவும்.
மிதமான தீயில் இரண்டொரு கொதிவிட்டு ஒவ்வொன்றாகத்
திருப்பிவிட்டு இறக்கவும். கோப்தாவின் அளவிற்குத் தக்கபடி
கிரேவியில் முன்னதாகவே நீரின் அளவை சற்று
அதிகம்செய்யவும்.அதிகம் வேக வேண்டாம்.
ரொட்டி பூரி வகைகளுடன் நன்றாக இருக்கும்.
விருப்பத்திற்கிணங்க காரமும் கூட்டிக் குரைக்கலாம்.
கீழுள்ள படங்கள் யாவும் மாதிரிக்குதான்.
கோப்தா தயார். லௌகிகா கோப்தா இதுதான்.
Entry filed under: கோப்தா வகைகள்.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 2:50 பிப இல் திசெம்பர் 20, 2011
காமாட்சி அம்மா,
சுரைக்காய் கோஃப்தா படங்களுடன் அருமையாக உள்ளது. வித்தியாசமான குறிப்பு.நான் இதுவரை சுரைக்காயில் சாம்பார்,கூட்டு என்றுதான் செய்துள்ளேன். இது புதிதாக உள்ளது.கண்டிப்பாக செய்துபார்க்க வேண்டும். நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 5:14 முப இல் திசெம்பர் 21, 2011
இதெல்லாம் என் மருமகள் செய்வதால் எனக்கும் பழக்கமாகிவிட்டது. டால்,மட்டர்பன்னீர், விதவித
கோப்தாக்களென ,ரொட்டி, பூரிகளுடன் விருந்தினர்களுக்கு அருமையாகச் செய்து கொடுப்பார்கள். எல்லோருமே இப்படி. உன்னுடைய
கமென்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. செய்து பார். அடிக்கடி ஸந்திப்பது ஸந்தோஷமாக இருக்கு. அன்புடன் சொல்லுகிறேன்.
3.
Mahi | 5:50 பிப இல் திசெம்பர் 20, 2011
நல்லா இருக்குமா! க்ரேவி காரசாரமா இருக்கும்போல? கலர்ஃபுல்லா இருக்கு!:P
4.
chollukireen | 5:46 முப இல் திசெம்பர் 21, 2011
ஆமாம். கலர் கொஞ்சம் மிரட்டுகிறது இல்லையா. நல்ல தக்காளி, சிகப்பா மிளகாய்ப் பொடி. கொஞ்சம்.கலர் டார்க்.அவ்வளவுதான் . வேண்டுமென்றால் காரத்தைக் குறைத்து போட்டுக்கலாம். கலர் புல்லா இருக்கு, கமென்ட் ஸந்தோஷமாயிருக்கு. இந்த அக்கு அதான் மூணு
புள்ளி எழுத்து எப்படி எழுதரது, தெறியலே. இன்னும்
கொஞ்சம் ப்ளாகை ஸரி பண்ண தோன்றுகிறது. இங்கே யாரும் சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்லே. முடிந்தால் சின்ன டிப்ஸாக கொடுத்து உதவி செய்.
உன்னுடைய கமென்ட்டிற்கும், வருகைக்கும் மிகவும்
ஸந்தோஷத்தை அன்புடன் சொல்லுகிறேன்.
5.
priyaram | 8:22 முப இல் திசெம்பர் 23, 2011
சுரைக்காயில் கோப்தா… வித்தியாசமா, நன்றாக இருக்கு அம்மா….
6.
chollukireen | 9:29 முப இல் திசெம்பர் 23, 2011
பிரியா உன் வருகைக்கு மிக்க ஸந்தோஷம். வட
இந்தியாவில் இது இந்த முறையில் செய்வது மிகவும் அதிகம். கொஞ்சம் மெனக்கிடவேண்டும்.
அவ்வளவுதான்.
7.
Mahi | 4:28 பிப இல் திசெம்பர் 23, 2011
/இந்த அக்கு அதான் மூணு புள்ளி எழுத்து எப்படி எழுதரது/ நீங்க எந்த சாஃப்ட்வேர் வைத்து தமிழ் எழுதறீங்கன்னு தெரியலையே..நான் UNIX ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கான தமிழ் எழுதி வைச்சு எழுதறேன்,இதிலே “q” என்ற எழுத்தை தட்டினால் ஃ வருது அம்மா..e-கலப்பை,NHM-ரைட்டர் இதில் எல்லாம் அக்கன்னா வருமா என்று தெரியலை.
