அவல்ப் பாயஸம்.
ஜனவரி 5, 2012 at 12:01 பிப 6 பின்னூட்டங்கள்
புது வருஷ ஆரம்பத்தில் ஏதாவது பாயஸத்தோட சமையல்
குறிப்புகளைத் தொடருவோம் என்று தோன்றியது.
நினைத்தால் எழுதிடலாம். திடீரெனப் பண்ணியதையே
எழுதலாமென எழுதுகிறேன்.
டிஸம்பர் 8 ஆம் தேதி காட்மாண்டு stஜேவியர்ஸ் காலேஜ்
பிரிஸ்பல் , ஃபாதர் பாம்பே வருகிறார். அப்பாவைப் பார்க்க
நேராக ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கே வருவார் என மத்யானம்
ஒரு மணிக்கு பெறிய பிள்ளையின் போன் வருகிரது.
4 மணிக்கு அவர் வருகிறார். நாட்டுப் பெண் ஊரிலில்லை.
சட்டுனு ஒரு சட்னியை அரைத்து, உருளைக்கிழங்கு கறி செய்து
மஸால் தோசைக்கு ரெடி. ஸாம்பார் ஆல் ரெடியாயிருக்கு.
ஒரு பாயஸம் அதான் அவில்ப் பாயஸம் வைத்தேன்.
அவர் ஒரு தமிழ்ப் ஃபாதர் .ஃபாதர் அந்தோனிஸாமி.
ரஸித்து சாப்பிட்டுவிட்டு ,சொல்லுகிறேனைப் பாராட்டிவிட்டும்
போனார். எதற்கு சொல்கிறேனென்றால் வயதானவர்களுக்கு
ப்ளான் சற்று முதலில் போட்டால் நிறையவே செய்யலாம்.
அதுஸரி. விஷயத்துக்கு வருவோம்.
பாயஸத்துக்கு வேண்டியவைகள்.
ஒரு பிடிச்ச பிடி அவல்
ஒரு 2 கப் பால்
ஒரு துளி நெய்
அரைகப்புக்கு சர்க்கரை
துளி ஏலக்காய்ப்பொடி
வகைக்கு 5,6 முந்திரி பாதாம் அப்படியே மிக்ஸியில் பொடித்தது.
செய்முறை
பட்டும் படாமலும் நெய்விட்டுப் பிசறி அவலை ஒரு நிமிஷம்
மைக்ரோவேவில் அதன் பாத்திரத்தில் வைத்து எடுத்தேன்.
பாலைக் காய்ச்சி எடுத்து பாதியை எடுத்து வைத்துவிட்டு
அதில் அவலை மிதமான தீயில் வேக வைத்தேன்.
பாதாம் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கிளறி சக்கரையைச்
சேர்த்து சற்றுக் கிளறி பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டு
இறக்கி ஏலப்பொடி சேர்த்தேன். அவ்வளவுதான்.
அப்படியே வாணலியோடு ஒரு போட்டோவும்.
அவசரக்காரியம் தானே?
வெண்ணெய் போட்ட தோசையும். அவல் பாயஸமும்
தமிழ்ப் பேச்சும் ரொம்ப நாளாச்சு. வீட்டுக்கு போனால்தான்
கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஃபாதர் எனக்கு
நன்றி சொன்னார். அவருக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கும் ஞாபகம் வந்தது. எழுதினேன் அவ்வளவுதான்.
என் பெறிய பிள்ளை காட்மாண்டு ஸென்ட் ஜேவியர்ஸ்ஸில்
தான் வேலை செய்கிறார்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 5:42 பிப இல் ஜனவரி 5, 2012
மசாலா தோசை-சட்னி-சாம்பார்-அவல்ப்பாயசம்..ம்ம்ம்ம்ம்! 😛 😛
கலக்கிட்டீங்க போங்க! 🙂
சூப்பரா இருக்குது பாயசம்! சொல்லாமக் கொள்ளாம திடீர் விசிட்டே குடுக்கலாம் உங்களைப் பார்க்க! 😉
2.
chollukireen | 6:20 பிப இல் ஜனவரி 5, 2012
எனக்கு யாராவது வந்தால் கட்டாயம் ஏதாவது செய்து கொடுத்தே ஆகவேண்டும். மனுஷாளைப் பார்த்தவுடன் எதைப்போட்டு எதைச் செய்யலாம் என்று தன்னிச்சையாக ஏதாவது தோன்றும். சோம்பல் கிடையாது. சற்று நிதானம். மளமள என்று ஏதாவது உருவாகிவிடும். சாப்பிடத் தக்கபடிதான். வாவா. என்ன வேண்டுமோ செய்கிறேன். இந்த சுபாவம் இதுவரை நடந்துகொண்டு இருக்கு. சுடச்சுட கமென்ட். நன்றி மகி.
3.
chitrasundar5 | 2:11 முப இல் ஜனவரி 6, 2012
காமாட்சி அம்மா,
உங்கள் மகன் நேபாளில் இருக்காங்களா! நீங்களும் அங்குதானே இருந்தீங்க?முடிந்தால் அங்கும் போய் வருவீங்களா?
மைக்ரோஅவன் பாயஸம் நன்றாக உள்ளது.எத்தனை வருட அநுபவம்!சுவைக்கு கேட்க வேண்டுமா!இன்னும் நிறைய எழுதுங்கள்..
நான் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து,அடுப்பில் செய்வேன்.மற்றபடி நீங்கள் சேர்த்துள்ள பொருள்களைத்தான் நானும் சேர்ப்பேன்.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 2:39 பிப இல் ஜனவரி 7, 2012
ஆமாம் அம்மா. காட்மாண்டுவில் இருக்கிறார்கள். ஸிட்டிஸனும்
வாங்கி ஸொந்த வீடு வாசல் என இருக்கிறார்கள். கோடை காலத்தில் இங்கு வந்தால் போவதுண்டு. நாங்கள் பின்னிப் பிணைந்து இருந்த ஊர். நன்மைகளைக் கொடுத்த பசுபதி க்ஷேத்திரம்.மனதினாலேயே தினமும் வலம் வரும் ஊர். உன்னுடைய அன்பிற்கும், கமென்ட்டிற்கும் நன்றி. திரும்பவும்
பார்க்கலாம்.அன்புடன்
5.
petunia | 9:09 பிப இல் நவம்பர் 17, 2013
Dear patti, Naan inda payasam ide seimurayil panninen. Nandraga vandadu. Thank you for writing this.
6.
chollukireen | 7:59 முப இல் நவம்பர் 18, 2013
இம்மாதிரி பின்னூட்டங்களைத்தான் சொல்லுகிறேன் எதிர்பார்க்கிரது. பாயஸம் பாயஸமாக இருந்தது. ஆயாஸமில்லை. செய்தது பிரமாதமில்லை. சொல்லியதுதான்
நல்ல முறை. ஸந்தோஷம் பெண்ணே. அன்புடன்