டால்மஃக்னி. ராஜ்மா
ஜனவரி 30, 2012 at 11:17 முப 13 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8 .கீழிறக்கின ராஜ்மாக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
9 . க்ரீமும் சேர்க்கலாம்.
10 .ரொட்டி வகையராக்களுடனும், ஏன் சாத வகைகளுடனும்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
Entry filed under: டால் வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 4:55 முப இல் ஜனவரி 31, 2012
காமாட்சிம்மா, தால் மக்னி-னா என்னனு எனக்கு ஓரளவு(!) தெரியும்னு நினைச்சேன்,ஆனா இல்லை! 😉 😉
படத்திலே மஃக்னி-னு வெள்ளைகலரில் வைச்சிருக்கீங்களே,அது என்ன?? முதல்முறை பார்க்கிறேன். க்ரேவி சூப்பரா இருக்கு. 😛
2.
chollukireen | 5:56 பிப இல் பிப்ரவரி 2, 2012
மஃனி என்பது சோளப்பொரி போன்ற லேசான வெயிட்டில், ஓவல்,தட்டைபோன்ற சற்றுப் பெறிய சைஸில் சிறிய புள்ளிகளுடன்
வடஇந்தியாவில் பெறிய மளிகைக் கடைகளில் கிடைக்கிரது. நான்கூட இதன் சரித்திரத்தை ரொம்ப ஸரியா தெறிஞ்சு சொல்ல முடியலே. விவரம் கேட்டிருக்கேன். கல்கத்தா,காட்மாண்டு, டில்லிஎன உபயோகித்து, பாம்பே கிச்சனிலும் உபயோகிப்பதைப் பார்த்ததும் எழுதினேன். ஜெனிவா உட்பட. மக்னியா மஃனியா? ஜாஸ்தி வித்தியாஸமில்லை.
ஸூப்பில் போட்ட ரோஸ்டட் ப்ரட் துண்டங்கள் மாதிரி என்று
வைத்துக் கொள்ளலம். ருசி நன்றாகவே இருக்கிறது.
இதை நெய்யில் வறுத்து உலர்ந்த பழங்களுடன் சேர்த்தும் ஆரோக்கியமானது என்று நேபாலில் சாப்பிடுவார்கள்.நான் விவரம் தெறிந்து எழுதுகிறேன். பெண்ணே நன்றி.
3.
Mahi | 4:55 முப இல் ஜனவரி 31, 2012
அடடே, “ஃ” போட ஆரம்பிச்சுட்டீங்களே,எங்கருந்ததுன்னு கண்டுபுடிச்சிட்டீங்களா,கலக்கறீங்க போங்க!! சூப்பர்! 🙂
4.
chollukireen | 6:02 பிப இல் பிப்ரவரி 2, 2012
ஆமாம். உனக்கும் உடனே எழுதினேன். நிஜமா உன்னுடைய கமென்ட் ரொம்பவே ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஃ என்ற எழுத்தை கண்டுகொண்டேன் நான் கண்டுகொண்டேன். எவ்வளவு
ஸந்தோஷம் பார்.
5.
chitrasundar5 | 6:19 பிப இல் பிப்ரவரி 1, 2012
காமாட்சி அம்மா,
ராஜ்மா இல்லாமல் வேறு பயறு சேர்த்து செய்யலாம்தானே. அதை சேர்த்தாலே வீட்டில் சாப்பிடமாட்டார்கள்.அதன் கலரோ என்னவோ தெரியவில்லை.
எனக்கும் அதே மஃக்னி சந்தேகம்தான் அம்மா.ஏதோ ஒன்றை (சின்ன சோளம் மாதிரி இருக்கு) ட்ரை ரோஸ்ட் செஞ்சி சேர்த்திருக்கீங்க.
‘எறிச்ச கறி’ எழுதனும்னு சொல்லியிருந்தீங்க.அது என்னவாக இருக்கும் என்று ஆவல்.நேரம் கிடைக்கும்போது வந்து எழுதுங்க.
6.
chollukireen | 6:16 பிப இல் பிப்ரவரி 2, 2012
பயறு, காய்ந்தபீன்ஸ், பட்டாணி, மொச்சையென எல்லாவற்றிலும்
செய்யலாம். அநேகமாகப் பார்த்தால் முக்கால்வாசி வடஇந்திய செய்முறை வகைகளில் சேர்மானம் ஏறக்குறைய சற்று வித்தியாஸம். அவ்வளவுதான். மகிக்கு எழுதிய பதிலேதான் சித்ராவிற்கும். பெறியவகை ராஜ்மா சற்று வாஸனை வித்தியாஸம்.