ஜிமெய்ல்-ல இருக்க தமிழ் ட்ரான்ஸ்லேட்டரிலும் ஃ-க்கு q என்ற எழுத்துதான்..முயற்சித்துப் பார்த்து சொல்லுங்க. உங்க கேள்வியை இப்பதான் பார்த்தேன்,அதான் தாமதமான பதில். சாரி! 🙂
8.
chollukireen | 1:04 பிப இல் திசெம்பர் 27, 2011
மஹி நான் யூனிகோட் முறையில் மைக்ரோ ஸாfப்ட்வேர்தான் உபயோகிக்கிறேன். இதில்
ௌ-ா-ீ-ூ-ப-ஹ-க-த-ஜ-ட-ஞ-
ோ-ே-்-ி-ு-ப-ர-க-த-ச-ட
ெ–ம-ந-வ-ல-ஸ-,.,.ய
மற்றும் எழுத்துகள் ஷிப்ட் ப்ரஸ் செய்து எழுதும்படி
இருக்கிரது. இந்த முறை பழகி விட்டது ஆயுத எழுத்துக்கு என்னிடம் வர யோசிக்கிறதோ என்னவோ
ப்ளாகர் கமென்ட் போவதே இல்லை.அன்புடன்
சொல்லுகிறேன்.
9.
chollukireen | 11:19 முப இல் பிப்ரவரி 25, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் என் மருமகள் செய்தது இது. வேண்டாதவர்கள் பூண்டை நீக்கிவிட்டுச் செய்யுங்கள். அன்புடன்
10.
athiramiya | 8:54 பிப இல் பிப்ரவரி 25, 2021
நல்ல ஒரு ரெசிப்பி காமாட்சி அம்மா, கொஞ்சம் மினக்கெட்டுச் செய்யோணும், ஆனா செய்தால் சூப்பராகத்தான் இருக்கும்… மீள் பதிவு எனத் தெரிஞ்சுகொண்டேன்.
11.
chollukireen | 11:02 முப இல் பிப்ரவரி 26, 2021
என்னுடடைய பதிவுகள் மீள்பதிவுதான். ஆனால் உனககுப் புதியதுதான். முன்பெல்லாம் என்னைத் தெரியாது உங்களுக்கு.. வரவுக்கு மிகவும் மகிழ்ச்சி. செய்து பார்த்து கமென்ட் கொடுக்கவும். அன்புடன்
12.
chollukireen | 11:10 முப இல் பிப்ரவரி 26, 2021
நன்றி அதிரா.முன்பெல்லாம் என் பிளாகைப் பற்றியே தெரிந்திருக்காது. இப்போது தெரியும். வயதான அம்மா.பாவம் என்று. அன்புடன்
13.
ஸ்ரீராம். | 1:28 பிப இல் பிப்ரவரி 25, 2021
சுவையான குறிப்பு. ஆனால் சுரைக்காய் பக்கமே நாங்கள் போவதில்லை!
14.
chollukireen | 11:08 முப இல் பிப்ரவரி 26, 2021
மடியான காய் இல்லை.என்று சொல்வார்கள். எங்கள் வீட்டிலும் அப்படிதான்.அன்புடன்
15.
நெல்லைத்தமிழன் | 6:17 பிப இல் மார்ச் 1, 2021
படக்குறிப்புகளுடன் சுவையாக இருக்கிறது. படங்கள் அருமை.
ஆனாலும் நாங்கள் சுரைக்காய் உபயோகிப்பதில்லை. எனக்கு அதில் பாசிப்பருப்பு கூட்டு சாப்பிட ஆசை. அதனால் பஹ்ரைனில் வாங்கிவருவேன், ஆனால் மனைவி அதனைச் செய்யமாட்டார். இங்கு இந்தியா வந்தபிறகு வாங்குவதில்லை (ரொம்ப குளிர்ச்சி என்பார்கள்)
16.
chollukireen | 1:22 பிப இல் மார்ச் 1, 2021
உங்களை காணோமே என்று பார்த்தேன் இன்று என் கணினி வேலை செய்யவில்லை நாளைக்கு மறுபதிவு செய்ய முடியாது என்று நினைக்கிறேன் உட்கார்ந்த இடத்தில் இது அது என்று ஆர்டர் கொடுக்க யோசனையாக இருக்கிறது சுரைக்காய் மட்டும் இல்லை வேறு சில பண்டங்களும் சேர்மானம் இல்லாத வகைகள் உண்டு மக்காசோளம் நுரை பீர்க்கங்காய் மரவள்ளிக்கிழங்கு முள்ளங்கி கேரட் முதலானவைகள் இன்னும் சில வகைகளும் எழுதும்போது ஞாபகம் வரவில்லை இப்போது வட இந்திய வகைகள் வழக்கமாக சேர்க்கப்பட்டு விடுகிறது ஏன் தக்காளி கூட ஆரம்ப காலத்தில் சேர்த்துக்கொள்ள மிகவும் யோசித்தனர் வாட்டர் மெலன் கூட நாங்கள் சாப்பிட்டதில்லை எப்படி ஏதோ கதை நான் கைபேசியில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி அன்புடன்