கீரை வடை
ஜனவரி 9, 2012 at 7:29 முப 4 பின்னூட்டங்கள்
இது உளுத்தம் பருப்பு வடைதான். இந்த மருமகள் செய்த மாதிரியைப்
படம் பிடித்தேன். ஸரி, பொங்கல் வருகிறது. அரைக்கும் மாவில் இது
மாதிரியும் ஒரு நான்கு செய்து பார்க்கலாமே நீங்களும் என்று
தோன்றியது. ஷேப் முன்னே பின்னே இருந்தாலும் வடை ருசிதானே
முக்கியம். கரகரப்பாக நன்றாகவே இருந்தது வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு-தோல் நீக்கிய வெள்ளை உளுத்தம்பருப்பு-1கப்
முழு உளுந்து ஆனால் மிகவும் நல்லது. தோல் நீக்கியதைத்தான் .
பாலக் கீரை—-மெல்லியதாக அலம்பி நறுக்கியது 1 கப்பிற்கு அதிகம்.
பச்சையோ சிகப்போ 4 மிளகாய்கள்
துளி இஞ்சி
ருசிக்கு உப்பு
வடை தட்டி எடுக்க வேண்டிய எண்ணெய்
துளி பெருங்காயப் பொடியும். சில கறிவேப்பிலையும்.
செய்முறை
பருப்பை ஊற வைத்து வடிக்கட்டி மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து தயாராக நறுக்கிய
பொடிப்பொடியான வடிக்கட்டிய கீரை, பெருங்காயப்பொடி,உப்பு,
கறிவேப்பிலையை சேர்த்துக் கலந்து துளி ஜலத்தைத் தெளித்து
காயும் எண்ணெயில் வடைகளைப் போட்டு கரகரவென்று
வேகவைத்துஎடுத்து பச்சைப் பசேல் என்று வடை தயார்.
அரைத்த பருப்பு கெட்டியாக இருந்தால்தான் ஜலம்
தெளிக்க வேண்டும். இஞ்சியைப் போட்டே அரைக்கலாம்.
பண்டிகை நாட்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை.
அதையும் சேர்த்து ஜமாய்க்கலாம்.
இளசான எந்தக் கீரையையும் போடலாம்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 7:20 பிப இல் ஜனவரி 10, 2012
காமாட்சி அம்மா,
என்னதிது.இரண்டு பேர் ப்ளாக்கிலும் பாயசம்,வடை என ஒரே மாதிரி சமையலாக உள்ளது!
நான் பாலக்கீரை சேர்த்து செய்ததில்லை.மற்ற கீரைகளில் செய்திருக்கிறேன். அடுத்த முறை செய்யும்போது இப்படியும் இரண்டு வடை செய்திட வேண்டியதுதான். பாலக் உளுந்து வடை நன்றாக இருக்கிறது..
2.
chollukireen | 10:56 முப இல் ஜனவரி 12, 2012
நல்லதே ஆச்சு. வடையும் பாயஸமும் 2 தினுஸா படிப்பதுடன் என்ன இவர்கள் ஒரேமதிரி தலைப்பு போடுகிறார்கள் என்று இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் ஞாபகமும் கொள்வார்கள். நாமெல்லாம் தமிழர்களாயிற்றே. இப்படிதான் தேர்ந்தெடுப்போம்.. நாளை, மறு நாள் எல்லாம் பண்டிகை ஆயிற்றே.உங்கள் யாவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை அட்வான்ஸாகச் சொல்லி ஆசிகளையும் தெறிவிக்கிறேன். பொங்கலோ பொங்கல்.
3.
Mahi | 1:26 முப இல் ஜனவரி 11, 2012
Nice vada! Looks crisp n yumm! 😛
Chitra madam,spinach will give nice taste to vadai..try it once,u’ll love it! 🙂
4.
chollukireen | 11:13 முப இல் ஜனவரி 12, 2012
ஸந்தோஷம் பல மடங்குகள். பாலக்கீரை எதில் சேர்த்தாலும் நன்றாக சேர்ந்து கொண்டு தனிப்பட்ட ருசியைக் கொடுக்கிறது. உன் அபிப்ராயம் கரெக்ட்..
உங்கள் யாவருக்கும் எஙகளுடைய பொங்கல்
நன்நாளின் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெறிவித்துக் கொள்கிறேன். பொங்கலோ பொங்கல் சொல்லும்போது நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு
கொள்கிறேன். பொங்கலோ பொங்கல்.