நமக்கு துவரம்பருப்புதான் முதலிடம். உன்னுடைய கமென்ட் சுவையாக இருக்கிறது. சென்னை போய்த் தொடருகிறேன்.அன்புடன் சொல்லுகிறேன்
7.
chollukireen | 11:47 முப இல் ஜனவரி 15, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
2012 போட்ட பதிவு இது. டால் மக்னி செய்துதான் பாருங்கள். பதிவு ஸரியாகப் பதிவாகவில்லை. திரும்பவும் போஸ்ட் செய்த பிறகுதான் வந்தது என்று நினைக்கிறேன். பார்க்கலாம். அன்புடன்
8.
Geetha Sambasivam | 2:58 பிப இல் ஜனவரி 15, 2021
முன்னெல்லாம் நிறையச் செய்திருக்கேன். ஆனால் காஷ்மீரி மசாலாப் பொடி. சோம்புப் பவுடர், சுக்குப் பவுடர் எனப் போட்டு! தயிரெல்லாம் சேர்த்து! பாஸ்மதி அரிசியை ஜீரா ரைஸ், மடர் புலவ்னு ஏதேனும் பண்ணிட்டு இதையும் பண்ணுவேன். ஆனால் நீங்க சொல்லும் மஃக்னி எல்லாம் வறுத்துச் சேர்த்ததில்லை. சுவையாக இருக்கும்னு தோணுது. பகிர்வுக்கூ நன்றி.
9.
chollukireen | 11:30 முப இல் ஜனவரி 16, 2021
இந்த விதம் செய்வதற்கு முழு உளுந்துடன் செய்வதுமிகவும் பெயர் போனது. சிலபேருக்கு ராஜ்மா பிடிக்காது.இந்த சிறியவகை சற்று வேறுமாதிரியாக இருக்கும். எனக்கு நாட்டுப் பெண்களால்தான் மஸாலா சேரத்துச் செய்வதே அறிமுகமாயிற்று. இதிலும் அங்கங்கு சற்று வகைகள் வேறுபடுவதுண்டு. மொத்தத்தில் மற்றவர்கள் ரஸிக்கும்போது நாமும் அறிமுகம் செய் யலாமே என்பதுதான் என் எண்ணம். மஃக்னியைப் பற்றியும் விவரம் சேகரித்ததாக ஞாபகம். தாமரை விதைதான். உங்களுக்குப் பரவலாக எல்லா உணவுகளும் தெரிந்த விஷயங்கள். அதுவும் விசேஷம். உஙகள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
அன்புடன்
10.
சஹானா இணைய இதழ் | 9:23 முப இல் ஜனவரி 16, 2021
நல்ல recipe அம்மா, பகிர்ந்தமைக்கு நன்றிகள்
11.
chollukireen | 11:33 முப இல் ஜனவரி 16, 2021
சிவனே என்று உங்களுக்குக் கூடஅனுப்பித்திருக்கலாமோ? நன்றி அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 2:20 பிப இல் ஜனவரி 16, 2021
முதலில் மஃக்னினா என்ன..கருப்பு உளுந்தா என்று நினைத்தேன். அதனை செய்முறைல குறிப்பிடலையேன்னும் தோன்றியது. அப்புறம் படம் பார்த்து ஒருவேளை தோலில்லாத உளுந்தோ என்று தோன்றியது.
ராஜ்மா மஃக்னி சப்பாத்திக்கு நன்றாக இருக்கும். எனக்குமே வித விதமா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளணும்னு ஆசை. ஆனா பாருங்க..மனைவி என்ன என்னவோ செய்வாள். ஆனா அதைச் செய்துமுடிக்கும்போது இரவு 7-7 1/2 ஆயிடும். நானோ 6 மணிக்கு முன்னால் சாப்பாட்டை முடித்துடுவேன். அதுனால எனக்கு சப்பாத்தியும் வேறு எதாவதைத்தான் தொட்டுக்கொள்வேன் (அப்புறம் மனைவிட்ட எப்போதும் சொல்லிக் காண்பிப்பேன். பசங்களுக்கு வித விதமாச் செய்யற…ஆனா எனக்குத்தான் சாப்பிட வாய்ப்பில்லை என்பேன்).
13.
chollukireen | 11:55 முப இல் ஜனவரி 17, 2021
மஃக்னியைப்பற்றியும் விவரம் சேகரித்து வைத்திருக்கிறேன் அதையும் பதிப்பிக்கிறேன் இது ரொட்டியுடன் மிகவும் நன்றாக இருக்கும். ஏன் மத்தியானமே செய்தும் வைக்கலாமே.அவரவர்கள் ஸௌகரியம் என்று ஒன்று இருக்கிறது. ரொட்டி விரும்பாதவர்கள்கூட சாதத்துடன் சாப்பிடவும் செய்யலாம். விருப்பம் என்று ஒன்று உள்ளது. அது போகட்டும். இந்த மக்னிகூட பல விதங்களில் வட இந்தியாவில் உ பயோகப்படுத்தப் படுகிரது. பின்னூட்டததிற்கு மிகவும் நன்றி. அன்புடன்