உருளை வதக்கல்
பிப்ரவரி 7, 2012 at 8:45 முப 9 பின்னூட்டங்கள்
இதுவும் ஸாதாரண வதக்கல் தான். விசேஷமாக மாருதலில்லை.
5 ஸ்டார் ஹோட்டல் குறிப்பு இது சும்மா 4 பெறிய உருளைக் கிழங்கில்
கொஞ்சம் மாற்றி செய்தேன் நான். வறுப்பதற்குப் பதில் வதக்கினேன்
.அவ்வளவுதான். இதையும் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
உருளைக்கிழங்கு—சற்றுப் பெறிதாக 4
வெங்காயம்—பெறிசா 1
பூண்டு இதழ்—4
பச்சைமிளகாய்–1
இஞ்சிவிழுது—அரை டீஸ்பூன்
வெள்ளை எள்—அரை டீஸ்பூன்
கடுகு—கால் டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய், மஞ்சள், தனியாப் பொடி வகைகள்–வகைக்கு சிறிது
கறிவேப்பிலை—10 இலைகளுக்குமேல்.
ஒரு துண்டு எலுமிச்சை
செய்முறை.
கிழங்கை த் தண்ணீரில் வேகவைத்து உறித்துத் துண்டங்களாகச்
செய்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் கடுகு,எள்ளை வெடிக்கவிட்டு,நறுக்கிய
வெங்காயம்,பூண்டு மிளகாயை வதக்கி பொடிகளைச் சேர்த்து
இறக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உறித்த துண்டங்களைச்
உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
இறக்கிய வதக்கலில் முன்பாக வதக்கிய வெங்காயக் கலவையைச்
சேர்த்துக் கலந்து எலுமிச்சைச் சாறு கலந்து பாத்திரத்தில் மாற்றி
கரிவேப்பிலையை புதியதாக வறுத்துப்போட்டு டேபிளில் வைத்தால்
5 ஸ்டார் வதக்கல்தான்.
வேகவைத்த கிழங்கை எண்ணெயில் பொறித்து எடுப்பதற்குப்
பதிலாக நான் வதக்கி எடுத்து செய்திருக்கிறேன்.
அதுதான் வித்தியாஸம்.
Entry filed under: கறி வகைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 11:00 பிப இல் பிப்ரவரி 8, 2012
காமாக்ஷி அம்மா,
இன்றுதான் உங்க பெயரை சரியாக எழுதினேன் என நினைக்கிறேன்.உருளை வதக்கல் சூப்பராகவுள்ளது. அந்தப் பசுமையான கறிவேப்பிலையைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது.சமயங்களில் நானும் இவ்வாறு வேக வைத்து செய்வேன்.ஆனால் இஞ்சி சேர்த்ததில்லை .அடுத்த முறை செய்யும்போது இதேபோல் செய்கிறேன்.
அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 10:47 முப இல் பிப்ரவரி 11, 2012
காமாட்சி என்று எழுதினாலும், அம்மா போட்டு எழுதுவதால் வித்தியாஸம் எதுவுமே தெறியவில்லை.
கூழ் எழுதியதில் என் பெண்ணுக்காக செய்வதில்—அப்பாடா உன் குடும்பத்தைப் பற்றி சிறிய க்ளூ கிடைத்தது.. மிக்க ஸந்தோஷம். இந்த உருளைக் கிழங்குதான் எத்தனை விதமாக சமைத்தாலும் ஈடு கொடுக்கிறது. எதில் சேர்த்தாலும் உறவு நன்றாகக் கொண்டாடுகிறது. இஞ்சி உருளையுடன் சேர்த்தால்
உடம்பிற்கு மிகவும்நல்லது.அன்பிற்கு நன்றியம்மா.
3.
Mahi | 4:24 முப இல் பிப்ரவரி 9, 2012
நல்லா இருக்கு வதக்கல்..நான் இதனுடன் தக்காளியும் சேர்த்து செய்வேன், எள் சேர்த்ததில்லை..ஆகக்கூடி நான் வேறு மாதிரி வதக்கல்தான் செய்திருக்கேன், உங்க ரெசிப்பியை செய்து பார்த்து சொல்லறேன். 🙂 😉
4.
chollukireen | 10:30 முப இல் பிப்ரவரி 11, 2012
மகி ரொம்ப ஸந்தோஷமாக இருக்கு உன் கமென்ட். நானும் அப்படிதான். செய்யும்போதே ஸாமான்களைத் தினுஸு தினுஸாக மாற்றிப்போட்டு செய்வது வழக்கம். பெருஞ்சீரகப்பொடி, சீரகப்பொடி,இப்படி ஸமயத்துக்குத் தோன்றும்படி புளிப்பையும் வெவ்வேறு வகைகளில் சேர்க்கலாம். செய்துபாரு. சொல்வதற்கெல்லாம் டைம் ஏது?
5. உருளைக்கிழங்கு வறுவல்_2 « Chitrasundar's Blog | 11:24 பிப இல் பிப்ரவரி 27, 2012
[…] சேர்த்து செய்வதுண்டு.ஆனால் இப்போது காமாக்ஷி அம்மாவின் உருளைக்கிழங்கு வதக்கலைப் பார்த்து […]
6.
chollukireen | 7:22 முப இல் பிப்ரவரி 28, 2012
நன்றி சித்ரா. நானும் ரஸித்தேன்.
7.
chollukireen | 11:43 முப இல் ஒக்ரோபர் 3, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள். வழக்கம்போல இதுவும் மீள்பதிவுதான். சற்று மாற்றி செய்தது. கிழங்கை பொறிப்பதற்கு பதில் வதக்கி சேர்த்திருக்கிறேன். ருசியுங்கள். அன்புடன்
8.
Geetha Sambasivam | 2:19 பிப இல் ஒக்ரோபர் 3, 2022
Super receipe Amma. Thank you
9.
chollukireen | 12:47 பிப இல் ஒக்ரோபர் 3, 2022
உடனே பதில் போட்டதற்கு மிகவும் நன்றி ஆசிர்வாதங்கள் அன்புடன்